விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கடந்த வாரம் ரெஸ்டாரண்ட் சர்ச்சையால் பாக்கியா, நகைகளை எல்லாம் அடகு வைத்து பணத்தை ஏற்பாடு செய்தார். அதற்கு பிறகு தனக்கு தெரிந்தவர் மூலம் வட்டிக்கு பணம் ரெடி பண்ணார். ஆனால், அதற்குள் ரெஸ்டாரண்டில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து இருந்தார்கள். ஒரு வழியாக எல்லோருக்குமே பாக்கியா பணத்தை செட்டில்மெண்ட் செய்து விட்டார். இதை அறிந்த கோபி கோபப்பட்டு பாக்கியாவை அழிக்க நினைத்தார். அப்போது வந்த செழியன், வேலை பற்றி கோபியிடம் கேட்க, அவர் பொய்யான வாக்குறுதி கொடுத்து அனுப்பி இருந்தார்.

இன்னொரு பக்கம் இனியா கல்லூரியில் நடன பயிற்சி மும்முரமாக நடக்கிறது. டான்ஸ் மாஸ்டர் வேண்டும் என்று கல்லூரியில் சொல்வதால் இனியா வருத்தப்பட்டார். அதற்குப்பின் செழியன், எழிலை சந்தித்து தனக்கு வேலை போன விஷயத்தை சொல்லி அழுது புலம்பி இருந்தார். இதை பார்த்த கோபி, செழியனிடம் விசாரித்தார். இன்னொரு பக்கம் வீட்டில் இனியா, டான்ஸ் மாஸ்டர் வேண்டும். அவரை வைத்து தான் பயிற்சி எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சொன்னதாக பாக்யாவிடம் சொல்ல, அவர் ஒத்து கொள்ளவில்லை. பின் கல்லூரியில் இனியா சொன்ன காரணத்தை அவர் ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவே இல்லை.
பாக்கியலட்சுமி:
மேலும், ரெஸ்டாரண்டில் தன்னை சந்திக்க வந்த நபரிடம் எழில் படம் எடுக்கும் விஷயத்தை கோபி சொல்ல, அவரும் சம்மதித்தார். இதை எல்லாம் வீட்டில் ராதிகாவிடம் சொல்லி கோபி சந்தோஷப்பட, ராதிகா அதை கண்டுகொள்ளாமல் தூங்கி விட்டார். பின் கோபி, எழிலுக்காக தயாரிப்பாளரை சந்தித்த விஷயத்தை செழியன் இடம் சொல்ல, அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, தன்னுடைய அப்பாவை பெருமையாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா ரெஸ்டாரன்ட்டை திறந்திருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்தவர்கள் குழப்பத்தில் இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:
பின் கல்லூரியில் வர சொன்னதால் பாக்கியா சென்றிருந்தார். அப்போது நடன மாஸ்டரை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னதால் பாக்யாவும் ஒத்துக் கொண்டு நடனம் மாஸ்டரை சந்திகத்தார். ஆனால், அவர் அதிகமாக செலவாகும் என்று சொன்னதால் பாக்கியா வந்து விட்டார். வகுப்பில் சேர்த்துவிட சொல்லி இனியா ரொம்ப கெஞ்சியும் பாக்யா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதை பார்த்த கோபி இனியாவிடம் பேச நினைக்க, ராதிகா தடுத்து விட்டதால் அவர் அமைதியாகி விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, ரெஸ்டாரண்டை திறந்து வைத்திருக்கிறார். அப்போது வந்த பழனிசாமி டிபன் சாப்பிட்டுவிட்டு துபாய் செல்வதாக சொல்கிறார். பாக்யாவும் அவருக்கு வாழ்த்து சொல்லி அனுப்பி வைக்கிறார். இன்னொரு பக்கம் செழியன் சொன்ன தயாரிப்பாளரை சந்திக்க எழிலும் அவருடைய நண்பரும் சென்று இருக்கிறார்கள். அங்கு எழில், தன்னுடைய கதையைப் பற்றி தயாரிப்பாளிடம் சொல்ல முதலில் யோசித்த அவர் கடைசியில் படம் எடுக்க ஒத்துக்கொள்கிறார். இதனால் எழில் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

சீரியல் ட்ராக்:
பின் இதை எழில், அமிர்தாவிடம் சொல்ல, அவர் சந்தோஷப்பட்டார். இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்ல எழில்-அமிர்தா இருவருமே ரெஸ்டாரன்ட் வருகிறார்கள். பின் பாக்கியாவிடம் இதை சொல்ல அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு வாழ்த்து தெரிவிக்கிறார். அதற்குப்பின் அமிர்தா, நானும் ரெஸ்டாரண்டுக்கு வரேன் என்று சொல்ல, அவர் ஒத்துக் கொள்கிறார். பின் எழில்- அமிர்தா இருவருமே பாக்யாவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை கேட்டு பாக்கியா ஆனந்தத்தில் அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






