கோபியிடம் ஈஸ்வரி போட்ட கண்டிஷன், ராதிகா நிலைமை என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
53
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் செயலால் மனம் உடைந்த ராதிகா,
வீட்டை காலி செய்ய முடிவு எடுத்தார். அவருடைய அம்மா தடுத்தும் கேட்கவில்லை. பின் இனியா டான்ஸ் காம்பெடிஷனில் பாக்கியா குடும்பம் கலந்து கொண்டு இருந்தது. இனியா சூப்பராக நடனமாடி இருந்தார். பின் முதல் ஃபைனலிஸ்டாக இனியா தேர்வாகியிருந்தார். அப்போது அவர் மேடையில் தன்னுடைய அம்மா, அப்பா இருவரையும் அழைத்துக் கொண்டு போய் பேசி இருந்தார். இதையெல்லாம் டிவியில் பார்த்த ராதிகா வருத்தப்பட்டு இருந்தார். பின் ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா, மயூவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, பரிசு கொடுத்தார்.

-விளம்பரம்-

அப்போது ராதிகா, இனியா கல்லூரி விழா மேடையில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்தேன் என்று சொன்னார். அதற்கு பாக்கியா, இனியாவின் அப்பாவாகவும், அம்மாவாகவும் தான் அங்கு இருந்தோம். மற்றபடி வேறு எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்பினார். அதற்குப் பின் கோபி, எல்லோருக்குமே ஹோட்டலில் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வந்து தந்தார். ஆனால், பாக்யா அதை வாங்கிக்கொள்ளவில்லை. பின் மயூ பர்த்டேவிற்கு கிளம்பிய கோபியை, ஈஸ்வரி- இனியா எல்லோருமே போகவிடாமல் தடுத்தார்கள்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

மேலும் மயூவிற்காக பரிசு வாங்குவதை பற்றி கோபி தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, நாம குலதெய்வ கோவிலுக்கு போகணும். அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று வேண்டுமென்று ஈஸ்வரி சொன்னார். கோபியால் எதுவும் பேச முடியவில்லை. பின் வீட்டில் எல்லோரிடமும் கோவிலுக்கு போவதை பற்றி ஈஸ்வரி சொல்ல, பாக்கியா முடியாது என்று மறுத்து விட்டார். கடைசியில் செழியன், இனியா, ஈஸ்வரி,கோபி தான் கோயிலுக்கு போனார்கள். இன்னொரு பக்கம் கோபி வருவார் என்ற ஆசையில் ராதிகா, மயூ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் கோபி தன்னுடைய குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் விஷயத்தை அறிந்த மையூ பாட்டி, ராதிகாவிடம் சொன்னார். இதனால் கோபப்பட்ட ராதிகா வீட்டை காலி செய்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த பாக்கியா, ராதிகாவிடம் தனியாக பேச அழைத்தார். பாக்கியா- ராதிகா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராதிகா, நான் தேர்ந்தெடுத்த ரெண்டு வாழ்க்கையுமே தவறாக முடிந்தது என்று ரொம்ப எமோஷனலாக பேச, இன்னொரு முறை யோசித்துப் பாருங்கள் என்று பாக்கியா சொல்லியுமே அவர் கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய அம்மா, பிள்ளைகளுடன் சந்தோஷமாக கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, தன்னுடைய குடும்பத்துடன் ரொம்ப சந்தோசமாக இருக்கிறார். இதை போட்டோ எடுத்து இனியா சோசியல் மீடியாவில் போட்டு விடுகிறார். இதை செல்வி பார்த்து பாக்கியா இடம் சொன்னார். அதற்கு அவர், யார் மீதும் அவருக்கு அக்கறை இல்லை.
தன்னை நம்பி வந்தவரையும் ஏமாற்றுகிறார் என்று புலம்புகிறார். இன்னொரு பக்கம் ராதிகா பேக் பண்ணுவதற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே அவர், தன்னுடைய மொபைலில் இனியா வைத்த ஸ்டேட்டஸை காண்பிக்கிறார். அதற்கு அவர் அம்மா, என்ன மனுஷன் இவன்? கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? என்று திட்டுகிறார். மறுநாள் ஈஸ்வரி, கோபி, செழியன், இனியா எல்லோருமே கோயிலுக்கு போயிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, நீ எங்களை விட்டு எங்கேயுமே போகக்கூடாது. சத்தியம் செய் என்கிறார். கோபியும் சத்தியம் செய்து விடுகிறார். இன்னொரு பக்கம் பாக்கியா-ஜெனி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியா எடுத்த புகைப்படத்தை பார்த்து பாக்கியா முகம் மாறுகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement