விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சுதாகர், எங்களுக்கு இனியவை பிடித்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னவுடன் வீட்டில் எல்லோருமே யோசித்தார்கள். உடனே பாக்கியா, அதற்குள் என்ன அவசரம்? பொறுமையாக செய்யலாம் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, எங்களுக்கு பரிபூரண சம்மதம் என்று சொன்னார். பின் சுதாகர், திருமண செலவுகளை நான் பார்த்து கொள்கிறேன் என்றார். அதன் பின் வீட்டில் பாக்கியா, என்னுடைய ரெஸ்டாரண்டை விலைக்கு வாங்க நினைத்தார் சுதாகர். அது முடியாது என்று சொன்னவுடன் தான் இனியாவை பெண் கேட்டு வந்தார் என்றவுடன் ஈஸ்வரி- கோபி ஏற்றுக்கொள்ளவே இல்லை.

அப்போது ஈஸ்வரி, இந்த திருமணம் நடந்தே தீரும் என்று சொன்னார். உடனே இனியா, நான் அவர்கள் வருவதற்கு தான் ஒத்துக்கொண்டேன். மற்றபடி எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் ஆகாஷை தான் காதலிக்கிறேன். அவன் கலெக்டர் ஆகுவதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னவுடன் எல்லோரும் ஷாக் ஆனார்கள். பின் இனியவை கோபி தனியாக அழைத்து சென்று சுதாகர் குடும்பத்தை பற்றி பேசி இருந்தார். ஆனால், இனியா ஏற்றுக்கொள்ளவே இல்லை. நான் ஆகாஷை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்தார். இன்னொரு பாக்யா, வீட்டில் நடந்ததை பற்றி செல்வி இடம் சொல்லி புலம்பி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
செல்வி, ஆகாஷ் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது செல்வி, இனியாவிற்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். நீ அவளை மறந்துவிடு. தேவையில்லாமல் ஆசைப்படாதே. உன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி வேலைக்கு போற வழியை பாரு என்று சொன்னவுடன் ஆகாஷ் ரொம்பவே மனமுடைந்து விட்டார். பின் இனியவை நினைத்து அழுதார். இன்னொரு பக்கம் இனியா, ஆகாஷை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது பாக்கியா, நீ திருமணத்தைப் பற்றி எல்லாம் யோசிக்காதே, தைரியமாக இரு என்று ஆறுதல் சொன்னார். ஆகாஷ் கண்டிப்பாக கலெக்டர் ஆகுவான் என்று சொன்னவுடன் பாக்கியா, நீ உன்னுடைய விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்து என்று சொன்னார்.

கடந்த வாரம் எபிசோட்:
மறுநாள் காலையில் செழியன், அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடலில் இருந்தார். இனியாவை வர சொல்கிறார் என்று சொன்னவுடன் பாக்கியா,
இது உங்க அப்பா போடும் நாடகம் என்று சொன்னார். பின் ஹாஸ்பிடலுக்கு சென்ற இனியாவிடம் கோபி, நான் எத்தனை நாள் இருப்பேன் என்று தெரியவில்லை. இது நல்ல சம்மந்தம். தயவு செய்து திருமணத்திற்கு ஒத்துக் கொள். எனக்கு உன்னுடைய வாழ்க்கை நினைத்துதான் கவலையாக இருக்கிறது. நீ சம்மதம் சொன்னால் அதில் நான் பாதி குணமாகி விடுவேன் என்று என்னென்னவோ சொன்னார். ஆனால், இனியாவால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள சொல்லி அப்பா, பாட்டி இருவருமே ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று தன்னுடைய அம்மாவிடம் புலம்புகிறார். உடனே பாக்கியா, எதுவாக இருந்தாலும் நீ முடிவு எடு. யாருடைய பேச்சையும் கேட்காதே. என்னுடைய திருமணத்திலும் இப்படித்தான் என்னுடைய பெற்றோர்கள் அவசர அவசரமாக முடிவெடுத்தார்கள் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். அதற்குப்பின் இனியாவை வீட்டிற்கு வரவைத்து, ரொம்ப நல்ல பையன் .

சீரியல் ட்ராக்:
உன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று மாற்றி மாற்றி ஈஸ்வரி- கோபி இருவருமே பேசுகிறார்கள். இனியாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் சுதாகர் வீட்டில் அவருடைய மனைவிக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. அவர் தன்னுடைய கணவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். உடனே சுதாகரின் மகன், ரெஸ்டாரன்ட் வாங்குவதற்காக தான் இந்த திருமணமே என்று சொல்கிறார். மறுநாள் காபி ஷாப்புக்கு இனியாவை கோபி அழைத்துக் கொண்டு வருகிறார். அப்போது சுதாகரின் மகனும் வருகிறார். இருவருமே தனியாக பேச வைத்து கோபி சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






