விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா- கோபி சண்டை போட்ட வீடியோவை பார்த்த ராதிகா ஷாக் ஆகி இருந்தார். இன்னொரு பக்கம் கல்லூரியில் அந்த வீடியோவால் இனியாவை எல்லோரும் கிண்டல் கேலி செய்தார்கள். இதனால் இனியா ரொம்ப வருத்தப்பட்டு தன்னுடைய அம்மாவிடம் பேசி புலம்பி இருந்தார். பின் கோபி வீட்டிற்கு போன இனியாவை, ராதிகா அம்மா வம்பிழுத்தார். கோபத்தில் இனியா, உங்களால் தான் எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை என்று ராதிகாவிடம் சண்டை போட்டார். இதனால் ராதிகா ரொம்ப மனம் உடைந்து விட்டார்.

பின் கோபி, இனியாவை தனியாக அழைத்துக் கொண்டு போனார். அப்போது இனியா, உங்கள் வீடியோ பார்த்து எல்லோருமே கேள்வி கேட்டார்கள். உங்கள் இருவர் சண்டையில் எங்களுடைய வாழ்க்கை தான் பாதிக்கப்படுகிறது. நீங்கள் ஏன் அம்மாவை பழிவாங்க இப்படி எல்லாம் செய்தீர்கள்? தாத்தாவின் கடைசி ஆசையை தான் அம்மா செய்தாங்க. அம்மாவை அழிக்கிறேன் என்று எங்களுடைய வாழ்க்கையும் அழிக்கிறீர்கள் என்று ரொம்ப எமோஷனலாக இனியா அழுது பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு கோபி மனம் உடைந்து விட்டார்.
பாக்கியலட்சுமி:
இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கேஸை வாபஸ் வாங்க சொல்லி கேட்க, பாக்கியா முடியாது என்று உறுதியாக இருந்தார். நேற்று எபிசோட்டில், இனியா பேசிய வார்த்தையால் கோபி ரொம்பவே மனமடைந்து இருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த கோபி, ராதிகாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளே போனார். உடனே ராதிகா, உங்க பிள்ளைகள் மட்டும் தான் ரொம்ப முக்கியம். எதற்கு உங்களை திருமணம் செய்தேன் என்று தெரியவில்லை? உங்களால் என் வாழ்க்கை போனது என்று கத்தி சண்டை போட்டார்.
நேற்று எபிசோட்:
கோபியும் பதிலுக்கு பதில் கொடுத்தார். ஒரு கட்டத்தில் கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று பேச, நிம்மதியில்லை என்றால் வெளியே போங்க என்று ராதிகா சொன்னார். ஆத்திரத்தில் கோபியும் வெளியே வந்து விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் இனியாவிற்கு பாக்யா ஆறுதல் சொல்லி இருந்தார். பின் காரில் வந்து கொண்டிருக்கும் போது கோபிக்கு நெஞ்சுவலி வந்தது. அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு ராதிகாவிற்கு போன் செய்தார். ஆனால், அவர் எடுக்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபி, நெஞ்சு வலி வந்து துடிக்கிறார். ராதிகாவிற்கு மீண்டும் மீண்டும் போன் செய்தும் அவர் எடுக்கவே இல்லை. பின் இனியா, செழியன் எல்லோருக்குமே கோபி போன் செய்தார். ஆனால், யாருமே எடுக்கவில்லை. பின் வேறு வழியில்லாமல் பாக்கியாவுக்கு போன் செய்து கோபி நடந்ததை சொல்ல, பாக்யாவும் நேரில் சென்று கோபி நிலைமை அறிந்து ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்க்கிறார். பின் இந்த விஷயத்தை எழிலிடம் சொல்ல, அவருமே ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
ராதிகாவிற்கு தகவலை சொல்ல பாக்கியா போன் செய்கிறார். ஆனால், அவருடைய போன் ரீச் ஆகவில்லை.
கோபியின் உடல்நிலை சீரிசாக இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர். பின் உண்மை அறிந்த ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு வந்து கவலைப்படுகிறார்கள். இந்த விஷயத்தை எப்படியாவது ராதிகாவிடம் சொல்ல வேண்டும் என்கிறார் பாக்கியா. ஆனால், ஈஸ்வரி கோபப்பட்டு திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






