விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, நான் நிதிஷை விவாகரத்து செய்ய இருக்கிறேன். அம்மாவின் ரெஸ்டாரண்டை எப்படியாவது சுதாகரிடம் இருந்து வாங்க வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே இனியாவுக்கு சப்போர்ட் செய்தார்கள். அதற்குப் பின் இனியா வேலைக்கு தயாராகிக் கிளம்பி இருந்த்தார். அப்போது பாக்கியா வீட்டிற்கு சுதாகரும் அவருடைய மனைவியும் வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் பாக்கியா குடும்பத்தில் உள்ள எல்லோருமே கோபப்பட்டார்கள். சுதாகர், நான் இனியாவை அழைத்து செல்ல வந்தேன் என்று சொன்னார். இதனால் கோபப்பட்ட கோபி, அதெல்லாம் முடியாது.

பொய் சொல்லி எங்களை ஏமாற்றி விட்டீர்கள். இனிமேல் இனியா அங்கு வர வாய்ப்பில்லை என்று கோபப்பட்டு பேசி இருந்தார்கள். சுதாகர்- பாக்கியா குடும்பத்திற்கு இடையே வாக்குவாதம் அதிகமானது. கடைசியில் இனியாவை அனுப்ப முடியாது என்பதால் சுதாகரால் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் நிதிசை சுதாகர் வெளியே எடுத்து விட்டார். அப்போது சுதாகர், நீ எப்படியாவது இனியாவை இந்த வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். இல்லையென்றால் நமக்கு தான் பிரச்சனை என்பதால் நிதிஷ் இனியாவை தேடி ஆபீஸ்க்கு போனார். ஆனால், இனியா, நிதிஷை சந்திக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார். இதனால் நிதிஷ் ஆபீஸில் பிரச்சனை செய்து கொண்டிருந்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் ஆபீஸில் இருந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பேன் என்று சொன்னதால் நிதீஷ் அங்கிருந்து சென்று விட்டார். அதற்கு பின் வீட்டிற்கு சென்ற இனியா, தன்னுடைய அப்பா அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உண்மையை அறிந்து வீட்டிற்கு வந்த எழில், இனியாவின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டு பேசி இருந்தார். அதோடு நிதீஷை சும்மா விடக்கூடாது என்றெல்லாம் கோபப்பட்டார். செழியன்- எழில் இருவருமே போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுப்பதை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால் பாக்கியா, இப்போதைக்கு வேண்டாம் என்றார். அப்போது இனியா, நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்.

நேற்று எபிசோட்:
நான் நிதீசை விவாகரத்து செய்யப் போகிறேன். இதில் எனக்கு யாரும் தடை சொல்ல வேண்டாம் என்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே இனியா விவாகரத்து செய்வதற்கு ஒத்துக் கொண்டார்கள். அதற்குப்பின் பாக்கியாவிடம் இனியா, நிதீஷ் ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிட்டார். ஆபீஸில் பிரச்சனை செய்து கொண்டிருந்தார். ஆனால், நான் அவரை பார்க்கவில்லை என்றார். அதற்கு பாக்கியா, நீ எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம். எப்போதும் நான் உன்னுடன் தான் இருப்பேன் என்று சொன்னார். பின் இனியா, தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியை கழட்டி இதற்கு எந்த வேலையும் இல்லை. நிதீஷ் என் வாழ்க்கையை விட்டு எடுத்து விட்டேன் என்று பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, நிதீஷ் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். அவர் வெளியே வந்தவுடன் இனியா ஆஃபீஸ்க்கு சென்று பிரச்சனை செய்திருக்கிறார் என்கிறார். இதைக் கேட்டவுடன் வீட்டில் எல்லோருமே கோபப்படுகிறார்கள். உடனே கோபி, நான் சுதாகரிடம் சந்தித்து பேசுகிறேன் என்கிறார். அதற்குப்பின் எழில், இனியாவிடம் பேசுகிறார். அப்போது எழில், செய்தி மூலம் தான் இந்த விஷயம் தெரிந்தது. இந்த விஷயம் எல்லாம் தெரிந்து கொண்டு ஏன் அமைதியாக இருந்தாய். இப்படியே காலமெல்லாம் வாழ்ந்துவிடலாம் என்று நினைத்தாயா? என்றெல்லாம் கேட்கிறார். அதற்கு இனியா எமோஷனலாக அழுகிறார். அதற்குப்பின் கோபி, செழியன், எழில் மூவருமே சுதாகர் வீட்டிற்கு போகிறார்கள். அப்போது கோபி, என் மகளிடம் இனிமேல் நிதீஷ் பேச நினைத்தால் உன்னை சும்மா விடமாட்டேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே கோபப்பட்ட நிதிஷ், அப்படி தான் பேசுவேன். என்ன செய்ய முடியுமோ பண்ணுங்கள் என்று திமிராக பேசுகிறார். இதனால் செழியன், எழில் இருவருமே சண்டை போடுகிறார்கள். பின் சுதாகர், மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் என்று மிரட்டுகிறார். கோபியுமே சுதாகருக்கு பதிலடி கொடுத்துவிட்டு வருகிறார். அதற்குப் பின் சுதாகர், பாக்கியாவின் ஓட்டலுக்கு போகிறார். அங்கு சுதாகர்-பாக்கியா இருவரும் என்று சண்டை போடுகிறார்கள். அந்த சமயம் வந்த கவுன்சிலர், சுதாகரை திட்டுகிறார். இது எல்லாம் பார்த்து சுதாகருக்கு பயங்கர கோபம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.






