விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஆகாஷ், இனியாவிற்கு போன் செய்தார். இதனால் ஆவேசத்தில் கோபி, செழியன் இருவரும் செல்வியின் வீட்டுக்கு சென்றார்கள். அப்போது கோபத்தில் செழியன் ஆகாஷை அடித்தார். ஆகாஷ் சொல்வதைக் கேட்காமல் கோபி, செழியன் இருவரும் கோபப்பட்டு திட்டி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் செழியன், கட்டை எடுத்து ஆகாஷ் தலையில் அடித்து விட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆகாசிற்கு சப்போர்ட் செய்ய, செழியன்- கோபி அங்கிருந்து சென்று விட்டார்கள். அதற்குப்பின் ஆகாஷை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு செல்விக்கு தகவலை சொன்னார்கள். உடனே செல்வி, பாக்கியா இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள்.

அப்போது நடந்ததை செல்வி இடம் சொல்ல, அவர் ரொம்ப வருத்தப்பட்டார். கோபத்தில் கொந்தளித்த பாக்கியா வீட்டிற்கு வந்து செழியன் இடம் பேசி இருந்தார். அப்போது அவர், எதற்கு ஆகாஷை அடித்தாய்? அவனை அடிக்கும் உரிமை உனக்கு யார் கொடுத்தது? என்று கேட்க, வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். ஈஸ்வரி-கோபி இருவரும் செழியனுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். அதற்கு பாக்கியா, ஒரு அப்பாவாக பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை சொல்லி வளர்க்கனும், ரவுடிசத்திற்கு அழைத்து செல்லக்கூடாது என்று கோபியை திட்டி இருந்தார். ஆனால், செழியன் இன்னும் மோசமாக ஆகாஷை பேச, ஆத்திரம் தாங்க முடியாமல் பாக்கியா செழியினை அடிக்க கை ஓங்கி இருந்தார். ஆனால் அடிக்கவில்லை, செழியனை திட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் செழியன், இன்னொரு முறை ஆகாஷ் இனியாவிடம் பேசுவது தெரிந்தால் நான் வெட்டி போடுவேன் என்று ஆவேசப்பட்டார். உடனே கோபத்தில் பாக்கியா செழியனை அடித்து விட்டார். இதனால் மொத்த பேருமே சாக்கு ஆகி இருந்தார்கள். அப்போது ஜெனி, எதற்காக செழியினை அடிக்கிறீர்கள்? அவன் என்ன தவறு செய்தான்? என்று கோபமாக பேசி இருந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே செழியனுக்கு சப்போர்ட் செய்தார்கள். ஆனால் பாக்கியா சொல்ல வருவதை யாருமே கேட்கவில்லை. இதனால் கோபித்துக் கொண்டு ஜெனி-செழியன் இருவரும் உள்ளே சென்று விட்டார்கள்.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் எழில், ஹாஸ்பிடலில் ஆகாசை பார்க்கப் போனார். அப்போது எழில், நடந்ததற்காக மன்னிப்பு கேட்டு செல்விக்கு ஆறுதல் சொன்னார். சொல்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த எழிலிடம் கோபி- ஈஸ்வரி இருவரும் சண்டை போட்டார்கள். இதனால் வீட்டில் மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து அதிகமானது. உடனே இனியா, என்னால் தான் எல்லா பிரச்சனையும் நடக்கிறது. தயவு செய்து யாரும் சண்டை போடாதீர்கள். இனி நான் ஆகாஷ் உடன் பேசமாட்டேன். நான் இங்கு இருப்பது பிடிக்கவில்லை என்றால் நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்றெல்லாம் பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் இனியா, தயவுசெய்து என்னால் இந்த வீட்டில் சண்டை வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள் என்று மண்டி போட்டு அழுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த செல்வியை பார்த்து ஈஸ்வரி ஆவேசமாக கத்துகிறார். கோபி, செழியன் எல்லோருமே செல்வியை திட்டுகிறார்கள். அப்போது செல்வி, இங்கு நான் சண்டை போட வரவில்லை. யாரிடமும் எனக்கு பேச விருப்பமில்லை. என் மகனின் ஹாஸ்பிடல் செலவிற்காக என் நகையை வாங்க வந்திருக்கிறேன் என்றவுடன் பாக்கியா நகையை கொண்டு வந்து செல்வியிடம் கொடுக்கிறார். அப்போது ஈஸ்வரி, இனிமேல் இந்த வீட்டு பக்கம் வரக்கூடாது என்ற உடன் செல்வி, எங்களுக்கும் மானம் ரோஷம் இருக்கிறது வரமாட்டோம். எல்லோரும் என்னை போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்க சொன்னார்கள்.

சீரியல் ட்ராக்:
நான் கொடுத்திருந்தால் இனியா நிலைமையை யோசித்துப் பாருங்கள். நான் வளர்த்த பிள்ளை என்று தான் அமைதியாக இருக்கிறேன். பணம் காசு இல்லை என்றாலும் மரியாதையாக நான் வாழ்கிறேன் என்று செல்கிறார். அதற்கு பின் பாக்கியா நடந்ததை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது வந்து கோபி, நீ செல்வியுடன் பேசாதே. உன்னுடைய கேரியரில் கவனம் செலுத்து, பிள்ளைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். கோபத்தில் பாக்கியா, என் பிள்ளைகளை எனக்கு பார்க்க தெரியும். நீங்கள் எப்போது இந்த வீட்டை விட்டு போவீர்கள்? என்று கேட்டதற்கு, என் மகள் வாழ்க்கையை செட்டில் செய்யறவரையும் நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று கோபி சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






