விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி பேச்சை மீறி ராதிகாவை பார்க்க கோபி சென்று விட்டார். இதனால் கோபப்பட்ட ஈஸ்வரி, ராதிகாவை திட்டிக்கொண்டு இருந்தார். இதையெல்லாம் கேட்ட பாக்கியா கோபத்தில் பொங்கி எழுந்து ஈஸ்வரிடம் சண்டை போட்டார். இருவருக்குமே வாக்குவாதம் அதிகமாகி இருந்தது. ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் ராதிகா வீட்டிற்கு சென்ற கோபி, இந்த முடிவை எதற்காக எடுத்தாய்? என்று கேட்க, இனி நீங்கள் என் வாழ்க்கையில் இல்லை. என்னையும் மயூவையும் பார்க்க வராதீர்கள். இது என்றுமே நிரந்தரம் தான்.

உங்களால் எங்களுடைய வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்றெல்லாம் ராதிகா சொல்ல, கோபி ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் அவர் வேதனையில் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு சென்றார். பாரில் தன் நண்பர் செந்திலுடன் சேர்ந்து குடிக்கிறார். அவர் எவ்வளவு சொல்லியும் கோபி கேட்கவில்லை. இன்னொரு பக்கம் ராதிகா அம்மா, அட்வைஸ் செய்கிறார். ஆனால், ராதிகா கேட்கவில்லை. நேற்றுஎபிசோட்டில் கோபி, ராதிகா சொன்ன வார்த்தையை நினைத்து புலம்பி நிலை தெரியாத அளவிற்கு குடித்தார்.
பாக்கியலட்சுமி:
இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி வீட்டிற்கு வராதது நினைத்து வீட்டில் கவலைப்பட்டு கொண்டிருந்தார். பின் அவர், நல்லவள் மாதிரி பேசி என் மகனின் மனதை கெடுத்து விட்டு போயிட்டாள் என்றெல்லாம் ராதிகாவை திட்டிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்ட ஜெனிக்கு கோபம் வந்து ஈஸ்வரிடம் வாக்குவாதம் செய்தார். உடனே செழியன், ஜெனியை திட்டி அனுப்பி விட்டார். அதன் பிறகு நிலை தெரியாத அளவிற்கு குடித்துவிட்டு கோபி வீட்டிற்கு வந்தார்.

நேற்று எபிசோட்:
அவரை பார்த்தவுடன் ஈஸ்வரி ரொம்பவே வருத்தப்பட்டார். அப்போது கோபி, போதையில் பாக்கியா- ராதிகா இருவரையும் பற்றி உளறிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்ட பாக்கியாவுக்கு கஷ்டமாக இருந்தது. இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபியின் நிலையை நினைத்து தன் கணவரிடம் புலம்பி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பாக்கியா, ராதிகாவின் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு ராதிகாவின் அம்மா, தன் மகள் வாழ்க்கையை பற்றி வருத்தமாக பாக்யாவிடம் பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, ராதிகாவிடம் பேசுகிறார். அப்போது பாக்கியா, என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்? ஏன் இப்படி செய்கிறீர்கள்? உங்களை நினைத்தால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். உடனே ராதிகா, நீங்கள் தனியாக வாழும்போது நான் வாழ மாட்டேனா? கோபி அவருடைய குடும்பத்தில் இருந்தால் தான் சந்தோசமாக இருக்கிறார். நான் சரியாக தான் செய்து இருக்கிறேன் என்று சொல்லி இருவரும் பேசுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
பின் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்துவிட்டு வருகிறார். இன்னொரு பக்கம் கோபி, போதை தெளிந்து தன் அம்மாவிடம் பேசுகிறார். அப்போது ஈஸ்வரி, போனவளை நினைத்து எங்களை கஷ்டப்பட வைக்காதே. இந்த இரண்டு வருட வாழ்க்கையை மறந்து விட்டு எங்களுடன் சந்தோஷமாக இரு. உன் பிள்ளைகளை பார் என்றெல்லாம் பேசுகிறார். கோபி எதுவும் சொல்லாமல் ராதிகாவை நினைத்து அழுகிறார்.
பின் செல்வி, பாக்கியா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராதிகா வீட்டிற்கு பாக்கியா சென்றதை பற்றி கேட்க, பாக்கியாவும் ஏதோ சொல்லி சமாளித்தார். இத்துடன் தொடர் முடிகிறது






