கோபியுடன் வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு நபர், தனது வீட்டில் பார்த்ததும் அதிர்த்த ராதிகாவின் அம்மா – இனி தான் சூடு பிடிக்கப்போது

0
404
- Advertisement -

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.

-விளம்பரம்-

விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பிசியாக சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் செழியனின் உண்மை முகத்தை அறிந்து ஜெனி வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து கொடுத்தார். பின் செழியன் மனம் மாறி ஜெனி உடன் சேர்ந்து வாழ்கிறார். ஒருவழியாக ஜெனி-செழியன், அமிர்தா-எழில் வாழ்க்கையில் வந்த பிரச்சனைகள் முடிகிறது. பின் பாக்கியா ரெஸ்டாரண்ட் திறக்கிறார். பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறக்கிறார். மேலும், கடந்த வாரம் எபிசோடில் பழனிசாமிக்கு பாக்யா மீது காதல் ஏற்படுகிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

இன்னொரு பக்கம் ராதிகா கர்ப்பமாக இருப்பதாக புதிய ட்ராக்கை ஆரம்பித்து இருக்கின்றனர். கோபிக்கு பேரன், பேத்தி இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் தந்தையாகி இருக்கிறார் கோபி. அதுவும் இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள போகிறோம் என்ற கூச்சம் இல்லாமல் ராதிகா கர்ப்பமாக இருப்பதை சொன்னதும் அவரை தூக்கி கொண்டாடி இருந்தார் கோபி. ராதிகா கர்ப்பமாக இருப்பதை வீட்டில் சொல்ல கோபி தயங்குகிறார். ஆனால், இந்த உண்மையை பாக்யா கண்டுபிடித்து ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். மேலும், வீட்டில் எல்லோரிடம் இந்த உண்மையை சொல்லியே தீர வேண்டும் என்று ராதிகா சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

ஒரு வழியாக கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரி இடம் சொல்லி விடுகிறார். அவர் குழந்தையை கலைத்துவிடு என்று ராதிகாவிடம் சொல்ல ராதிகா கோபப்பட்டு, இதை சொல்ல நீங்கள் யார்? இது என்னுடைய விருப்பம் என்று ஈஸ்வரியை எதிர்த்து பேசுகிறார். பின் ராதிகா,கோபி வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து உண்மை சொல்ல பார்க்கிறார்கள். ஆனால், கோபி சொல்ல முடியாமல் திணறுகிறார். எல்லோருமே எந்த விஷயம் என்று கேட்கிறார்கள். உடனே பாக்யா, உங்கள் அப்பா மீண்டும் அப்பாவாக போகிறார் என்று சொன்னதை கேட்டு எல்லோருமே அதிர்ச்சி ஆகிறார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

செழியன்- எழில் இருவருமே சேர்ந்து எப்போது நீங்கள் இந்த வீட்டை விட்டு வெளியே போகிறீர்கள்? என்று கோபியிடம் கேட்கிறார்கள். அதற்கு கோபி, நான் எதற்கு போகணும்? இந்த வீடு நான் கட்டியது என்று சொல்கிறார். உடனே பாக்யா, இந்த வீடு என்னுடையது. ஒழுங்காக வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கோபி, பாக்கியாவிடம் திமிராக பேசுகிறார். பின் செழியன்-எழில் இருவருமே அவருடைய அம்மாவிற்கு ஆதரவாக நிற்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி, ஒழுங்கு மரியாதையாக உன் பிள்ளைகள் அடிப்பதற்கு முன்பு வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இதைக் கேட்டு கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார். பின் கோபி, ஈஸ்வரியிடம் ஏதேதோ பேசி அவரை சமாதானப்படுத்தி விடுகிறார். அதற்குப் பின் ஈஸ்வரியும் தன்னோடு அழைத்து செல்ல கோபி முடிவெடுக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், கோபி-ராதிகா வீட்டை விட்டு வெளியே போகிறார்கள். அப்போது ஈஸ்வரியை தன்னோடு அழைத்து போகிறார் கோபி. இதை பார்த்து பாக்கியா எதுவுமே பேசவில்லை. பின் ஈஸ்வரி, என் மகன் இருக்கும் இடத்தில் தான் நான் இருப்பேன். நான் வெளியே போகணும் என்று தான் நீ எதிர்பார்க்கிறாய் என்று பாக்கியாவை பார்த்து சொல்லிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் ராதிகா வீட்டில் ஈஸ்வரி வருவதை பார்த்து அவருடைய அம்மா அதிர்ச்சியில் நிற்கிறார். இனிவரும் நாட்களில் ஈஸ்வரி, ராதிகா வீட்டில் தாக்கு பிடிப்பாரா? ராதிகா அம்மா ஈஸ்வரியை வீட்டிற்குள் சேர்த்துக் கொள்வாரா? பாக்கியா என்ன செய்யப் போகிறார்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement