பாக்கியலட்சுமி சீரியலில் புது ஹீரோவாக ரஞ்சித் நடிக்கும் காட்சிகள் குறித்து கோபி வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, லட்சுமணன், ரேஷ்மா, நேகா, விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை.
பாக்கியலட்சுமி சீரியல்:
நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வீட்டின் மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று கோபி கேட்கிறார். பின் தாத்தா என்னுடைய சொத்துக்களை எல்லாம் எழுதி தருகிறேன் என்று கூறுகிறார்.
சீரியலின் கதை:
இதை ஏற்றுக் கொண்ட கோபி தற்போது வீட்டின் மதிப்பிற்கு உங்களுடைய சொத்து பத்தாது. இன்னும் 20 லட்சம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். இதை சவாலாக பாக்கியலட்சுமி எடுத்துக் கொண்டு ஆறு மாதம் அவகாசம் கேட்டு பயங்கரமாக உழைக்கிறார். அப்போது கையை விட்டுப் போன பழைய கேன்டீன் ஆர்டர் ஒன்று மீண்டும் பாக்யாவிற்கு வருகிறது. அங்கு ஆங்கிலம் பேச வேண்டும் என்பதால் பாக்கியா ஆங்கிலம் கற்பதற்காக தனியாக வகுப்புக்கு செல்கிறார்.
கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:
அப்போது பாக்கியாவின் ஸ்கூட்டியை நடிகர் ரஞ்சித் மோதிகிறார். பின் இருவரும் ஆங்கிலம் கற்று கொள்ளும் வகுப்பில் சந்திக்கிறார்கள். இதன் மூலம் பாக்கியா – ரஞ்சித் இடையே காதல் தொடர்வது போல சீரியலை கொண்டு வருகிறார்கள். இதனால் இனிவரும் எபிசோடுகளில் பாக்கியலட்சுமி- ரஞ்சித் காட்சிகள் தான் அதிகம் வரும் என்று கூறப்படுகிறது.
#Baakiyalakshmi -ல் இனி #Gopi க்கு காட்சிகள் குறையும் – Sathish pic.twitter.com/haVJu62fYJ
— Parthiban A (@ParthibanAPN) March 3, 2023
கோபி வெளியிட்ட வீடியோ:
இந்நிலையில் இது குறித்து கோபி ரோலில் நடிக்கும் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், பாக்யலக்ஷ்மி சீரியலில் நான் 3 வருடங்களாக 800 எபிசோடுகளுக்கு மேல் நடித்து விட்டேன். எனக்கு இது போதும். இனி ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் கோபியினுடைய காட்சிகள் குறைவாக வரும் என்றும் பழனிச்சாமி என்ற கதாபாத்திரத்தில் வரும் ரஞ்சித்- பாக்யலட்சுமி ட்ராக் தான் அதிகமாக வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது.