விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியை பார்க்க வந்த ராதிகாவை உள்ளே விடாமல் ஈஸ்வரி தடுக்க, பாக்யா உள்ளே அனுப்பி வைத்தார். ஆனால், கோபி தூங்கிக் கொண்டிருந்ததால் ராதிகா எதுவும் பேசாமல் கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா- கோபியை சேர்த்து வைப்பதற்காக தேவையில்லாத வேலைகளை ஈஸ்வரி செய்தார். இதை கவனித்த செல்வி, பாக்யாவிடம் சொல்ல, அவர் கோபப்பட்டு பேசி இருந்தார். பின் தனக்கு கிடைத்த ஆர்டரை பற்றி பாக்கியா வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கோபி ஐடியா கொடுத்தார்.
இதை கேட்டு எல்லோருமே பாராட்ட, பாக்கியா மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் எல்லோரும் தூங்கிய பிறகும் பாக்யா வேலை செய்து கொண்டிருந்தார். அதை பார்த்த கோபி வருத்தப்பட்டு அவரிடம் பேசி இருந்தார். ஆனால், பாக்யா, அதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் பார்க்கில் பாக்கியாவிடம் கோபி தனியாக பேச முயற்சித்தார். கோபி, உனக்குள் நிறைய திறமைகள் இருக்கு. ஒருவேளை நான் உன்னை சரியாக புரிந்து இருந்தால் நம்ம ரெண்டு பேரும் பிரிந்து இருக்கவே மாட்டோம்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் ராதிகா, வீட்டிற்கு வாருங்கள். ஏன் அங்கே வரவில்லை என்று கேட்க, இங்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. உடம்பு சரியானவுடன் நான் வந்து விடுகிறேன். என்னுடைய அம்மா, பிள்ளைகள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். நான் பாக்கியாவை பழிவாங்க நினைத்து தப்பு என்று தன்னுடைய குடும்பத்தை பற்றியே கோபி பேசி இருந்தார். இதனால் ராதிகாவிற்கு இன்னும் கோபம் அதிகமாகி வெளியில் கிளம்பி விட்டார்.
நேற்று எபிசோட்:
அப்போது ஈஸ்வரி, நீ கோபியை விவாகரத்து செய்துவிடு. இனி உன்னுடன் அவன் வரமாட்டான் என்று சொல்ல, ராதிகா இன்னும் கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்கு பின் செழியன், தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை வீட்டில் சொல்ல எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அந்த சமயம் பார்த்து பாக்யா வீட்டிற்கு வந்தார். பின் அவர், தனியாக பேச கோபியை அழைத்து போனார். அப்போது பாக்கியா, காபி கொடுத்துவிட்டு உங்களுடைய உடம்பு எப்படி இருக்கிறது என்று கேட்டு இருந்தார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு கோபி, உடம்பு நன்றாக இருக்கிறது. இதை நான் உன்னிடம் எதிர்பார்த்து இருந்தேன் என்று சொன்னார். உடனே பாக்கியா, எப்போது உங்க வீட்டுக்கு போகிறீர்கள்? உங்களால் ராதிகா ரொம்ப கஷ்டப்படுகிறார். இங்கே நீங்க தங்க முடியாது என்று கேட்க, கோபியால் எதுவுமே பேச முடியவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோபி, காபி போட்டு கொண்டு வந்து பாக்யாவிடம் கொடுக்கிறார். ஆனால், அவர் குடிக்காமல் வாஷ்பேஷனில் ஊற்றி விடுகிறார்.
சீரியல் ப்ரோமோ:
அதற்குப்பின் கோபியிடம் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது பாக்கியா, நீங்கள் ஒரு வாரத்தில் வீட்டை விட்டு போவதாக சொன்னீர்கள், இன்னும் ஏன் கிளம்பவில்லை? என்று கேட்க, எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். பின் கோபி, பாக்கியா சொல்வது போல் நான் கிளம்புவது தான் நல்லது என்று சொல்லி நெஞ்சுவலி வந்தது போல செய்கிறார். எல்லோருமே பதறி போய் டாக்டரை வரவேற்கிறார்கள். அதற்கு பின்
ஈஸ்வரி, எனக்கு இருப்பது ஒரு மகன். அவனின் உயிரை காப்பாற்று. அவனை வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லாதே என்று கெஞ்சி அழுகிறார். பாக்கியா என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக நிற்கிறார்.