விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எழில் பட விழாவிற்கு ராதிகா வந்ததை பார்த்து ஈஸ்வரி, எதற்காக ராதிகாவை இங்கு வர வைத்தாய்? பிரச்சனை செய்ய வேண்டும் என்று இதையெல்லாம் செய்கிறாயா? என்று பாக்கியாவை திட்டிக் கொண்டிருந்தார். அப்போது ராதிகா, நான் எந்த பிரச்சனையும் செய்ய வரவில்லை. பாக்கியா சொன்னதால் தான் எழிலின் பட விழாவிற்கு வந்தேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் கிளம்பி விடுவேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி அமைதியாகி இருந்தார். பின் பட விழா முடிந்தவுடன் எல்லோருமே போட்டோ எடுதார்கள்.
அப்போது ராதிகாவை இனியா கூப்பிட்டார். ஆனால், அவர் வரவில்லை. இதை எல்லாம் பார்த்து கோபிக்கு சங்கடமாக இருந்தது. அதன் பின் இனியா, தன்னுடைய நண்பருடன் ரெஸ்டாரண்டில் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அவர்கள் இருவருமே காதலிப்பது போல தான் தெரிந்தது. இன்னொரு பக்கம் பாக்கியா, ராதிகா, செல்வி மூவருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மறு திருமணம் பற்றி செல்வி, ராதிகா-பாக்கியாவிடம் கேட்க, அவர்கள் கிண்டலாக பதில் அளித்தார்கள். பின் மூவருமே ரொம்ப சந்தோசமாக பேசி இருந்தார்கள்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் கோர்ட்டில் கோபி- ராதிகா வழக்கு நடந்தது. அப்போது ராதிகா தரப்பில், இனி சேர்ந்து வாழ விருப்பமில்லை. விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று சொன்னார். இதை கேட்டவுடன் கோபி ரொம்பவே மனமுடைந்து விட்டார். பின் கோபி இடம் விசாரிக்க, அவருமே சம்மதம் சொல்லி விட்டார். அதற்கு பின் ஜீவனாம்சம் பற்றி கோபி தரப்பு வக்கீல் பேசி இருந்தார். ஆனால், ராதிகா எந்த பணமும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். கடைசியில் நீதிபதி, இருவருக்குமே விவாகரத்தை கொடுத்து விட்டார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் ராதிகா- பாக்கியா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாக்கியா, நீங்கள் இந்த முடிவை எடுப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. இனி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு ராதிகா, எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நான் சமாளித்து வந்து விடுவேன். இனி நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை பாருங்கள் என்று சொன்னார். அதற்கு பின் ராதிகா, உங்கள் வீட்டிற்கு அழைத்து போக முடியமா? என்று கேட்க, கோபி-ராதிகா இருவரும் காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கோபி, நான் ரொம்ப அதிர்ஷ்டம் கெட்டவன் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, இதோடு நம் உறவு முடியும் என்று நான் நினைக்கவே இல்லை என்று ரொம்ப எமோஷனலாக கோபி பேசுகிறார். இதைக் கேட்டவுடன் ராதிகாவிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. உடனே ராதிகா, இதைப்பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடந்ததோ? என்று புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து கோபி-ராதிகா இருவரும் வீட்டிற்கு வந்தவுடன் இனியா- ஈஸ்வரி இருவருமே பயப்படுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது ராதிகா, எங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. உங்களை எல்லாம் பார்த்துவிட்டு போக தான் வந்தேன். பயப்பட வேண்டாம். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். எப்பவும் நான் உங்களை என் அம்மாவாக தான் பார்க்கிறேன் என்று பேசுகிறார். ராதிகா சொல்வதைக் கேட்டு ஈஸ்வரி கண்கலங்கி மன்னிப்பு கேட்டார். அதற்குப்பின் இனியா, மயூவிற்காக மேக்கப் கிட் கொடுக்கிறார். அதற்குப்பின் எல்லோருமே சேர்ந்து சாப்பிட கூப்பிடுகிறார் ராதிகா. கோபி, ஈஸ்வரிக்கு குற்ற உணர்ச்சியில் மனமில்லாமல்
இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.