விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ரெஸ்டாரண்டில் இனியா தன்னுடைய அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருக்க, அந்த சமயம் பார்த்து ஆகாஷ் வந்தார். இனியா- ஆகாஷ் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த செல்விக்கு பயங்கர கோபம் வந்தது. பின் ஆகாஷை அழைத்து, செல்வி கண்டித்தார். நேற்று எபிசோட்டில் எழில்- செழியன் இருவரும் வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்று கோபி சொன்னவுடன் ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், பாக்கியா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

பின் இதைப்பற்றி பாக்கியா, செல்வி இடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், என் மகன்களை நான் என்னுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டேன். கோபிக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று புலம்பி இருந்தார். மறுநாள் காலையில் பாக்கியா, எல்லோரும் வீட்டிற்கு வருவதால் மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தார். முதலில் செழியன்- ஜெனி இருவரும் வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் கோபி- ஈஸ்வரி சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் எழில்- அமிர்தா வந்தார்கள். மொத்த குடும்பமே கலகலப்பாக இருந்தது. ஆனால், பாக்கியா எதுவும் பேசாமல் தன்னுடைய வேலையில் பிஸியாக இருந்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் கோபி, உனக்கு இப்போது சந்தோஷமா, நான் கிளம்புவதற்குள் எல்லோரையும் ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்தேன் என்று சொன்னார். இது எல்லாம் கேட்டவுடன் பாக்கியாவுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் அவர், என் மகன்கள் என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று உங்களிடம் சொன்னேனா? உங்கள் அம்மா என்னென்ன பிரச்சனை எல்லாம் செய்யப் போகிறார்கள் பாருங்கள் என்று ரொம்ப ஆவேசமாக பேசி இருந்தார். கோபிக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கு பின் ஈஸ்வரி, பாக்கியா ரொம்ப திமிர் பிடித்தவளாக இருக்கிறார்.

நேற்று எபிசோட்:
சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் அவளுடைய குணமே மாறிவிட்டது. பிள்ளைகள் வீட்டிற்கு வந்ததை நினைத்து வேதனைப்படுகிறார் என்று வழக்கம் போல் திட்டி பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பின் எல்லோருமே சந்தோசமாக சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது எழில்-அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? நிலாவிற்கு துணை வேண்டாமா? என்று ஆரம்பித்தார். இதை பார்த்தவுடன் பாக்கியாவிற்கு கோபம் வந்து கோபியை முறைத்தார். கோபிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எழில்-அமிர்தா இருவருமே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, எழில் சினிமாத்துறையில் இருக்கிறான். அவன் விருப்பப்படி குழந்தை பெற்றுக்கொள்ளட்டும் என்று தன்னுடைய அம்மாவிடம் எடுத்துச் சொல்ல புரிய வைக்க பார்க்கிறார். ஆனால், ஈஸ்வரி ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் இனியா, ஆகாசிடம் போன் பேசி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பாக்கியா வந்தவுடன் போனை இனியா ஆஃப் பண்ணி விடுகிறார். பின் பாக்கியா தூங்கிய பிறகு ரகசியமாக இனியா போன் பேசுகிறார். மறுநாள் காலையில் பாக்கியா ரெஸ்டாரண்ட் செல்வதற்காக மும்முரமாக சமைத்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் பார்த்து கோபிக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதற்குப்பின் இனியா கல்லூரிக்கு நேரமாகவே கிளம்புகிறார். பின் ஒவ்வொருவரிடமும் காசு வாங்கிப் போகிறார். இதையெல்லாம் பார்த்து கோபிக்கு சந்தேகம் வருகிறது. உடனே அவர், இனியாவை தன்னுடைய காரிலேயே அழைத்து செல்கிறார். ஆனால், இனியா புக் வாங்கனும் என்று இறங்கிக் கொள்கிறார். இனியாவிற்கு தெரியாமல் கோபி பாலோ செய்கிறார். அப்போது ரெஸ்டாரண்டில் இனியா, ஆகாசுடன் பேசி இருப்பதை கோபி பார்க்கிறார். பின் கோபியை பார்த்தவுடன் இனியா-ஆகாஷ் இருவரும் ஷாக் ஆனார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






