விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, சுதாகரின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு கோபி, நிதிஷ் ரொம்ப தவறாக பேசினான். அதனால்தான் நம்ம பிள்ளைகள் சண்டை போட்டார்கள் என்று சொன்னார். உடனே இனியா, இதற்கெல்லாம் ஒரே முடிவு விவாகரத்து தான். நான் நிதீஷை விவாகரத்து செய்தால் தான் அவர் அவரிடம் அவரிடம் எந்த அவர் என்னை தொந்தரவு செய்ய மாட்டார் என்று சொன்னார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே இனியாவிற்கு விவாகரத்து வாங்க முடிவெடுத்தார்கள். அதற்குப்பின் இனியா, கோபி, பாக்கியா எல்லோருமே வக்கீலை சந்தித்து பேசி இருந்தார்கள்.

அப்போது கோபி நடந்த எல்லா விஷயத்தையும் வக்கீல் இடம் சொன்னார். அதற்கு வக்கீல், எல்லாத்தையும் ஸ்டேட்மெண்டாக எழுதிக் கொடுக்க சொன்னார். அதற்கு இனியா, நானே எழுதி உங்களுக்கு மெயில் பண்ணி விடுகிறேன் என்றார். அதற்குப்பின் பாக்கியா ஹோட்டலில் செல்வி, இனியாவிற்கு ஆறுதல் சொன்னார். அதற்கு பின் அங்கு வந்த ஆகாசிடம் இனியா எதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த நிதீஷ், ஆகாஷ்-இனியா இருவரும் பேசுவதை பார்த்து ரொம்பவே கோபப்பட்டார்.
பாக்கியலட்சுமி:
இனியா- ஆகாஷ் இருவரும் பேசி இருப்பதை பார்த்த நிதிஷ் கோபப்பட்டு இனியாவிடம் சண்டை போட்டார். அப்போது நிதீஷ், பழைய காதலனுடன் சேர தான்என்னை வேண்டாம் என்று சொன்னாயா? என்று ரொம்ப மோசமாக இனியாவை பற்றி பேசினார். இதனால் ஆகாஷ் பேச வர, நிதிஷ் அடிக்கப் போனார். கடைசியில் இனியாவின் கையை பிடித்து வம்பிழுத்து கொண்டு இருந்தார் நிதீஷ். அந்த சமயம் வந்த பாக்கியா, என் மகளின் கையை விடு இல்லை என்றால் நடப்பதே வேறு என்று கொந்தளித்தார். வேறு வழியில்லாமல் நிதீஷ், இனியாவின் கையை விட்டார். மீண்டும் நிதீஷ், இனியாவை பற்றி மோசமாக பேச, கோபத்தில் பாக்கியா திட்டினார்.

கடந்த வாரம் எபிசோட்:
அப்போது அங்கு வந்த கவுன்சிலர், நிதீஷை மிரட்டி அனுப்பி வைத்தார். பின் ஹோட்டலில் நடந்த விஷயத்தை பாக்கியா வீட்டில் சொன்னவுடன் எழில்- செழியன் இருவருமே கோபப்பட்டு நிதீஷ்வீட்டிற்கு போனார்கள். அங்கு நிதீஷ் மீண்டும் இனியாவை பற்றி ரொம்ப மோசமாக பேச, கொந்தளித்த செழியன்- எழில் இருவருமே நிதீஷை அடித்தார்கள். இதை பார்த்த நிதிஷின் அம்மா, போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார். பின் போலீஸிடம் இருந்து கோபிக்கு போன் வந்தது. நிதிஷ் அம்மா புகார் கொடுத்ததால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொன்னார்கள். இதைப் பற்றி கோபி, வீட்டில் செல்வதால் பாக்கியா ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கமிஷனர் அலுவலகத்திற்கு வர சொன்னதால் பாக்கியா, கோபி, எழில், செழியன் நான்கு பேருமே போகிறார்கள். அதற்கு பின் சுதாகரும் அவருடைய மனைவியுமே கமிஷனர் ஆபீஸ்க்கு வந்திருக்கிறார்கள். அப்போது நிதிஷ் அம்மா, என் மகனை அடித்ததற்காக பாக்கியா குடும்பத்தின் மீது கேஸ் போட சொல்கிறார். உடனே பாக்கியா, என் மகளை நிதிஷ் ரொம்பவே தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார். அதனால் தான் கோபத்தில் அடித்திருப்பார்கள். மற்றபடி என் மகன்கள் அடிதடிக்கு போக மாட்டார்கள் என்கிறார். செழியன், இனிமேல் நிதீஷ் உடன் இனியா சேர்ந்து வாழ மாட்டாள் என்கிறார். அதற்கு திமிராக நிதிஷ் அம்மா பேசுகிறார். பாக்கியா, இவர்கள் எங்கள் குடும்பத்தை ஏமாற்றி கல்யாணம் செய்து விட்டார்கள் என்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்கு சுதாகர், சொத்துக்காக இவர்கள்தான் தன் மகள் காதலித்த விஷயத்தை மறைத்து என் மகன் போதைப்பொருளுக்கு அடிமையானவன் என்று தெரிந்தும் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்று பொய் மேல் பொய் சொல்கிறார்கள். பின் இரண்டு தரப்பிலும் வாக்குவாதம் அதிகமாகிறது. கடைசியில் உயர் அதிகாரி, 2 குடும்பத்தின் மீதுமே கேஸ் போட்டால் தேவையில்லாத பிரச்சினை தான். இனிமேல் நிதிஷ் இனியாவை தொந்தரவு செய்ய மாட்டான். நீங்களுமே நிதிஷ் விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று இரண்டு ரெண்டு குடும்பத்திடம் கையெழுத்து வாங்கி விடுகிறார்கள். பின் வீட்டிற்கு வந்த பாக்கியா போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு இனியா ரொம்பவே ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






