விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி, மையூவிற்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் இனியாவுக்கு கோபம் வந்தது. உடனே ஆத்திரத்தில் ஈஸ்வரி, மையூவை மோசமாக பேசி விட்டார். இதை பார்த்தவுடன் ராதிகா, தன்னுடைய மகளை அழைத்து போனார். பின் கோபியை ஹாஸ்பிடலுக்கு ராதிகா அழைத்துப் போக வந்தார். இதனால் ராதிகா- ஈஸ்வரிக்கு இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் கோபி இருவரையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து போனார். அங்கு டாக்டரை பார்க்க போகவும் இருவரும் சண்டை போட்டார்கள்.
ஒரு வழியாக ராதிகா தான் கோபியை அழைத்துக்கொண்டு உள்ளே போனார். இதனால் ஈஸ்வரிக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. பின் வெளியே வந்த கோபியிடம் ஈஸ்வரி விசாரிக்க, ராதிகா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கோபியை அழைத்துக் கொண்டு வந்தார். இது எல்லாம் நினைத்து ஈஸ்வரி, பாக்கியாவிடம் புலம்பியிருந்தார். நேற்று எபிசோட்டில் கோபி, தன்னுடைய அம்மா, பிள்ளைகளோடு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து ராதிகாவிற்கு கோபம் தான் வந்தது. ஆனால், எதுவும் பேச முடியாமல் அமைதியாக தன்னுடைய வேலையை செய்தார்.
பாக்கியலட்சுமி:
இரவு முழுவதுமே தூங்காமல் கோபி தன்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக விளையாடி,பேசிக் கொண்டு இருந்தார். மையூ, பாக்கியா உடனே தூங்கிக் கொள்கிறேன் என்று சொன்னதால் ராதிகாவிற்கு தனிமையில் இருப்பது போல உணர்ந்தார். பின் பாக்கியா, ஈஸ்வரிக்காக காபி கொண்டு வந்து தந்தார். ராதிகாவும் கோபிக்காக காபி போட்டு இருந்தார். உடனே கோபி, பாக்கியா கொடுத்த காபியை குடித்தவுடன் பாராட்டி விட்டு சென்றார். இதையெல்லாம் பார்த்து ராதிகாவிற்கு கோபம் அதிகமாகி அங்கிருந்து கிளம்பி போனார்.
நேற்று எபிசோட்:
இப்படி தினமும் ராதிகாவை வெறுப்பேற்றுவதற்கு ஈஸ்வரி தேவையில்லாத வேலைகள் எல்லாம் செய்தார். பின் எழில், அமிர்தா வீட்டிற்கு வந்தார்கள். கோபி, மொத்த குடும்பமே சந்தோஷமாக கலகலப்பாக இருந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, மேக்கப் பொருள்கள் எல்லாம் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். பின் போன் வந்தவுடன் அவர் வெளியே செல்கிறார். அந்த சமயம் வந்து மையூ, எல்லாத்தையும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இன்றைய எபிசோட்:
இனியா, எதையும் போடாதே, எனக்கு பிடிக்காது என்று பொறுமையாக பேசிக் கொண்டிருக்கிறார். உடனே ஈஸ்வரி, கோபமாக திட்ட, மையூ ரொம்பவே அழுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விடுகிறார்கள். அப்போது பாக்கியா, இனியா-மையூ இருவரையும் சமாதானம் செய்து ஈஸ்வரிக்கு புத்திமதி சொல்கிறார். ஆனால், ஈஸ்வரி கேட்கவில்லை. இதை பார்த்து கோபி, பாக்கியாவை பாராட்டி இருந்தார். அதற்குப்பின் கோபி வெளியே கிளம்புகிறார். உடனே ஈஸ்வரி, செழியனை வர வைக்க போகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குள் ராதிகா போகலாம் என்று கோபியை அழைத்து சென்று விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி, ராதிகாவிடம் சண்டை வாங்க காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது எழில்- அமிர்தா இருவரும் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். பின் ராதிகா-கோபியும் வீட்டிற்கு வருகிறார்கள். ஈஸ்வரி கேள்வி கேட்க, ராதிகா பதிலடி கொடுக்கிறார். அந்த சமயம் பார்த்து கோபிக்கு கொரியர் வருகிறது. அதைச் செழியன் வாங்குகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.