பிறந்தநாள் விழாவில் கோபியை அசிங்கப்படுத்திய ராமமூர்த்தி, ஈஸ்வரி சொன்ன வார்த்தை- பாக்கியலட்சுமி

0
325
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் தெரிந்து எல்லோரும் சந்தோஷப்பட்டு இருந்தார்கள். ஆனால், அமிர்தா குழந்தை பெற்றுக் கொள்ளாது குறித்து ஈஸ்வரி மோசமாக திட்டி இருந்தார். இதனால் அமிர்தா மனமுடைந்து எழில் இடம் சொல்ல, எழில் கோபப்பட்டு ஈஸ்வரியிடம் பேசி இருந்தார். பின் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொல்ல, எல்லோருமே அதிர்ச்சியானார்கள்.

-விளம்பரம்-

கடைசியில் எழில் வீட்டை விட்டு வெளியே போனார். இந்த விஷயத்தை அறிந்த கோபி, எழில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்று இருந்தார். ஆனால் எழில் முகம் கொடுத்து கூட பேசவில்லை. கடந்த வாரம் வீட்டில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, தாத்தாவின் பிறந்தநாளுக்கு வரவேண்டும் என்று கூப்பிட, அதற்கு எழில் வர மறுத்தார். உடனே கோபமாக ஈஸ்வரி, நீ வராதே என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

மேலும், எழில் வராததை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். பின் ராமமூர்த்தியின் 80 ஆவது பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே கோவிலுக்கு போய் இருந்தார்கள். இதை வெளியில் இருந்து பார்த்த கோபி, எதற்கு கிளம்புகிறார்கள்? என்ன வீட்டில் விசேஷம்? என்று குழப்பத்தில் செழியனுக்கு கால் செய்தார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. கோவிலில் தடபுடலாக தாத்தாவின் பிறந்த நாள் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது.

சீரியல் கதை:

தாத்தாவின் பிறந்தநாளுக்கு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். அப்போது எழில் வராததை குறித்து கேள்வி கேட்க, ஜெனிக்கு கோபம் வந்து பதிலடி கொடுத்தார். பின் தாத்தா- பாட்டி இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் போது எழில் வந்து நின்றார். இதை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. நேற்று எபிசோடில் கோபி, செழியனுக்கு கால் பண்ணி பேசி இருந்தார். அதற்கு செழியன், எங்கள் தாத்தாவின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

உடனே இதை கோபி சொல்ல, ராதிகா கோபப்பட்டு சண்டை போட்டார். கடைசியில் கோபி கோவிலுக்கு சென்றார். கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக, ராமமூர்த்தி கோபப்பட்டு பேசி இருந்தார். .இந்நிலையில் இன்றைய எபிசோடில், ஈஸ்வரி- ராமமூர்த்தி எவ்வளவு திட்டியும், அசிங்கப்படுத்தியும் கோபி கிளம்பாமல் அங்கே இருக்கிறார். பின் எல்லோருமே ஈஸ்வரி- ராமமூர்த்தி இடம் ஆசிர்வாதம் வாங்கி செல்கிறார்கள். இது எல்லாம் பார்த்து கோபி சந்தோசப்பட்டு போட்டோ எடுக்கிறார்.

இன்றைய எபிசோட்:

கடைசியில் கோபி ஆசிர்வாதம் வாங்க வந்தவுடன் இங்கிருந்து கிளம்பு, நாங்கள் ஆசிர்வாதம் செய்ய மாட்டோம் என்று கோபப்பட்டு தாத்தா பேசுகிறார். பின் கோபி கிஃப்ட் கொடுத்ததற்கு, ராமமூர்த்தி தூக்கி வீசிவிட்டு சென்று விடுகிறார். அதற்கு பின் கோபி, தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இருந்தாலுமே ஈஸ்வரி கோபமாக திட்டி விடுகிறார். இதற்கெல்லாம் காரணம், பாக்யா தான் என்று கோபி கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement