விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபியின் நிலை அறிந்து ஹாஸ்பிடலுக்கு வந்த ராதிகாவை ஈஸ்வரி உள்ளே விடவில்லை. உடனே எழில், பாக்கியா இருவருமே ஈஸ்வரியை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. கோபத்தில் ஈஸ்வரி, ராதிகாவை ரொம்ப தகாத வார்த்தையால் திட்டியதால் அவர் மனம் உடைந்து வெளியே வந்து விட்டார். பின் ராதிகா, நீங்கள் எல்லாம் ஒன்றாகி விட்டீர்கள் என்று வருத்தப்பட்டு அங்கிருந்து கிளம்பினார். பாக்யாவின் சூழ்நிலையை ராதிகா கூட புரிந்து கொள்ளவில்லை.

வேதனையில் ராதிகா மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்கு போனார். இன்னொரு பக்கம் பாக்கியா, ராதிகாவின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த ராதிகா, கோபியின் நிலைமையை எடுத்து சொல்லி புலம்பி அழுதார். அதற்கு அவருடைய அம்மா ஆறுதல் சொல்லி இருந்தார். மறுநாள் ஹாஸ்பிடலுக்கு மீண்டும் வந்த ராதிகாவை வழக்கம்போல் ஈஸ்வரி பயங்கரமாக திட்டி இருந்தார். பாக்கியா, எவ்வளவு சொல்லியுமே ஈஸ்வரி கேட்கவே இல்லை.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் இனியா, செழியன் இருவருமே ஈஸ்வரிக்கு சப்போர்ட் செய்தார்கள். அதன் பின் ராதிகா உள்ளே சென்று கோபியை பார்த்தார். ஆனால், கோபி கண்ணிற்கு ராதிகா, பாக்யா போல் தெரிந்ததால் ரொம்ப நன்றி என்று சொல்ல, ராதிகா ரொம்பவே வருத்தப்பட்டார். அதன் பின் பாக்கியா-ராதிகா இருவருமே உட்கார்ந்து பேசி இருந்தார்கள். அப்போது ராதிகா, நான் கோபியை திருமணமே செய்து இருக்க கூடாது. எங்களுக்குள் நிறைய சண்டை வருகிறது என்று ரொம்ப எமோஷனலாக பாக்கியா தோள் மீது சாய்ந்து அழுது இருந்தார்.

நேற்று எபிசோட்:
உடனே பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி இருந்தார். அதன் பின் வீட்டில் பாக்கியா, ஜெனி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஹாஸ்பிடலில் இருந்து வந்து ஈஸ்வரி, நீ ஏன் அங்கு இல்லை? நீதான் கோபியை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல, அது என்னுடைய வேலை இல்லை. ராதிகா தான் அவருடைய மனைவி என்று பாக்கியா சொன்னார். இதனால் ஈஸ்வரி பயங்கரமாக கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, உங்கள் மகனை பார்த்துகிற வேலை என்னுடையது கிடையாது. ராதிகா தான் அதை செய்வார். அவர் தான் மனைவி என்று பேசுகிறார். இதனால் ஈஸ்வரி- பாக்கியா இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. ஒரு கட்டத்தில் பாக்கியா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். மறுநாள் காலையில் வீட்டிற்கு செழியன் வந்து விடுகிறார். அப்போது ஈஸ்வரி, கோபியை பார்க்க போக சொல்கிறார். அதற்கு பாக்கியா, அவர் முடியாது. அது என்னுடைய வேலை இல்லை. ராதிகா தான் பார்க்கணும் என்று சொல்ல, ஈஸ்வரி இன்னும் கோபப்பட்டு திட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் ஈஸ்வரி, ஹாஸ்பிடலில் இருந்து என்னுடைய மகனை இந்த வீட்டிற்கு தான் அழைத்து வருவேன் என்று சொல்ல, பாக்யா முடியாது என்கிறார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை வருகிறது. பின் ஈஸ்வரி, செழியனை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு போகிறார். அதற்கு முன்பே ராதிகா, கோபியை பார்த்து பேசுகிறார். கோபி, இப்போதான் என்னை பார்க்க நேரம் வந்ததா? எவ்வளவு முறை போன் செய்தேன். என்னுடைய குடும்பம் தான் எனக்கு உதவியது என்று ரொம்ப எமோஷனலாக பேச, ராதிகா வருத்தப்படுகிறார். அந்த சமயம் வந்த ஈஸ்வரி, ராதிகாவை திட்டி வெளியே போக சொல்லுகிறார். ஆனால், அவர் முடியாது என்று மறுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






