பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியின் மனைவி புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் போடும் கமெண்ட் மிக மோசமாக இருக்கிறது. சமீப காலமாகவே தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.
இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, திவ்யா கணேஷ், வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது.
பாக்கியலட்சுமி சீரியல்:
இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை உணர்த்துகிறது.
பாக்கியலட்சுமி -பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தற்போது இந்த சீரியலில் கோபி இரண்டாவது திருமணம் செய்ய போகிறார். இந்த உண்மை எழிலுக்கு தெரிய வருமா? பாக்கியா கணவர் ராதிகாவிடம் எப்போது மாற்றிக்கொள்வார்? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி ஆகிய இரு குடும்பங்களின் மெகா சங்கமம். பாக்கியா மாமனாரின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு இரு குடும்பங்களும் சந்தித்திருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல் பெற்ற விருதுகள்:
இதனால் சீரியலில் நடக்கும் பல விஷயங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த வார எபிசோட்கள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இது ஒரு பக்கம் இருக்க, 2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா நடந்தது. அதில் பாக்கியலட்சுமி சீரியல் பல பிரிவுகளில் விருதுகளை பெற்று இருந்தது. பலரும் இதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் பாக்யலக்ஷ்மி சீரியல் குறித்து ஒரு ஹைலைட்டான விஷயம் ஒன்று வெளியாகி உளது. அது என்னவென்றால்,
சதீஸ் மனைவியை திட்டும் ரசிகர்கள்:
சீரியலில் மனைவி மற்றும் காதலி என்று கோபி இருப்பதால் கோபியின் மீது பலரும் கடுமையாக விமர்சித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். இது சீரியல் என்றாலும் கோபி மீது பலரும் வெறுப்பில் இருக்கிறார்கள். இந்த நிலையில் சதீஷின் மனைவி புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கோபி கதாபாத்திரத்தின் மீது இருக்கும் கோபத்தை சதீஷ் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் வெறுப்பை காட்டுவது கொஞ்சம் மோசமாக இருக்கிறது.