விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் ரெஸ்டாரண்ட் சர்ச்சையால் பாக்கியா மனம் உடைந்து விட்டார். இன்னொரு பக்கம் செழியனுக்கு வேலை போய் விட்டது. அதேபோல் சினிமா வாய்ப்பை தேடி எழில் அலைந்து திரிகிறார். பின் பாக்கியா, வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வைத்து பணத்தை ஏற்பாடு செய்தார். அதற்கு பிறகு தனக்கு தெரிந்தவர் மூலம் வட்டிக்கு பணம் கேட்டு ரெடி பண்ணார். ஆனால், அதற்குள் ரெஸ்டாரண்டில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து இருந்தார்கள்.
ஒரு வழியாக எல்லோருக்குமே பாக்கியா பணத்தை செட்டில்மெண்ட் செய்து விட்டார். இதை அறிந்த கோபி கோபப்பட்டு பாக்கியாவை அழிக்க நினைக்கிறார். அப்போது வந்த செழியன், வேலை பற்றி கோபியிடம் கேட்க, அவர் பொய்யான வாக்குறுதி கொடுத்து அனுப்பி இருந்தார். இன்னொரு பக்கம் இனியா கல்லூரியில் நடன பயிற்சி மும்முரமாக நடக்கிறது. டான்ஸ் மாஸ்டர் வேண்டும் என்று கல்லூரியில் சொல்வதால் இனியா வருத்தப்பட்டார். அதற்குப்பின் செழியன், எழிலை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி அழுது புலம்பி இருந்தார். இதை பார்த்த கோபி, செழியனிடம் விசாரித்தார்.
பாக்கியலட்சுமி:
முதலில் உனக்கு வேலையை ரெடி பண்ணலாம். அதற்குப் பிறகு எழிலை பார்க்கலாம் என்று ஏதோ சொல்லி சமாளித்தார் கோபி. டான்ஸ் மாஸ்டர் வேண்டும். அவரை வைத்து தான் பயிற்சி எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சொன்னதாக இனியா பாக்யாவிடம் சொல்ல, அவர் ஒத்து கொள்ளவில்லை. பின் கல்லூரியில் இனியா சொன்ன காரணத்தை அவர் ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதனால் இனியா ரொம்ப வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் கோபியை சந்திக்க வந்த நபரிடம் எழில் படம் எடுக்கும் விஷயத்தை சொல்ல, அவரும் சம்மதித்தார்.
நேற்று எபிசோட்:
இதை எல்லாம் வீட்டில் ராதிகாவிடம் சொல்லி கோபி சந்தோஷப்பட, ராதிகா அதை கண்டுகொள்ளாமல் தூங்கி விட்டார். நேற்று எபிசோட்டில் கோபி, எழிலுக்காக தயாரிப்பாளரை சந்தித்த விஷயத்தை செழியன் இடம் சொல்ல, அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, தன்னுடைய அப்பாவை பெருமையாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா ரெஸ்டாரன்ட்டை திறந்திருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்தவர்கள் குழப்பத்தில் இருந்தார்கள். வியாபாரம் ஆகுமா? என்ற சந்தேகத்தில் இருந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் கல்லூரியில் வர சொன்னதால் பாக்கியா சென்றிருந்தார். அப்போது நடன மாஸ்டரை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னதால் பாக்யாவும் ஒத்துக் கொண்டு நடனம் மாஸ்டரை சந்திக்கிறார். ஆனால், அவர் அதிகமாக செலவாகும் என்று சொன்னதால் பாக்கியா வந்து விட்டார். வகுப்பில் சேர்த்துவிட சொல்லி இனியா ரொம்ப கெஞ்சுகிறார். ஆனால், பாக்யா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதை பார்த்த கோபி இனியாவிடம் பேச நினைக்க, ராதிகா தடுத்து விட்டதால் அவர் அமைதியாகி விட்டார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் வீட்டில் நிறைய செலவிருக்கிறது. அதனால் உன் நடன வகுப்பிற்கு காசு கொடுக்க முடியவில்லை என்று பாக்யா சொல்ல, இனியா ரொம்ப வருத்தப்பட்டார். பின் நடந்த விஷயத்தை இனியா தன்னுடைய அப்பாவிடம் போன் செய்து சொல்கிறார். உடனே அவர், டான்ஸ் கிளாஸ்க்கு சென்று பீசை கொஞ்சம் குறைக்க சொல்லி அவரை சேர்த்து விடுகிறார். உடனே இனியா சந்தோசத்தில், நீங்கள் தான் இந்த உலகத்தில் சிறந்த அப்பா என்று சொல்கிறார்.