விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியாவிற்கு ஃபோன் செய்த இனியா, ரெஸ்டாரன்ட் பற்றி கேட்டார். ஆனால், பாக்கியா உண்மை சொல்லாமல் ஏதோ சொல்லி சமாளித்தார். அதற்குப்பின் வீட்டில் ரெஸ்டாரண்டை பற்றி பாக்கியா பேசிக் கொண்டிருந்தார். கோபி, நாங்கள் எல்லோரும் உனக்கு சப்போர்ட் செய்வோம். நீ தேவை இல்லாமல் குழப்பிக்கொள்ளாதே என்று உண்மை தெரியாமல் பேசி இருந்தார். ஆனால். ஈஸ்வரி வழக்கம்போல் பாக்கியாவை தான் திட்டிக் கொண்டிருந்தார். இதனால் பாக்கியா கடுப்பாகி எழுந்து சென்று விட்டார்.

அதற்கு பின் எழில், தன்னுடைய புது படத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்த விஷயத்தை சொன்னவுடன் பாக்யா சந்தோஷப்பட்டார். மறுநாள் ரெஸ்டாரண்டின் பழைய ஓனர் வந்தார். அவர், ரெஸ்டாரண்டை காலி செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் பாக்கியா ரொம்பவே வேதனைப்பட்டார். உடனே அவர், எனக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்தது. அதனால் ரெஸ்டாரண்டை விற்கிறேன் என்றார். பின் இதை வீட்டில் பாக்கியா சொன்னார். வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாக்கியாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் ரெஸ்டாரண்டுக்கு வந்த பழைய ஓனர், நீங்கள் இப்பவே காலி செய்தாக வேண்டும். மளிகை பொருளுக்கு நான் பணம் கொடுத்துவிடுகிறேன். இங்கிருந்து கிளம்புகள் என்று ரொம்ப கோபமாக பேசி இருந்தார். பாக்கியாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ரொம்ப வேதனைப்பட்டார். பின் அந்த பழைய ஓனர், சுதாகரிடம் நின்று பேசுவதை பாக்கியா பார்த்து விட்டார். அதற்கு பின் சுதாகரிடம் பாக்கியா பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:
அப்போது சுதாகர், நீங்கள் ரொம்ப ஆணவத்தில் ஆடிவிட்டீர்கள். அதற்கான தண்டனை தான் உங்களுக்கு இது என்று ரொம்ப ஏளனமாக பேசி இருந்தார். இதனால் பாக்கியாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது. பின் வீட்டில் பாக்கியா, சுதாகர் தன்னுடைய ரெஸ்டாரண்டை அபகரித்த விஷயத்தை சொன்னார். ஆனால், ஈஸ்வரி வழக்கம் போல பாக்கியா பேச்சை கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் எழில், பழைய ரெஸ்டாரண்டின் ஓனரிடம் சுதாகர் வாங்கியதைப் பற்றி கேட்டார். அதற்கு அவர், என் கடன் தொல்லைக்காக தான் கொடுத்து விட்டேன் என்றார். பின் கோபி, சுதாகரிடம் பாக்கியா ரெஸ்டாரண்ட் வாங்கியதைப் பற்றி பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, சுதாகரிடம் ரெஸ்டாரன்ட் வாங்கிய விஷயத்தை பற்றி பேசுகிறார். அதற்கு சுதாகர், எனக்கு பாக்கியாவோட ரெஸ்டாரண்ட் எங்கு இருக்கு? என்று தெரியவில்லை. எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லை. சம்மந்தி தேவையில்லாமல் என் மீது பின் பழி போடுகிறார் என்று அப்படியே மாற்றிப் போய் சேருகிறார். பின் இதைப் பற்றி கோபி, பாக்கியாவிடம் சொல்கிறார். ஆனால், பாக்கியா, நீங்கள் எல்லோரும் அவரை நம்புங்கள். நான் நம்ப மாட்டேன். இது அவருடைய வேலை தான் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு போகிறார். அங்கு சுதாகரும் பழைய ஒனரும் பேசி இருப்பதை பார்த்து அவருக்கு கோபம் வருகிறது. உடனே சுதாகர், நான் இப்போது தான் இவரை பார்த்தேன். இவர் தான் இந்த ஓட்டலை வாங்கி இருக்கிறார் என்று வேறொருவரை கை காண்பித்து திருப்பவும் கோபியை ஏமாற்றி விடுகிறார். கோபியும் அதை நம்பி பாக்கியாவிடம் பேசுகிறார். வீட்டில் எல்லோரும் பாக்கியா சொல்வதை நம்பவில்லை. ஆனால், பாக்கியா எதையுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பின் ரெஸ்டாரண்டை காலி செய்து மொத்த பெண்களுமே வேலை போனதை நினைத்து பாக்கியாவிடம் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






