விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா வீட்டிற்கு வந்த ராதிகா, ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்டார். அதற்கு கோபி, உடம்பு சரியானவுடன் நான் வந்து விடுகிறேன். என்னுடைய அம்மா, பிள்ளைகள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் என்று தன்னுடைய குடும்பத்தை பற்றியே பேசி இருந்தார். இதனால் ராதிகாவிற்கு கோபம் அதிகமாகி வெளியில் வந்தார். அப்போது ஈஸ்வரி, நீ கோபியை விவாகரத்து செய்துவிடு. இனி உன்னுடன் அவன் வரமாட்டான் என்று சொல்ல, ராதிகா இன்னும் கோபப்பட்டார். பின் பாக்கியா, உங்களுடைய உடம்பு எப்படி இருக்கிறது என்று கேட்டு இருந்தார்.

அதற்கு கோபி, உடம்பு நன்றாக இருக்கிறது என்று சொன்னார். உடனே பாக்கியா, எப்போது உங்க வீட்டுக்கு போகிறீர்கள்? உங்களால் ராதிகா ரொம்ப கஷ்டப்படுகிறார் என்று சொல்ல, கோபியால் எதுவுமே பேச முடியவில்லை. பின் பாக்கியா, உங்களுக்கு ஒரு வாரம் டைம் கொடுக்கிறேன். தயவுசெய்து இந்த வீட்டை உங்களுடைய வீட்டிற்கு போங்கள் என்று சொன்னவுடன் கோபியின் முகமே மாறி விட்டது.
மறுநாள் காலையில் கோபி, பாக்கியாவை இம்ப்ரஸ் செய்வதற்காக காபி எல்லாம் கொண்டு வந்து கொடுத்து பேசி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியா அதை கண்டுகொள்ளவில்லை. பின் காபியை வாஷ்பேஷனில் ஊத்தி விட்டு வெளியே போனார். அப்போதுமையூ அங்கு வர, இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அங்கு வந்த ராதிகா, பாக்கியாவை பற்றி மோசமாக பேசி இருந்தார். வேதனையில் வீட்டுக்குள்ளே வந்த பாக்கியா, எல்லோரும் கலகலப்பாக பேசுவதை பார்த்துவிட்டு இன்னும் கோபப்பட்டார். பின் கோபியிடம் பாக்கியா, உங்களால் எல்லோருடைய வாழ்க்கையும் நாசமாகிறது. வீட்டை விட்டு கிளம்புங்கள் என்றார். கோபிக்காக ஈஸ்வரி சப்போர்ட் செய்து பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, அவனுக்கு உடம்பு சரியாகட்டும். அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று சொல்ல, பாக்கியா ஒத்து கொள்ளவே இல்லை. இதனால் வாக்குவாதம் அதிகமானது. பின் கோபி, பாக்கியா சொல்வது சரி. நான் கிளம்புகிறேன் என்று சொல்லும் போது அவருக்கு நெஞ்சுவலி வந்தது போல கீழே உட்கார்ந்தார். உடனே கோபியை சோதித்த மருத்துவர், டென்ஷனால தான் அவருக்கு வலி வந்தது. கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி, நடந்ததை சொன்னார்.

இன்றைய எபிசோட்:
பின் தயவுசெய்து என் மகன் உயிரை காப்பாற்று. அவனை வீட்டை விட்டு மட்டும் வெளியே அனுப்பாதே. என் மகன் மீது போட்ட கேஸை வாபஸ் வாங்கி விடு. நான் உன்னிடம் மடிப்பிச்சை கேட்கிறேன் என்று கதறி அழுதார். பாக்கியாவால் எதுவுமே பேச முடியவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா வீட்டிற்கு வந்த எழில் எல்லோரிடமும் பேசுகிறார். ஆனால், கோபியை கண்டு கொள்ளவே இல்லை. அப்போது ஈஸ்வரி, நீ வீட்டிற்கு மீண்டும் வரவேண்டும். அதற்காகத்தான் உன்னை இங்கு வர சொன்னேன். எல்லோரும் ஒரு குடும்பமாக இருக்கலாம் என்றெல்லாம் பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்ட பாக்கியா, அவன் ஜெயிக்கட்டும். அதன் பின் இங்கு வரவேண்டும். நீ கிளம்பு எழில் என்று சொல்கிறார். இதனால் ஈஸ்வரிக்கு பாக்கியா மீது கோபப்படுகிறார். பின் கோபி, இது நம்முடைய குடும்பம். எதுவாக இருந்தாலும் ஒரே இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்ல, பாக்யாவிற்கு இன்னும் கோபம் அதிகமா, கோபியை திட்டுகிறார். ஆனால், கோபி அதைப்பற்றி பெரிதாக கவலைப்படாமல் அமைதியாக ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு செல்கிறார். அதற்குப்பின் ராதிகா, கோபிக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது தனக்கு நெஞ்சுவலி வந்ததை ராதிகாவிடம் சொல்ல, அவர் வருத்தப்பட்டு வீட்டிற்க்கு வந்து விடுகிறார். பின் கோபியிடம் நலம் விசாரித்துவிட்டு மயூவின் பிறந்தநாளை பற்றி ராதிகா பேசுகிறார். கோபி அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






