விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, பாக்கியா கடை மூடும் வரை அங்கே இருந்து அவருக்கு பாதுகாப்பாக வீடு வரை வந்தார். இன்னொரு பக்கம் சுதாகரிடம் இனியா, ரெஸ்டாரன்ட் பெயர் மாற்றி விட்டீர்களா? என்று கேட்டார். சுதாகர் ஆமாம் என்று சொன்னார். பின் இனியா, நான் ரெஸ்டாரண்டை பார்த்துக்கொள்கிறேன் என்றவுடன் சுதாகருக்கு கோபம் வந்தது. வழக்கம் போல நித்திஷ் இனியாவை திட்டினார். இனியா அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் நான் கொஞ்சம் நேரமாவது ரெஸ்டாரண்டுக்கு போகிறேன் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்டில் கவுன்சிலரை கட்சியில் இருந்து தூக்கி விட்டார்கள். இதை அறிந்த செல்வி, பாக்கியாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கோபத்தில் வந்த கவுன்சிலர் உன்னால்தான் என்னை கட்சியில் இருந்து தூக்கி விட்டார்கள். உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன். நீ எப்படி நிம்மதியாக இருக்கிறாய் என பார்க்கிறேன் என்று சவால் விட்டார். ஆனால், பாக்கியா அதைப் பற்றி பெரிதாக கவலை கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் பாக்கியாவின் ரெண்டு ரெஸ்டாரன்ட்டையும் சுதாகர் தான் வாங்கி இருக்கிறார் என்ற உண்மை இனியாவிற்கு தெரிந்து விடுகிறது.
பாக்கியலட்சுமி:
பின் இதைப்பற்றி இனியா, சுதாகரிடம் கேள்வி கேட்டார். உடனே சுதாகர், ஆமாம் நான்தான் வாங்கினேன். உன்னுடைய அம்மாவின் டீக்கடையையும் மூடச் சொல்லு என்று கோபமாக சொன்னார். நிதிஷ், இனியாவை தான் திட்டி இருந்தார். உண்மை அறிந்த உடன் வேதனையில் இனியா, பாக்கியாவை பார்க்க வந்தார். அப்போது இனியா, ரெஸ்டாரண்டை சுதாகர் வாங்கின விஷயத்தை பற்றி சொன்னார். அதற்கு பாக்கியா, எனக்கு ஏற்கனவே தெரியும். நீ அதைப் பற்றி எல்லாம் யோசிக்காதே. பெரியவர்கள் விஷயத்தில் தலையிடாதே.

நேற்று எபிசோட்:
உன்னுடைய வாழ்க்கையை பார் என்று அறிவுரை சொன்னார். இருந்தாலுமே இனியா குற்ற உணர்ச்சியில் ரொம்ப வருத்தப்பட்டார். பின் இனியா முகம் வாடி இருப்பதால் கோபி விசாரித்தார். அப்போது வீட்டில் நடந்த உண்மை எல்லாம் இனியா சொன்னார். இதைக் கேட்டவுடன் கோபிக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. பின் அவர், நான் உன் மாமனாரிடம் பேசுகிறேன் என்று இனியாவிற்கு ஆறுதல் சொன்னார். பின் சுதாகரை சந்தித்து கோபி பேசி இருந்தார். அப்போது கோபி, இனியாவிடம் பாக்கியா ஓட்டலை மூட சொன்னீர்களாமே? என்று கேட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, பாக்கியா அடிமட்டத்திலிருந்து வந்தவள். அவள் இந்த நிலைமைக்கு காரணமும் நான் தான். அதனால் ஓட்டல் எல்லாம் மூட முடியாது என்று சொன்னவுடன் சுதாகர் எதுவுமே பேச முடியவில்லை. கோபி சொன்னதற்கு சம்மதிக்கிறார். பின் இனியா வேலைக்கு செல்வதை பற்றி கோபி பேசுகிறார். உடனே சுதாகர், வேலைக்கெல்லாம் போக தேவையில்லை. அப்படி செய்வதாக இருந்தால் வேறொரு வேலையை செய்யட்டும் என்று சொன்னார். கோபியால் எதுவும் பேச முடியவில்லை அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் ஹோட்டலில் இனியா தன்னுடைய அம்மாவிற்காக உதவி செய்து கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது அங்கு வந்த ஆகாசிடம் இனியா நலம் விசாரிக்கிறார். அந்த சமயம் பார்த்து நிதிஷ் வந்து விடுகிறார். நிதிஷ் எதுவும் சொல்லாமல் இனியாவை அங்கிருந்து அழைத்து வந்து விடுகிறார். அதற்குப்பின் பாக்கியாவின் ஓட்டலுக்கு வழக்கம் போல் வம்பு இழுக்க கவுன்சிலர் வருகிறார். உடனே பாக்கியா, அமைச்சர் இடம் பேசுவது போல் போனில் டிராமா செய்கிறார். இதைக் கேட்டவுடன் கவுன்சிலர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி விடுகிறார். கடைசியில் இனியா, நிதிஷ் இருவரும் ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நிதிஷ், ஆகாஷை பற்றி கேட்கிறார். இனியாவால் எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். நிதிஷ், அவன் உன்னுடைய எக்ஸ் தானே என்று சொன்னவுடன் இனியா ஷாக் ஆனார். இத்துடன் சீரியல் முடிகிறது.






