விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகாவிடம் இருந்து கோபியை பிரிக்க ஈஸ்வரி, குலதெய்வ கோவிலுக்கு போகணும் என்று திட்டம் போட்டார். ஆனால், பாக்கியா முடியாது என்று மறுத்து விட்டார். கடைசியில் செழியன், இனியா, ஈஸ்வரி, கோபி தான் கோயிலுக்கு போனார்கள். கோபி தன்னுடைய குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் விஷயத்தை அறிந்த ராதிகா, கோபப்பட்டு வீட்டை காலி செய்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த பாக்கியா, ராதிகாவிடம் தனியாக பேச அழைத்தார். அப்போது பாக்கியா எடுத்து சொல்லியும், ராதிகா கேட்காமல் கிளம்பி விட்டார்.

இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய அம்மா, பிள்ளைகளுடன் சந்தோஷமாக கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். இதை போட்டோ எடுத்து இனியா சோசியல் மீடியாவில் போட்டு இருந்தார். இதை பார்த்த பாக்கியாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. இன்னொரு பக்கம் ராதிகா, இனியா வைத்த ஸ்டேட்டஸை பார்த்து வேதனைப்பட்டார். பின் ராதிகா வீட்டை காலி செய்யும் விஷயத்தை இனியாவிடம் சொன்னார் பாக்கியா. இதை இனியா, ஈஸ்வரி இடம் சொல்ல, இந்த விஷயம் கோபிக்கு தெரியக்கூடாது என்று தடுத்து விட்டார்.
பாக்கியலட்சுமி:
ராதிகா அங்கிருந்து போகட்டும் என்றார். இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய அம்மா, மயூவை புது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின் அவர் அந்த வீட்டில் ரொம்ப வருத்தத்தோடு படுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பாக்கியா அவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தார். பின் இருவரும் மனது விட்டு பேசி இருந்தார்கள். பின் கோயில் ட்ரிப் முடிந்து எல்லோரும் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது அங்கு நடந்த விஷயத்தை எல்லாம் ஈஸ்வரி-கோபி இருவரும் சொல்லி சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இது எல்லாம் கேட்டு பாக்கியாவிற்கு கோபம் தான் அதிகமானது.

கடந்த வாரம் எபிசோட்:
பின் பாக்கியா, கோபி இடம் தனியாக பேசினார். அப்போது அவர், ராதிகா வீட்டை விட்டு கிளம்புகிறார். இந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தான் நீங்கள் துரோகம் செய்தீர்கள். உங்களை நம்பி வந்தவர்களையும் இப்படி ஏமாற்றுவதா? என்று ரொம்ப ஆவேசமாக பேசி இருந்தார். இதனால் கோபியால் எதுவுமே பேச முடியவில்லை. அதோடு பாக்கியா சொன்னதை கேட்டு கோபி ரொம்ப எமோஷனல் ஆனார். பின் கோபி, நான் ராதிகாவை பார்க்க போகிறேன் என்றவுடன் ஈஸ்வரி வேண்டாம் என்று தடுத்தார். ஆனால், கோபி கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இனியா- செழியன் இருவருமே ஈஸ்வரியுடன் சேர்ந்து ராதிகாவை பார்க்க வேண்டாம் தடுத்தார்கள். உடனே பாக்கியா திட்டி விட்டு அங்கிருந்து செல்ல, கோபியும் ராதிகாவை பார்க்க போனார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா வேதனையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த கோபி அவரிடம் மன்னிப்பு கேட்டு, எதற்கு வீட்டை காலி செய்கிறாய்? இங்கே இருக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு ராதிகா, நான் தெளிவாக யோசித்தான் முடிவு எடுத்து இருக்கிறேன். நீங்கள் எனக்கு இல்லை என்று தெரிந்ததால் தான் இந்த முடிவெடுத்தேன் என்றார். அதற்கு கோபியும் என்னென்னவோ சொல்லி சமாளிக்கிறார். ஆனால், ராதிகா ஏற்றுக்கொள்ளவில்லை.

சீரியல் ட்ராக்:
கடைசியில் ஹவுஸ் ஓனர் வந்தவுடன் வீட்டின் சாவியை கொடுத்துவிட்டு ராதிகா கிளம்பப் பார்க்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி வராததால் கோபத்தில் பாக்கியாவிடம் சண்டை போடுகிறார். அப்போது ஈஸ்வரி, நான் அவனை உன்னுடன் சேர்ந்து வாழ நினைக்கிறேன். நீ ஏன் இப்படி செய்கிறாய்? நான் அவரிடம் கோயிலில் சத்தியம் வாங்கி விட்டேன் என்று சொல்லும் போது பாக்கியாவுக்கு கோபம் அதிகமானது. பின் அவர், அவருடன் இனி நான் சேர்ந்து வாழமாட்டேன். இப்போதுதான் என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்கள் மகன் ஒரு கேவலமானவர், சுயநலம் கொண்டவர் என்றெல்லாம் சொல்ல, ஈஸ்வரி வாக்குவாதம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






