வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் பாக்கியா, எழில் எடுத்த அதிரடி முடிவு- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
335
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா, பொய் சொல்லி பார்ட்டிக்கு சென்று இருந்ததால் மிக பெரிய கலவரம் நடந்தது. கடைசியில் பாக்யா கல்லூரி முதல்வரிடம் பேசி இனியாவின் பிரச்சனையை எப்படியோ முடித்து வைத்தார். கடந்த வாரம், இனியா நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு, இறந்து போக முடிவு எடுத்து கடிதம் எழுதி இருந்தார். அதை பார்த்து அதிர்ச்சியான பாக்கியா, இனியாவை திட்டி அறிவுரை சொல்லி இருந்தார். அதற்கு பின் இனியா தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம், கோபி- ராதிகா இடையே சண்டை நடந்தது. கோபத்தில் ராதிகா, எதற்கு தான் உங்களை திருமணம் செய்து கொண்டேனோ? என புலம்ப, உடனே கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது என சொல்ல, விவாகரத்து கொடுத்து விட்டு நிம்மதியாக உன் குடும்பத்துடனே போய் சேருங்கள் என்று ராதிகா சொன்னார். அதன் பின் எழில், மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி சென்றிருந்தார். ஆனால், எங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் செழியன், தனக்கு புதிய ஆர்டர் கிடைத்தது என்று சொல்லி சந்தோஷப்பட்டு தன்னுடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

அந்த சமயம் பார்த்து எழில் வீட்டுக்கு வந்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி, மோசமாக திட்டி இருந்தார். எழில் எதுவும் பேசாமல் அழுது கொண்டே சென்று விட்டார். பாட்டி சொன்னது நினைத்து மாடியில் கண்கலங்கி அழுத எழிலுக்கு, அமிர்தா மற்றும் பாக்கியா ஆறுதலாக பேசி இருந்தார்கள். அடுத்த நாள் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்படுகிறார்கள். நேற்று எபிசோடில், அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என்று இந்த முறை மோசமாக திட்டி இருந்தார். இதனால் அமிர்தா மனமுடைந்து அழுது எழில் இடம் சொல்லி இருந்தார்.

சீரியல் கதை:

இதனால் சோகத்தில் அமிர்தாவின் முகம் மாறி இருப்பதை கண்டு என்ன நடந்தது? என்று எழில் கேட்க, அமிர்தாவும் வீட்டில் நடந்தது எல்லாத்தையும் சொல்லி விடுவார். இதனால் வீட்டிற்கு வந்த எழில், தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் கோபப்பட்டு பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி, உன் பொண்டாட்டி பத்த வைத்து விட்டாளா? என்று பேச, நீங்கள் எதற்காக அவளிடம் குழந்தை பற்றி கேட்டீர்கள்? என்று சொல்ல இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் ஈஸ்வரி, உன்னோட பெரியவன் சம்பாதிக்கிறான், இரண்டு குழந்தைக்கு அப்பா ஆகிவிட்டான். நீ என்ன செய்கிறாய்? நான் இப்படிதான் பேசுவேன்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

நிலாவிற்கு மூணு வேளை சாப்பாடு உங்களால் போட முடியுமா? என்று கேட்கிறார். உடனே பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொல்கிறார். இதைக் கேட்டு எல்லோருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில், ஈஸ்வரி, இதற்கெல்லாம் காரணம் நீதான் என்று அமிர்தாவை திட்ட, பாக்யாவுக்கு கோபம் வந்து வீடு என்பது சந்தோஷமாக இருப்பதற்காகத்தான். இப்படி சண்டை போடுவதற்கு இல்ல. நீ வீட்டை விட்டுப் போ எழில் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

இன்றைய எபிசோட்:

அப்போது தாத்தா, ஈஸ்வரி பாட்டியை அழைத்து ரூமுக்கு சென்று விட்டார். இன்னொரு பக்கம் ரூமில் அமிர்தா- எழில் இருவரும் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமையல் அறையில் எல்லோரும் பாக்கியாவிடம் எழிலை தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், பாக்கியா முடியாது என்று மறுக்கிறார். கடைசியில் எழில் வீட்டை விட்டுப் போக தயாராக வந்து நிற்கிறார். இதை பார்த்து பாக்கியா மனம் உடைந்து எதுவும் பேசாமல் நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement