விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பிரச்சனைகளுக்கு பின் பாக்கியா மீண்டும் ரெஸ்டாரன்ட்டை திறந்திருந்தார். நடன மாஸ்டரை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று இனியா சொன்னார். ஆனால், பாக்கியா ஒத்துக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் எழில், தன்னுடைய கதையைப் பற்றி தயாரிப்பாளிடம் சொல்ல அவரும் ஒத்துக்கொண்டார். இதை எழில், அமிர்தா-பாக்கியாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். இந்த வாரம் தன்னுடைய அப்பா கோபியிடம் சொல்லி இனியா டான்ஸ் கிளாசில் சேர்ந்தார்.
இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் புதிய ஆர்டர் எடுப்பதை பற்றி பாக்கியா பேசிக் கொண்டிருந்தார். அப்போ அந்த புது செப் மீண்டும் வேலைக்கு வந்து சேந்தார். இன்னொரு பக்கம் எழில் தன்னுடைய புது தயாரிப்பாளரை சந்தித்து கதையை பற்றி பேசி இருந்தார். இதையெல்லாம் ஒழிந்து நின்று கோபி கேட்டு சந்தோஷப்பட்டார். பின் தன்னுடைய மகள் கல்லூரிக்கு சென்று நடன வகுப்பை பற்றி கோபி விசாரிக்க, இனியாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.
பாக்கியலட்சுமி:
டான்ஸ் கிளாஸில் இனியா மும்முரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இதை கோபி- ராதிகா இருவருமே பார்த்து பாராட்டி இருந்தார்கள். பின் கோபி, புது செப்பை சந்தித்து பேசி இருந்தார். அப்போது பாக்கியா எடுக்கப் போகும் புது ஆர்டரிலும் பிரச்சனை செய்ய இருப்பதை பற்றி செப் சொல்ல, கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார். இதையெல்லாம் கேட்டு செந்தில் ரொம்பவே பதறி இருந்தார். மேலும், இனியாவின் டான்ஸ் காம்பிடிஷன் நடைபெற்றது.
நேற்று எபிசோட்:
அதில் பாக்கியா- கோபி குடும்பத்தினர் கலந்து கொண்டிருந்தார்கள். கடைசியில் பைனல் ஆடிஷன் போட்டியில் இனியா வெற்றி பெற்றார் என்றவுடன் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். நேற்று எபிசோட்டில் இனியா, தன்னுடைய அப்பாவை தான் கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டு, மேடை அழைத்தும் சென்று இருந்தார். அதோடு கோபி தான் இதற்கெல்லாம் காரணம் என்று புகழ்ந்து பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு பாக்கியா மனம் உடைந்து அங்கிருந்து கிளம்பினார். இதை பார்த்த கோபி சந்தோஷப்பட்டு பாக்கியாவை வெறுப்பேத்தி பேசி இருந்தார்.
சீரியல் ட்ராக்:
பின் இனியா, வெற்றி பெற்றதை தன்னுடைய பாட்டி இடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். அப்போது பாக்கியா, எப்போது நீ மாஸ்டரை வைத்தாய்? என்று கேட்டதற்கு, அப்பா தான் எனக்கு ரெடி பண்ணி கொடுத்தார் என்று இனியா பொய் சொன்னார். உடனே பாக்கியா கோபப்பட்டு பேச, செழியன் ‘
தடுத்து நிறுத்தி இனியாவை கூட்டிக்கொண்டு போனார். பாக்யாவால் எதுவும் பேச முடியாமல் அமைதியாகி விட்டார். மறுநாள் காலையில் ஜெனி- அமிர்தா இருவருமே பாக்யா, ஈஸ்வரியை தயாராக சொல்லி அவர்களை வெளியில் அழைத்துச் செல்ல பார்க்கிறார்கள்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், படத்தின் பூஜைக்காக தயாரிப்பாளர் ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். அதில் ஈஸ்வரி பெயர் இல்லை என்ற உடன் கோபி, அவரை வர வைக்க சொல்கிறார். ஆனால், பாக்யா இந்த பூஜைக்கு வரக்கூடாது என்று தயாரிப்பாளரிடம் கோபி சொல்ல, அவருமே ஒற்றுக்கொள்கிறார். பின் கோபி, செழியன்- இனியாவை என் பக்கம் வரை வைத்து விட்டேன். எழிலும் என் பக்கம் வந்து விடுவான். ரெஸ்டாரண்ட்டிலும் நான் வைத்த ஆள் சிறப்பாக வேலையை செய்து கொண்டிருக்கிறார். பாக்யா இனி தன்னந்தனியாக யாரும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதை பார்க்க போகிறேன் என்று கோபி ரொம்ப சந்தோஷப்படுகிறார்.