விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி ‘ சீரியலில் கடந்த வாரம் பாக்கியா தன்னுடைய புதிய ஆர்டர் கான வேலைகளை சிறப்பாக முடித்து நல்லபடியாக சாப்பாட்டை அனுப்பி விட்டார். ரெஸ்டாரண்டிலும் பயங்கர கூட்டமாக இருந்தது. அப்போது ஒருவர், சாப்பாடு எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று சாப்பாட்டை கொட்டி ஒரே பிரச்சனை செய்தார். இவரை தொடர்ந்து அன்று சாப்பாடு வாங்கிய எல்லோரும், கெட்டு போன சாப்பாடு என்று பாக்யாவிடம் சண்டைக்கு போனார்கள். பாக்யாவிற்கு என்ன நடக்கிறது? என்ன சொல்வது? என்று புரியாமல் இருந்தார்.
இன்னொரு பக்கம் அந்த செப் மட்டும் சந்தோஷத்தில் கோபிக்கு நடப்பதை அப்டேட் செய்து கொண்டிருந்தார். உடனே கோபி, பாக்யா ரெஸ்டாரண்ட்டுக்கு வெளியே நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். சோசியல் மீடியா, பிரஸ், உணவுத்துறை அதிகாரிகள் எல்லோருமே பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வந்து விவாதம் செய்தார்கள். பின் அதிகாரிகள் பாக்யாவின் ரெஸ்டாரண்டை சோதனை செய்தார்கள். மக்கள் எல்லோருமே ஆவேசமாக கொந்தளித்து கத்தி இருந்தார்கள். மேலும், ரெஸ்டாரண்டில் நடந்த விஷயத்தை அறிந்து மொத்த குடும்பமே வேதனைப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
செழியன்,எழில் இருவருமே கடைக்கு வந்து எல்லோரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால், யாரும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் மக்கள் ஆவேசத்தில் பாக்கியாவை தாக்க போக, எழில் தடுத்து விட்டார். பின் பாக்கியா, நான் பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். எனக்கு டைம் கொடுங்கள் என்று பேசி இருந்தார். இந்த வாரம் உணவுத்துறை அதிகாரிகள், சோதனையில் கெட்டுப்போன பொருட்களை வைத்து சமைத்தது தெரிய வந்தது. உங்கள் ரெஸ்டாரன்ட்டுக்கு 50,000 பைன் என்று கடைக்கு சீல் வைத்தார்கள். இதனால் எல்லோருமே அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.
பாக்கியா ரெஸ்டாரண்ட் ப்ரச்சனை:
நேற்று எபிசோட்டில், சோசியல் மீடியா, நியூஸ் ஊடகங்கள் எல்லாமே பாக்கியா உணவு குறித்து தவறான செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது. வேதனையில் பாக்கியா அழுது புலம்ப, பழனிச்சாமி- எழில் எல்லோருமே அவருக்கு சமாதானம் சொன்னார்கள். இருந்தும் பாக்கியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, பாக்யாவின் ரெஸ்டாரண்டை குறித்து வரும் செய்தியை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு கொண்டிருக்க, ராதிகா, என்ன விஷயம்? என்று கேட்டதற்கு, நடந்ததை கோபி சொன்னார். ஆனால், ராதிகா அதை நம்பவில்லை.
நேற்று எபிசோட்:
பின் ஈஸ்வரி, என்னால் தான் இதெல்லாம் நடந்தது என்று புலம்ப பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். பின் தன்னிடம் சாப்பாடு வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க ஜெனி- பாக்யா இருவரும் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்ததை நினைத்து செல்வி வருத்தப்படுகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பணத்தை எப்படியாவது ரெடி பண்ண வேண்டும் என்று பாக்கியா வருத்தப்படுகிறார். இரவு முழுவதும் தூங்காமல் நடந்ததை நினைத்துக் கொண்டு இருக்கிறார் பாக்கியா. அதோடு இந்த பிரச்சனைக்கான காரணத்தை பற்றி யோசிக்கிறார்.
இன்றைய எபிசோட்:
மறுநாள் செல்வி, பாக்கியா வாக்கிங் போகிறார்கள். அப்போது கோபி சந்தோஷத்தில் அவரை கிண்டல் கேலியும் ஆக பேசுகிறார். பாக்யா எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க, உனக்கு என்ன தகுதி இருக்கு ? உனக்கு பொட்டலம் கட்ட கூட தகுதி இல்லை என்றெல்லாம் ரொம்ப மோசமாக பேசி இருந்தார். பாக்கியாவும் பதிலுக்கு கோபியிடம் சவால் விட்டு வருகிறார். பின் வீட்டில் ஜெனியின் அம்மா, ராமமூர்த்தி தாத்தா இருந்தபோது இருந்த சந்தோஷம் இந்த வீட்டில் இப்போ இல்லை. நான் யாரையும் குறை சொல்லவில்லை. ஆனால், ஜெனி அவளையும், குழந்தையும் கண்டு கொள்வது இல்லை என்று வருத்தப்பட்டு பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.