விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி கையால் புது ரெஸ்டாரன்ட் திறக்கப்பட்டது. அப்போது இனியா காதலிக்கும் நபர் ஆகாஷ் அங்கு வந்தார். அவர் வேறு யாருமில்லை செல்வியின் மகன் தான். வீட்டில் உள்ள எல்லோரிடமும் செல்வியின் மகன் ரொம்ப அன்பாக பேசி இருந்தார். ஆனால், இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் யாருக்கும் தெரியவில்லை. அதற்குப்பின் ஈஸ்வரி, செழியன்-அமிர்தாவை மீண்டும் வீட்டிற்கு வரச் சொல்லி அழைத்தார். பின் ஈஸ்வரி, செழியன் அவர் மாமியார் வீட்டில் இருப்பது சரி இல்லை. இங்கு வரட்டும் என்று கடுமையாக பேசி இருந்தார்.

உடனே பாக்கியா, அவர்கள் விருப்பப்படி நடக்கட்டும் என்று சொன்னார். அதற்குப்பின் இனியா செல்வியின் மகன் ஆகாஷை சந்திக்க அவருடைய வீட்டிற்கு போனார். ஆனால், ஆகாஷ் ரொம்ப பயந்தார். அதற்கு ஏற்ப செல்வி வீட்டிற்கு வந்தார். உடனே இனியா ஒளிந்து கொண்டார். ஒரு வழியாக இனியா தப்பித்து விட்டார். பின் எழில், எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன் என்று சொன்னார். நேற்று எபிசோட்டில் எழில், எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து என்னுடைய படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் புது பிளாட் கொடுத்து இருக்கிறார் என்று சொன்னார்.
பாக்கியலட்சுமி:
இதை கேட்டவுடன் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், ஈஸ்வரி மட்டும் வருத்தப்பட்டார். அதன் பின் புது வீட்டுக்கு போக எழில் முடிவு செய்தார். ஆனால், ஈஸ்வரி தடுத்தார். உடனே பாக்கியா, என் பிள்ளைகள் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவர்களை என் கைக்குள் அடக்கி வைக்க மாட்டேன் என்றெல்லாம் ஈஸ்வரியை எதிர்த்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் இனியா, ஆகாஷ் உடன் போனில் பேசிக் கொண்டிருக்க, அதை பாக்கியா பார்த்து விட்டார். பாக்கியா, இனியாவிற்கு அறிவுரை செய்தார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் செல்வி, ஆகாஷ் இடம் போனில் மனசை அலைப்பாயாதே, படிப்பில் கவனம் செலுத்து என்று தன்னுடைய குடும்ப சூழ்நிலை எடுத்து சொல்லி புரிய வைத்தார். இந்த முறையும் இனியா தப்பித்து விட்டார். இப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா- பாக்கியா இருவரும் போன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது மையூ தான் வரைந்த புகைப்படங்களை எல்லாம் பாக்கியாவிற்கு காண்பித்து சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, சோகமாக உட்கார்ந்து கொண்டார். அப்போது கோபி விசாரிக்க, எல்லோருமே தனித்தனியாக இருக்கிறோம் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

இன்றைய எபிசோட்:
எல்லோரும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும். உன்னுடைய வாழ்க்கை நினைத்தாலும் வேதனையாக இருக்கிறது என்று புலம்புகிறார். கோபி, எதுவாக இருந்தாலும் நான் தனியாக சமாளித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்கிறார். அதற்குப்பின் சொந்தக்காரர்கள் பத்திரிக்கை வைப்பதற்காக பாக்கியா வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது பாக்கியா- கோபியை பற்றி விசாரிக்க, ஈஸ்வரி இருவரும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள் என்று பொய் சொல்லி விடுகிறார். அவர்கள் சென்ற பின்பு கோபத்தில் சண்டை போடுகிறார் பாக்கியா.

சீரியல் ட்ராக்:
அப்போது ஈஸ்வரி, இனியா திருமணமாகும் போது நீங்கள் இருவரும் சேர்ந்து இருந்தால் தானே நன்றாக இருக்கும் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா, அது எல்லாம் முடியாது. உங்களுக்காக தான் அவர் இந்த வீட்டில் இருக்க அனுமதித்தேன். மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்த உறவும் கிடையாது. தப்பி தவறி கூட இனிமேல் நாங்கள் இருவரும் சேர்ந்து இருக்கிறோம் என்று சொல்லக்கூடாது என்று கடுமையாக பேசிவிட்டு செல்கிறார். கோபி, பாக்கியா என்னை வெளியே ஆளாகத்தான் பார்க்கிறார். நீங்கள் இப்படி பேசாதீர்கள் என்று வருத்தத்துடன் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






