-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சீரியல்ஸ்

கவுன்சிலரிடம் சண்டைக்கு போன செழியன், போலீஸ் எடுத்த நடவடிக்கை, பரிதவித்து நிற்கும் பாக்கியா – பாக்கியலட்சுமி

0
137

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா, கவுன்சிலர் விஷயத்தில் நம்ம தான் ஏதாவது செய்யணும் பார்த்துக் கொள்ளலாம் என்று செல்வி இடம் சொன்னார். அப்போது இனியா ஹோட்டலுக்கு வந்தார். அவரிடம் பாக்கியா, வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை தானே என்று கேட்டார். அதற்கு இனியா, நீ பணம் ஏதாவது வாங்கினீர்களா? என்று கேட்டார். உடனே செல்வி, அவர்கள் ஒன்னும் பெரிதாக தரவில்லை என்று நடந்ததை சொல்ல வர, பாக்கியா தடுத்து நிறுத்தி நீ இந்த விஷயத்தை விடு. அம்மாவுக்காக ஏதாவது செய்யணும் என்று நினைத்தால் அந்த ரெஸ்டாரண்டை நீ எடுத்து நடத்து என்று சொன்னார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் வீட்டில் அமிர்தா, கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த ஈஸ்வரி, ஒவ்வொரு வேலைகளையும் குறை சொல்லிக் கொண்டிருந்தார். இதை பார்த்த எழில், எதுக்கெடுத்தாலுமே அமிர்தாவை எதற்கு குறை சொல்கிறீர்கள். இந்த வீட்டில் அதிக வேலை அமிர்தா தான் செய்தார். இந்த வீட்டில் ஜெனியும் இருக்கிறார். அவர் எந்த வேலையுமே செய்யவில்லை என்று சொன்னார். இதை வெளியில் இருந்த செழியன் கேட்டு வருத்தப்பட்டார். அந்த சமயம் பார்த்து வந்த பாக்கியா, எனக்கு யார் கையும் நம்பி வேலை செய்ய விருப்பமில்லை.

பாக்கியலட்சுமி:

தேவையில்லாமல் பிரச்சினை செய்தாதீர்கள் என்று தன்னுடைய மாமியாரிடம் கோபமாக பேசி இருந்தார். அதற்கு பின் செழியன், நீ வேலை செய்யாததை பற்றி எழில் குறை சொல்கிறார் என்றார். இதை கேட்ட ஜெனி, னக்கும் இங்கு இருக்க பிடிக்கவில்லை. அம்மா வீட்டிலேயே இருக்கலாம் என்றார். அந்த சமயம் வந்த பாக்கியா, எனக்கு கடையில் நிறைய வேலை இருக்கிறது. நீ கொஞ்சம் அமிர்தாவிற்கு உதவி செய் என்று சொல்ல, ஜெனியும் எதுவும் பேச முடியாமல் சரி என்றார். பின் பாக்கியா ஹோட்டலுக்கு சாப்பிட கோபி வந்தார்.

நேற்று எபிசோட்:

-விளம்பரம்-

நேற்று எபிசோட்டில் கோபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாக்கியாவின் கஷ்டங்களை பற்றி ரொம்ப எமோஷனலாக பேசினார். பாக்கியாவும் அமைதியாக இருந்தார். அப்போது கோபி, உனக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால் தயங்காமல் என்னிடம் கேள் என்றார். அதற்கு பாக்கியா, அத்தை தேவையில்லாமல் வீட்டில் பிரச்சனை செய்தார்கள். அதை மட்டும் கொஞ்சம் அவர்களிடம் எடுத்து சொல்லி புரிய வையுங்கள் என்றவுடன் கோபியும் சரி என்றார். அதற்கு பின் ஈஸ்வரி, கோபி இருவருமே இனியாவை பார்க்க அவருடைய மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் இனியா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் மூவரும் தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, பாக்கியா ரெஸ்டாரண்ட் விஷயமாக பேசி இருந்தார். அதற்கு இனியா, எனக்கு தெரியும் ரொம்ப கஷ்டமாக இருந்தது.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

அம்மா எனக்காக எல்லாத்தையும் இழந்து விட்டார் என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது என்று எமோஷனலாக பேசி இருந்தார். அதற்கு ஈஸ்வரி, உன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி மட்டும் யோசி என்று அறிவுரை சொன்னார். அதற்கு பின் ஈஸ்வரி- கோபி இருவரும் காரில் பேசிக்கொண்டு வந்தார்கள். அப்போது கோபி, பாக்கியாவுக்கு சப்போர்ட் செய்து பேசினார். ஈஸ்வரி வழக்கம்போல் பாக்கியாவையும் அவருடைய தொழிலையும் ரொம்ப மோசமாக திட்டி பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் ஹோட்டலில் செல்வியின் மகன் ஆகாஷ், வேலை கேட்க, பாக்கியாவும் சம்மதித்தார். பின் வேலை எல்லாம் முடித்துவிட்டு கிளம்பும் நேரத்தில் கவுன்சிலர் வந்தார். பாக்கியா, நீங்கள் சொல்வதை எல்லாம் இங்கு சமைக்க முடியாது. தேவையில்லாமல் பிரச்சனை செய்யாதீர்கள் என்று சொன்னார். உடனே கவுன்சிலர், இப்படியெல்லாம் பேசாதே, கடை நடத்த முடியாது என்று அங்கேயே உட்கார்ந்து விட்டார்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் செழியன், பாக்கியாவின் ஓட்டலுக்கு வந்திருக்கிறார். அப்போது அங்கு வந்து கவுன்சிலர், பாக்கியாவிடம் வழக்கம் போல சாப்பாடு ஆர்டர் சொல்கிறார். பின் அங்கிருந்த கவுன்சிலர் கூட்டாளி, எதற்கு இந்த கடைக்கு தினமும் வரணும். வேறு கடைக்கு போகலாமே என்று சொல்கிறார். உடனே அந்த கவுன்சிலர், இங்குதான் அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்று பேசுகிறார். இதைக் கேட்ட செழியன் கோபப்பட்டு கவுன்சிலரை அடிக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை அதிகம் ஆனது. பாக்கியா அவர்களை தடுத்து விடுகிறார். மறுநாள் போலீசார் செழியனை கவுன்சிலரை அடித்ததற்கு கைது செய்கிறார்கள். பாக்கியா, எடுத்து சொல்லியுமே அவர்கள் கேட்கவில்லை. பின் போலீஸ் செழியனை கைது செய்து செல்கிறார்கள். இதனால் மொத்த குடும்பமும் பரிதவித்து நிற்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news