விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, ரெஸ்டாரண்டில் ரொம்ப பிசியாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பேங்கில் இருந்து பாக்கியாவை பார்க்க சில நபர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் பாக்கியா, புது அக்கவுண்ட் ஓபன் பண்ணுவதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது செல்வி, இன்னும் சில தினங்களில் உங்கள் பிறந்தநாள் வருகிறது என்று சொன்னவுடன் பாக்கியா ரொம்ப சந்தோஷப்பட்டார். ஒரு காலத்தில் தன்னுடைய பிறந்த நாளை யாருக்குமே தெரியவில்லை.

இந்த முறை தன்னுடைய பிறந்தநாளை பிரமாதமாக கொண்டாட வேண்டும் என்று பாக்கியா முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்தார். பின் இதைப் பற்றி இனியா, தன்னுடைய அப்பா கோபி, ஈஸ்வரியிடம் சொன்னார். இதனால் ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது. பின் அவர், பிறந்தநாள் கொண்டாட பாக்கியா குழந்தையா? என்றெல்லாம் பேசி இருந்தார். அப்போது பாக்கியா, தான் வாங்கிய புது புடவையை ஈஸ்வரியிடம் கொடுத்தார். ஆனால், அவர் எதிலும் விருப்பம் இல்லாத போல் பேசி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
கோபி பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். நேற்று எபிசோட்டில் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது. விழாவிற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி பரிசு கொடுத்து இருந்தார்கள் . பாக்யாவின் பிறந்தநாளுக்காக இனியா, அவருடன் வேலை செய்தவர்கள்
பேசும் வீடியோவை ரெடி பண்ணி பிறந்தநாள் பரிசாக கொடுத்திருந்தார். இதை பார்த்தவுடன் பாக்கியா ரொம்ப எமோஷனலாக அழுதுவிட்டார்.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் ஈஸ்வரி, பிறந்தநாள் பரிசாக கோபி, பாக்கியாவிற்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க இருக்கிறேன். அதுதான் நான் அவருக்கு கொடுக்கும் பரிசு என்று சொன்னவுடன் பாக்கியா-கோபி இருவருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். அதற்குப்பின் பாக்கியா, நீங்கள் எனக்கு கொடுத்த பரிசுக்கு நன்றி. ஆனால், நான் மீண்டும் அவரை திருமணம் செய்து கொள்வது என்பது நடக்காத ஒன்று. அந்த எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, பாக்யா முன்பு போல் இல்லை. இரண்டு ரெஸ்டாரன்ட் திறந்த திமிரில் இருக்கிறார். என்னை மதிப்பதே இல்லை என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு கோபி, பாக்கியா தெளிவாக இருக்கிறார். இந்த கல்யாணத்தில் அவளுக்கு விருப்பமில்லை என்றால் விடுங்கள். எதற்காக தேவையில்லாமல் கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று பேசுகிறார். ஆனால் ஈஸ்வரி, உங்கள் இருவரையும் சேர்த்து வைப்பேன் என்று கோபமாக பேசுகிறார். அதற்குப்பின் கோபி, தான் பாக்கியாவிற்கு கொடுத்த கிப்ட்டை பார்க்கிறார்.

சீரியல் ட்ராக்:
என்னுடைய கிப்டை வாங்கி பார்க்க கூட அவளுக்கு மனசில்லை என்று பழசை நினைத்து பார்த்து ரொம்ப பீல் பண்ணுகிறார். இன்னொரு பக்கம் இனியா- ஆகாஷ் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்தவுடன் செல்விக்கு சந்தேகம் வருகிறது. அதைப்பற்றி ஆகாசிடம் விசாரிக்கிறார். ஆனால், அவர் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். பின் வீட்டுக்கு வந்த பாக்கியாவிடம் ரெஸ்டாரண்டில் நடந்ததை பற்றி ஈஸ்வரி கேட்கிறார். உடனே பாக்கியா, என் விருப்பம் இல்லாமல் நீங்கள் எப்படி சொல்லலாம். எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. எனக்கு தான் அவமானமாக இருக்கிறது என்று சொல்ல, இருவருமே மாறி மாறி வாக்குவாதம் செய்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






