ராதிகாவின் புடவையை வாயில் கவ்வி இருக்கும் கோபி – கொஞ்சம் ஓவராதா போறாங்களோ

0
1073
baakya
- Advertisement -

இல்லத்தரசிகளின் பேவரேட் சீரியல்களின் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் விளங்கி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்லையில் வகிக்கும் தொடர்களில் பாக்கியலட்சுமியும் ஒன்று. அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு குடும்ப தலைவியின் நிகழ்வுகளை எதார்த்தமாக பாக்கியலட்சுமி சீரியலில் இயக்குனர் வெளிக்காட்டி இருக்கிறார். இந்த சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகி குடும்பத்திற்காக எல்லாத் தியாகங்களையும் செய்து உழைக்கிறார். இவருடைய கணவர் கோபிதந்தையின் வற்புறுத்தலால் ஆகியவை பாக்கியாவை திருமணம் செய்கிறார். ஆனால், திருமணமாகி குழந்தைகள் பிறந்து வளர்ந்து கூட பாக்கியாவை ஒரு வீட்டு வேலைக்காரி போல மட்டும் தான் நினைக்கிறார்.

-விளம்பரம்-
gopi-bhagkiyalaxmi

மேலும், கோபி–பாக்கியா இவர்களுக்கு செழியன், எழில் என்ற 2 மகன்களும், இனியா என்ற மகளும் உள்ளார்கள். மேலும், கோபி கல்லூரி படிக்கும் போது ராதிகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால், அப்பாவின் கட்டாயத்தால் பாக்கியாவை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்கிறார். இதனால் பாக்கியா மீது வெறுப்பையும், கோபத்தையும் மட்டுமே கோபி காட்டி வருகிறார். இந்த சூழ்நிலையில் மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு ராதிகாவை கோபி சந்திக்கிறார். ராதிகா திருமணமாகி விவாகரத்து செய்து உள்ளார் என தெரிந்தவுடன் கோபி ராதிகாவுடன் நண்பராக பழகுகிறார்.

- Advertisement -

ராதிகாவிற்கு மையூரி என்ற மகள் இருக்கிறார். மேலும், கோபி எப்படியாவது பாக்கியாவிடம் இருந்து பிரிந்து ராதிகாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று பல வகையிலும் முயற்சி செய்கிறார். தற்போது இந்த உண்மையெல்லாம் கோபியின் அப்பாவிற்கு தெரியவந்ததால் சீரியல் விறுவிறுப்புடன் செல்கிறது. இதனால் கோபி எப்போது மாற்றிக்கொள்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபி, ராதிகாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படத்தில் கோபி, ராதிகாவின் புடவையை வாயில் கவ்விக் கொண்டு இருக்கிறார்.ஏற்கனவே சீரியலில் கோபியின் செயல்கள் குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமாக கழுவி ஊற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் கோபி ராதிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்து தாறுமாறாக வறுத்து எடுத்து வருகிறார்கள். மேலும், இந்த புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்கள், இதெல்லாம் பாக்கியாவிற்கு தெரிந்தால் என்னவாகும்? இந்த வயதில் உங்களுக்கு இந்த விளையாட்டெல்லாம் தேவையா? என ரசிகர்கள் கிண்டல் அடித்தோம் கேலி செய்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement