விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் இனியா, கல்லூரியில் நடந்த நடன போட்டியில் கலந்து கொண்டு தேர்வானார். பாக்கியா, சமையலுக்கு ஒரு ஆள் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்ததை பார்த்த கோபி, பாக்கியாவை பழிவாங்க தன்னிடம் வேலை செய்யும் நபரை, பாக்யா ரெஸ்டாரண்டுக்கு அனுப்பி இருந்தார். பின் அந்த நபர் பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் வேலைக்கு சேர்ந்தார். இன்னொரு பக்கம் பாரில் தனியாக செழியன் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்த கோபி ஆறுதல் சொல்லி வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்.

செழியன் நிலைமையை அறிந்த பாக்கியா கோபப்பட்டு அறிவுரை சொன்னார். மேலும், நடனப் போட்டியில் தேர்வான விஷயத்தை வீட்டில் இனியா சொல்ல எல்லோரும் பாராட்டி இருந்தார்கள். ஆனால், டிவியில் வரும் நிகழ்ச்சியில் நடனமாட போகிறேன் என்று இனியா சொன்னவுடன் படிப்பு வீணாக போய்விடும், நடனமெல்லாம் வேண்டாம் என்று ஈஸ்வரி- பாக்கியா இருவருமே சொன்னார்கள். ஆனால், இனியா அவர்கள் சொன்னதை கேட்காமல் தன்னுடைய அப்பாவிடம் நடந்ததை சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று கோபி, இனியாவை தூண்டி விட்டார்.
பாக்கியலட்சுமி:
பின் கோபி உடன் இனியா பேசுவதை பார்த்த ஈஸ்வரி, எதற்கு அவனுடன் பேசுகிறாய்? என்று கேட்டதற்கு, ஈஸ்வரியை எதிர்த்து இனியா பேசி இருந்தார். உடனே செழியனும் ஈஸ்வரியை எதிர்த்து பேசி இருந்ததால் ஈஸ்வரி மனமடைந்து உள்ளே சென்று விட்டார். இந்த வாரம் ராதிகா, இனியாவுக்கு நீங்களும் சப்போர்ட் செய்கிறீர்கள். இது நல்லது கிடையாது. நீங்கள் பாக்யாவை பழிவாங்குக, உங்கள் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறீர்கள் என்று திட்டி விட்டு சென்றார். நேற்று எபிசோடில் இனியா நடனம் ஆடுவதை பற்றி எழில் வீட்டில் பேச, பாக்கியா-ஈஸ்வரி இருவருமே ஒத்துக் கொள்ளவில்லை.

நேற்று எபிசோட்:
இனியாவிற்கு ஆதரவாக ஜெனி- செழியன்- எழில் மூவருமே வாக்குவாதம் செய்தார்கள். கடைசியில் இனியா நடனம் ஆட பாக்கியா-ஈஸ்வரி ஒத்துக்கொண்டார்கள். பின் இனியாவை கல்லூரியில் விட ஈஸ்வரி போனார். இதை பார்த்து ராதிகாவின் அம்மா, ரொம்ப மோசமாக ஈஸ்வரியை பேசி இருந்தார். குறிப்பாக, உனக்கு புருஷன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? அவருடைய மாலை கூட காய்ந்திருக்காது, அதுக்குள் மேக்கப் பண்ணிக் கொண்டு கிளம்பி விட்டாயா என்று ரொம்ப வன்மமாக பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு மனமடைந்த ஈஸ்வரி வீட்டிற்குள் சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:
பின் இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இனியாவிடம் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் புதிய ஆர்டருக்காக பாக்கியா, சமையல் லிஸ்ட் போட்டு இருந்தார். நான் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று புது நபர் சொல்ல, பாக்யா வேண்டாம் என்று சொல்லி விட்டார். இதனால் அவருடைய திட்டம் பலிக்கவில்லை. கடைசியில் ஈஸ்வரி, இனியாவை கல்லூரியில் கொண்டு போய் விட சொல்லி செழியன் இடம் கேட்க, அவர் கோபப்பட்டு பேசி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், எனக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இனியாவை கூட்டிக்கொண்டு போக முடியாது என்று கோபமாக செழியன் பேசியதால் மனமடைந்து ஈஸ்வரி சென்று விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதை ஜெனி, பாக்கியாவிடம் சொல்ல அவர், செழியனை திட்டி அறிவுரை சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் கோபி, பாக்கியாவிடம் வேலை செய்யும் நபர் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்போ போட்ட திட்டம் சொதப்பிவிட்டது. ஆனால், எப்படியாவது பாக்யாவிற்கு கெட்ட பெயர் வாங்கி தருவேன் என்று அவர் சொல்ல, கோபி ரொம்ப சந்தோஷப்பட்டு பாக்கியாவை அழிக்க வேண்டும் என்று புது புது ஐடியா சொல்கிறார். கடைசியில் ரெஸ்டாரண்டுக்கு ஈஸ்வரியை வரச் சொல்லி பாக்யா சொல்கிறார். ஆனால், அவர் வர மறுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






