எழிலை வைத்து கோபி வீசிய வலையில் சிக்குவாரா பாக்கியா? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
141
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா பைனல் ஆடிஷன் போட்டியில் வெற்றி பெற்றார் என்றவுடன் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அப்போது இனியா, இதற்கு காரணம் தன் அப்பா என்று புகழ்ந்து பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு பாக்கியா மனம் உடைந்து அங்கிருந்து கிளம்ப, இதை பார்த்த கோபி சந்தோஷப்பட்டு இருந்தார். மறுநாள் ஜெனி- அமிர்தா இருவருமே பாக்யா, ஈஸ்வரியை வெளியில் அழைத்து போனார்கள். எல்லோருமே ஜாலியாக பீச்சில் விளையாடி சந்தோஷமாக இருந்தார்கள்.

-விளம்பரம்-

பின் எல்லோரும் சந்தோஷமாக ஆட்டம் பாட்டம் என்று கவலையை மறந்து இருந்தார்கள். இன்னொரு பக்கம் கோபி, தன் பிள்ளைகளை நினைத்து சந்தோஷத்தில் ராதிகாவிடம் பேசி இருந்தார். அப்போது செழியன், இனியா என் பக்கம் வந்து விட்டார்கள். எழிலையும் எப்படியாவது என் பக்கம் இழுத்து பாக்யாவை தனிமரம் ஆக்குவேன். அவளை அழிக்காமல் விடமாட்டேன் என்று வன்மத்தோடு பேச, ராதிகா அறிவுரை சொன்னார். ஆனால், அதை கோபி ஏற்றுக்கொள்ளவில்லை.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

நேற்று எபிசோடில் எழில், பாக்கியா வீட்டில் எல்லோரையும் வரவைத்து தன்னுடைய படத்திற்கு பூஜை போடுவதைப் பற்றி சொல்ல, எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், ஈஸ்வரி, நான் வரவில்லை என்று சொன்னதால் எழில் ரொம்ப வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் கோபி தயாரிப்பாளரிடம் பூஜைக்கு வருபவர்களின் பட்டியல் வாங்கி பார்த்து தன்னுடைய அம்மா பெயர் இல்லை என்பதால் வருத்தப்பட்டு அவரை வர வைக்க சொன்னார்.

நேற்று எபிசோட்:

பின் பாக்கியா பூஜைக்கு வரக்கூடாது என்று கோபி சொல்ல, தயாரிப்பாளரும் ஒத்து கொண்டார்.
இன்னொரு பக்கம் பாக்கியா, ஆயுத பூஜை ஸ்பெஷல் ஆஃபர் அறிமுகம் செய்கிறார். ஆனால், ரொம்ப கம்மி விலைக்கு சாப்பாடு கொடுப்பதால் எல்லோருமே வேண்டாம் என்று சொல்கிறார்கள். இதை எப்படியாவது சுதப்பி பாக்கியாவை மாட்டி விட வேண்டும் என்று அந்த செப்பும் திட்டம் போடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி- புதுசெப்- செந்தில் மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அப்போது பாக்யாவின் புது ஆர்டரை எப்படியாவது ஒலித்து கட்டி இந்த முறை எழ முடியாத அளவிற்கு பண்ண வேண்டும் என்று கோபி சொல்கிறார். உடனே அந்த செப்பும் ஒத்துக்கொள்கிறார். இதை எல்லாம் பார்த்து செந்தில், கோபியை திட்டுகிறார். ஆனால், அவர்கள் இருவரும் கேட்கவில்லை. மறுநாள் தன்னுடைய ஆர்டருக்கு தேவையான வேலையெல்லாம் பாக்யா மும்முரமாக செய்கிறார். ஆனால், அந்த செப் சொல்வதை பாக்கியா எதுவும் கேட்கவில்லை.

சீரியல் ட்ராக்:

இதெல்லாம் பார்த்து அவர் கடுப்பாகிறார். செல்வியும் அந்த செப்பின் மேலே கண் வைத்து இருக்கிறார். இன்னொரு பக்கம் படத்தின் பூஜைக்காக எல்லோருமே மும்முரமாக ரெடியாகி கிளம்புகிறார்கள். ஈஸ்வரி வரவில்லை. பாக்கியா தவிர பூஜையே நடக்கும் இடத்திற்கு எல்லோருமே வந்து விடுகிறார்கள். அப்போது கோபி, பாக்கியா இங்கு வரக்கூடாது என்ற கண்டிஷனை எழிலிடம் சொல்லிவிடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் சொல்ல, அவரும் ஒத்துக்கொள்கிறார். எழில் தன் அம்மாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement