இனியாவிற்கு திருமண ஏற்பாடு செய்த ஈஸ்வரி, அதிர்ச்சியில் பாக்கியா- அடுத்து என்ன? பாக்கியலட்சுமி

0
139
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா, தயவுசெய்து என்னால் இந்த வீட்டில் சண்டை வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள் என்று மண்டி போட்டு அழுதார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த செல்வியை பார்த்து ஈஸ்வரி ஆவேசமாக கத்தி இருந்தார். கோபி, செழியன் எல்லோருமே செல்வியை திட்டி இருந்தர்கள். அப்போது செல்வி, இங்கு நான் சண்டை போட வரவில்லை. யாரிடமும் எனக்கு பேச விருப்பமில்லை. என் மகனின் ஹாஸ்பிடல் செலவிற்காக என் நகையை வாங்க வந்திருக்கிறேன் என்றவுடன் பாக்கியா நகையை கொண்டு வந்து செல்வியிடம் கொடுத்தார். பின் செல்வி, எல்லோரும் என்னை போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்க சொன்னார்கள்.

-விளம்பரம்-

நான் கொடுத்திருந்தால் இனியா நிலைமையை யோசித்துப் பாருங்கள். நான் வளர்த்த பிள்ளை என்று தான் அமைதியாக இருக்கிறேன். பணம் காசு இல்லை என்றாலும் மரியாதையாக நான் வாழ்கிறேன் என்று சொன்னார். அதற்கு பின் கோபி, நீ செல்வியுடன் பேசாதே. உன்னுடைய கேரியரில் கவனம் செலுத்து, பிள்ளைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். கோபத்தில் பாக்கியா, பிள்ளைகளை எனக்கு பார்க்க தெரியும். நீங்கள் எப்போது இந்த வீட்டை விட்டு போவீர்கள்? என்று கேட்டதற்கு, என் மகள் வாழ்க்கையை செட்டில் செய்யறவரையும் நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று கோபி சொன்னார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

மேலும், நேற்று எபிசோட்டில் பாக்கியா, ஆகாஷை பார்ப்பதற்காக ஹாஸ்பிடல் சென்றிருந்தார். அங்கு செல்வி, என் மகனின் நிலைமையை பார்த்தீர்களா! என்று ரொம்ப எமோஷனலாக அழுது பேசி இருந்தார். பாக்கியாவும் செல்விக்கு ஆறுதல் சொல்லிவிட்டு ஹாஸ்பிடல் செலவை பார்த்துக் கொள்கிறாள். செல்வி வேண்டாம் என்றுமே பாக்கியா செய்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ஜெனி இடம் அமிர்தா, ஒருவரை அடிப்பது தவறு தானே, நீங்கள் எதற்கு ஆண்டியிடம் கோபப்பட்டீர்கள்? என்று கேட்டார். உடனே ஜெனி, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று பேச, இருவருக்கும் வாக்குவாதம் ஆனது.

நேற்று எபிசோட்:

அந்த சமயம் வந்த ஈஸ்வரி, அமிர்தாவை திட்டி விட்டார். உடனே பாக்கியா வந்தவுடன் எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம் என்று வழக்கம் போல வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரி. அதற்குப்பின் எழில், பாக்கியா பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த செழியன் இடம் எழில் நடந்ததை பற்றி பேசி இருந்தார் ஆனால், கோபப்பட்டு செழியன் எழிலிடம் சண்டைக்கு போனார். உடனே கோபி, எழிலையும் பாக்கியாவையும் திட்டி இருந்தார். அடுத்த நாள் காலையில் எல்லோரும் அவரவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, வீட்டிற்கு சொந்தக்காரர்கள் வருகிறார்கள். யாரும் எங்கும் போக வேண்டாம் என்று சொன்னார். பாக்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, இனியாவிற்கு திருமண ஏற்பாடு செய்கிறேன். மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரவைத்து இருக்கிறேன் என்று சொன்னவுடன் கோபி ஷாக் ஆகிறார். பின் கோபி, எதற்கு இந்த அவசர கல்யாணம் என்று கேட்டவுடன் ஈஸ்வரி, செல்விக்கு தான் பாக்கியா சப்போர்ட் செய்வார். அவள் ஆகாசை எப்படியாவது இனியாவிற்கு கல்யாணம் செய்து வைத்துவிடுவாள். அதற்குள் நாம் இனியாவிற்கு நல்ல வசதியான மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க விட வேண்டும் என்று சொன்னவுடன் கோபி ஒத்துக் கொள்கிறார். அதற்குப் பின் வீட்டில் உள்ள எல்லோரையும் ரெடியாகிக்கொண்டு ஈஸ்வரி வர சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் மாப்பிள்ளை வீட்டில் வந்து விடுகிறார்கள். ஈஸ்வரி, இனியாவை அறிமுகப்படுத்தி இவர் தான் கல்யாண பொண்ணு என்று சொன்னவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆகிறது. பாக்கியாவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. உடனே ஈஸ்வரி, நாளை நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம். கல்யாணம் படிப்பு முடிந்தவுடன் செய்யலாம் என்று சொன்னவுடன் மாப்பிள்ளை வீட்டிலும் ஒத்துக்கொள்கிறார்கள். பின் மாப்பிள்ளை சென்ற பிறகு பாக்கியா, என்ன நடக்கிறது இங்கு? என் மகளுக்கு எதற்கு கல்யாணம்? என்று ஆவேசப்பட்டு கேட்கிறார். எழில் – செழியன் இருவருமே இனியாவிற்கு சப்போர்ட் செய்கிறார்கள். ஆனால், ஈஸ்வரி யார் சொல்வதையும் கேட்கவில்லை. இனியாவால் எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement