விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, இனிமேல் நான் யாருக்கும் தொந்தரவாக இருக்க மாட்டேன். என் பிள்ளைகளுடைய வாழ்க்கைக்காக தான் இருக்கிறேன். எங்கிருந்தாலும் என்னுடைய கவனம் உங்கள் மீதுதான் இருக்கும் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். ஈஸ்வரி, எவ்வளவு கேட்டுமே கோபி கேட்கவில்லை. உடனே ஈஸ்வரி, நானும் உன்னுடன் வருகிறேன் என்று தன் மகனிடம் புலம்பி இருந்தார். புது வீட்டுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் கோபி செய்தார். அப்போது பாக்கியா வீட்டிற்கு வந்த செல்வின் கணவர், தன் மகனை அடித்ததற்காக நியாயம் கேட்டு சண்டை போட்டார்.

ஈஸ்வரியும் கோபியும் அவரை மோசமாக திட்டி இருந்தார்கள். இருந்தாலுமே, அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் செல்வியின் கணவர் சண்டை போட்டார். உடனே எழில், அவரை ஏதோ சொல்லி அங்கிருந்து அழைத்து சென்று விட்டார். அதன் பிறகு பாக்கியா, செல்வியிடம் இதைப்பற்றி பேசி இருந்தார். செல்வி, அவர் வந்தது எனக்கு தெரியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இதை நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் யுபிஎஸ் எக்ஸாம் தேர்வு நடைபெறுகிறது என்று செய்தி வந்தவுடன் இனியா, ஆகாஷை நினைத்துப் பார்த்தார். பின் ஆகாசுக்கு வாழ்த்துக்கள் சொல்ல எழில் இடம் இனியா போன் கேட்டார். ஆனால், எழில் முடியாது என்று மறுத்தார். அதற்குப்பின் எழில், இனியாவை அழைத்துக் கொண்டு ஆகாஷ் வீட்டுக்கு சென்றார். அப்போது ஆகாசிடம் எழில், உனக்கு வாழ்த்துக்கள் சொல்ல வந்தோம் என்று சொன்னார். பின் இனியா- ஆகாஷ் இருவரும் பார்த்துக்கொண்டவுடன் எமோஷனலாக கண்கலங்கி இருந்தார்கள். இருந்தாலுமே பாக்கியாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:
பின் இனியா, ஆகாசுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார். அந்த சமயம் பார்த்து வந்த ஆகாஷின் அப்பா, இனியா-எழிலை திட்டி இருந்தார். உடனே ஆகாஷ், தன் அப்பாவை தடுத்து நிறுத்தி அவர்களை அனுப்பி விட்டார். அதற்கு பின் நான் இதைப் பற்றி எல்லாம் பாக்கியாவிடம் எழில்-இனியா இருவரும் சொல்லி விடுவதால் பாக்யாவும் கோவப்படாமல் சரி என்றார். இன்னொரு பக்கம் செல்வியின் கணவர், இனிமேல் உங்கள் மகள் எங்கள் வீட்டிற்கு வந்தால் நடப்பதே வேறு என்று மிரட்டி விட்டு சென்றார். இதனால் ஈஸ்வரி-கோபி இருவருமே கோபப்பட்டார்கள். கடைசியில் எழில்-இனியா-பாக்கியா மூவரும் வீட்டிற்கு வந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, இனியா எதற்காக ஆகாஷை பார்க்க போனாள்? செல்வியின் கணவன் ரொம்ப மோசமாக சண்டை போட்டு போறான் என்று தாண்டவம் ஆடுகிறார். பாக்கியா எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். உடனே எழில், நான் தான் இனியாவை அழைத்துக் கொண்டு போனேன். ஆகாஷ்க்கு தேர்வு நடப்பதால் வாழ்த்துக்கள் சொல்ல போனால் என்று சொன்னவுடன் கோபி- ஈஸ்வரி இருவருமே கோபப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் பாக்கியா, இதில் எந்த தவறும் இல்லை. நீங்கள் தேவை இல்லாமல் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் ஈஸ்வரி, நான் இந்த வீட்டிலேயே இல்லை. என் மகனுடன் கிளம்புகிறேன் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா, தாராளமாக கிளம்புங்கள். போகும்போது மாத்திரை எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொன்னவுடன் ஈஸ்வரிக்கு ஒரே ஷாக். கோபி-ஈஸ்வரி இருவருமே வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்கள். இனியாவுமே தன் தந்தையை தடுக்கவே இல்லை. சில மாதங்களுக்கு பிறகு இனியாவிற்கு ரிப்போர்ட்டர் வேலை கிடைக்கிறது. பின் இந்த விஷயத்தை தன்னுடைய அப்பா, பாட்டியிடம் சொல்ல இனியா வீட்டிற்கு போகிறார். கோபி ரொம்ப சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






