விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியை பார்த்து கொள்ளும் விஷயத்தில் ஈஸ்வரி- பாக்கியா இடையே வாக்குவாதம் அதிகமாகி இருந்தது. பின் ஹாஸ்பிடல் வந்த ஈஸ்வரி, ராதிகாவை திட்டி வெளியே போக சொல்ல, கோபியை என்னுடைய வீட்டிற்கு தான் அழைத்து செல்வேன் என்றார் ராதிகா. உடனே பாக்யா, ராதிகாவுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். உடனே ஈஸ்வரி, எந்த முடிவு என்றாலும் கோபி சொல்லட்டும் என்றார். பின் ராதிகா-ஈஸ்வரி இருவரும் கோபி இடம் பேசி இருந்தார்கள்.
அதற்கு கோபி, தன் அம்மா வீட்டிற்கு போவதாக சொன்னார். கோபி சொன்ன பதிலால் ராதிகா அதிர்ச்சியாகி எதுவும் பேச முடியாமல் இருந்தார். பாக்கியா தடுத்துமே ஈஸ்வரி கேட்கவே இல்லை. பின் ராதிகா, இதெல்லாம் நீங்கள் செய்த வேலை தானே, நடிக்காதீர்கள் என்றெல்லாம் பேசி இருந்தார். கோபத்தில் பாக்கியா, உங்களிடம் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டி விட்டு சென்றார்.
பின் வீட்டில் ஈஸ்வரி, கோபிக்கு சாப்பாடு செய்ய சொல்லி ஆர்டர் போட்டார்.
பாக்கியலட்சுமி:
அதற்கு பாக்யா, என்னால் செய்ய முடியாது. நீங்கள் தானே அழைத்து வந்தீர்கள். உங்கள் மகனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் ராதிகா, கோபி அவர் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் என்று சொல்லி கதறி அழுதார். இதனால் கோபத்தில் ராதிகா அம்மா, பாக்கியா வீட்டிற்கு சண்டைக்கு வந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா அம்மா, பாக்யவிடம் சண்டை போடுகிறார்.
நேற்று எபிசோட்:
அப்போது பாக்கியா, எதுவாக இருந்தாலும் கோபி அம்மாவிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் ஈஸ்வரி வெளியே வருகிறார். அப்போது ராதிகா அம்மா, கோபியை அனுப்ப சொல்லி கேட்கிறார். ஆனால், ஈஸ்வரி முடியாது என்றார். பின் இருவருக்கும் இடையே கலவரமே நடக்கிறது. கடைசியில் ஈஸ்வரி, கோபியின் விருப்பத்தால் தான் இங்கே வந்திருக்கிறான். வெளியே போ என்று திட்டுகிறார். அதற்கு ராதிகா அம்மா, உங்களை இனி சும்மா விட மாட்டேன் என்று மிரட்டி விட்டு போனார்.
இன்றைய எபிசோட்:
இதை எல்லாம் பார்த்து பாக்கியாவிற்கு ஈஸ்வரி மீது பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் ராதிகா சோகமாக உட்கார்ந்திருக்கிறார். அப்போது வந்த ராதிகா அம்மா, பாக்கியா வீட்டில் நடந்ததை சொல்கிறார். இதனால் ராதிகா ரொம்பவே வருத்தப்பட்டும், மயூவின் நிலைமையை நினைத்தும் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே அவருடைய அம்மா ஆறுதல் சொல்லி, நான் எப்படியாவது உன்னையும் கோபியும் சேர்த்து வைக்கிறேன் என்கிறார். பின் பாக்யா எல்லோருக்கும் சமைத்துக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரி, கோபிக்காக சமைக்க வருகிறார்.
சீரியல் ட்ராக்:
கிச்சனில் பொருட்கள் எதுவுமே தெரியவில்லை என்றாலும் ஏதேதோ செய்து கஷ்டப்பட்டு கோபிக்காக சமைக்கிறார். பின் சாப்பிட வந்த கோபி, பாக்யாவை பார்த்து சிரிக்கிறார். ஆனால், பாக்யா அவரை முறைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார். சாப்பிட்டு முடித்துவிட்டு ஈஸ்வரி,இனியா, கோபி, செழியன் ஆகிய நான்கு பேரும் கலகலப்பாக சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.