-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சீரியல்ஸ்

இனியா சொன்ன வார்த்தையால் ராதிகா எடுத்த முடிவு, கோபி என்ன செய்யப் போகிறார்? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
294

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் கோபி மீது கம்பளைண்ட் கொடுத்ததால் பயங்கர கலவரமே வெடித்தது. போலீஸ் கோபியை கைது செய்து இருந்தார்கள். ஆனால், ராதிகா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். இதனால் வீட்டில் எல்லோரும் பாக்கியாவிடம் வாக்குவாதம் செய்தார்கள். கோபியின் சுயரூபத்தை தெரிந்தும் செழியன்- இனியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஈஸ்வரியும் பாக்கியாவை தான் திட்டி இருந்தார். ஆனால், பாக்யா தன் முடிவில் இருந்து மாறவில்லை.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு செந்தில் அழைத்து வந்த வக்கீல் ஜாமினில் கோபியை வெளியே எடுத்தார். கேசை வாபஸ் வாங்க சொல்லி மூவருமே பிடிவாதமாக இருந்தார்கள். ஆனால், பாக்கியா கேசை வாபஸ் வாங்க முடியாது என்று உறுதியாக இருந்தார். இதை அடுத்து பிரஸ்ஸில் நடந்ததை பாக்கியா பேட்டி கொடுக்க, ஈஸ்வரி பயங்கரமாக கோபப்பட்டார். உடனே டிவியில் கோபி- பாக்யா விவகாரம் தான் வைரலாகி கொண்டிருந்தது. பின் ஜெயிலில் இருந்து வந்த கோபியிடம் ராதிகா பயங்கரமாக கோபப்பட்டு சண்டை போட்டார்.

பாக்கியலட்சுமி:

இதனால் கோபிக்கு இன்னும் கோபம் அதிகமாகி பாக்கியலட்சுமி வீட்டிற்கு போய் சண்டை போட்டார். பாக்யாவும் பதிலுக்கு பதில் பேசி இருந்தார். கோபி, உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என்று சவால் விட, பாக்கியாவும் உங்களை ஜெயிலுக்கு அனுப்பியே தீருவேன் என்றும் சவால் விட்டார். இதையெல்லாம் அக்கம் பக்கத்தினர் எல்லோருமே வேடிக்கை பார்த்து மொபைலிலும் வீடியோ எடுத்து வெளியிட்டார்கள். பின் பாக்கியா- கோபி சண்டை போட்ட வீடியோவை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகி இருந்தார்கள். ஆனால், அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் பாக்கியா தன்னுடைய வேலையை செய்கிறார்.

கடந்த வாரம் எபிசோட்:

-விளம்பரம்-

மேலும், சோசியல் மீடியா முழுவதும் பாக்கியா- கோபி சண்டை வீடியோ வைரலாகி இருந்தது. இதை பார்த்த ராதிகா ஷாக் ஆகி கோபியிடம் சண்டை போட்டார். அவரால் எதுவுமே பேச முடிய முடியவில்லை. இன்னொரு பக்கம் கல்லூரியில் அந்த வீடியோவால் இனியாவை எல்லோரும் விசாரித்தார்கள். பின் இனியா இதை பற்றி தன்னுடைய அம்மாவிடம் பேசி புலம்ப, அவர் ஆறுதல் சொல்ல முயற்சித்தார். ஆனால், இனியா கேட்கவே இல்லை. பின் இனியா, கோபி வீட்டிற்கு போய் ராதிகாவிடம் சண்டை போட்டார். அப்போது, உங்களால் தான் எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை என்றார். அந்த சமயம் வந்த ஜெனியும் ராதிகாவை திட்டி விட்டு சென்றார். இதனால் ராதிகா ரொம்ப மனம் உடைந்து விட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் கோபி வீட்டுக்கு வந்த உடன் இனியா பேசியதை ராதிகா அம்மா சொல்கிறார். ஆனால், அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ராதிகா, உங்கள் மகள் தான் அப்படி பேசினாள். என் அம்மா சொல்வதெல்லாம் உண்மைதான் என்றவுடன் கோபிக்கு கோபம் வந்து பாக்யா வீட்டிற்கு போகிறார். அங்கு இனியாவை தனியாக அழைத்துக் கொண்டு பேசுவதற்காக கோபி சென்றார். பின் அங்கு வந்த ராதிகா அம்மா, எங்கே போகிறார் மாப்பிள்ளை? என்று கேட்டதற்கு, ஈஸ்வரி பயங்கரமாக கோவப்பட்டு பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் இனியா- ஜெனி வீட்டிற்கு வந்த விஷயத்தை ராதிகா அம்மா சொன்னவுடன் பாக்கியா ஷாக் ஆகிறார். அதற்கு ஈஸ்வரி, அதில் என்ன தப்பு? என்று சொல்ல, இருவருக்குமே வாக்குவாதம் அதிகமாகின்றது. இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய அம்மாவிடம் வாழ்க்கையை நினைத்து புலம்புகிறார். அதற்கு ராதிகா, நான் கோபியை திருமணமே செய்திருக்கக் கூடாது என்றெல்லாம் அழுகிறார். பின் இனியா, வீடியோ எல்லாம் பார்த்து எல்லோருமே கேள்வி கேட்கிறார்கள். கஷ்டமாக இருக்கிறது என்று அழ, கோபி ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news