விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா வீட்டிற்கு சென்ற கோபி, இந்த முடிவை எதற்காக எடுத்தாய்? என்று கேட்க, இனி நீங்கள் என் வாழ்க்கையில் இல்லை. என்னையும் மயூவையும் பார்க்க வராதீர்கள். இது என்றுமே நிரந்தரம் தான். உங்களால் எங்களுடைய வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்றெல்லாம் ராதிகா சொன்னார். இதனால் கோபி ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் அவர் வேதனையில் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு சென்றார். இன்னொரு பக்கம் ராதிகா அம்மா, அட்வைஸ் செய்தார். ஆனால், ராதிகா கேட்கவில்லை.
கோபி, ராதிகா சொன்ன வார்த்தையை நினைத்து புலம்பி நிலை தெரியாத அளவிற்கு குடித்தார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி வீட்டிற்கு வராதது நினைத்து வீட்டில் கவலைப்பட்டு கொண்டிருந்தார். பின் அவர், நல்லவள் மாதிரி பேசி என் மகனின் மனதை கெடுத்து விட்டு போயிட்டாள் என்றெல்லாம் ராதிகாவை திட்டிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்ட ஜெனிக்கு கோபம் வந்து ஈஸ்வரிடம் வாக்குவாதம் செய்தார். உடனே செழியன், ஜெனியை திட்டி அனுப்பி விட்டார். அதன் பிறகு நிலை தெரியாத அளவிற்கு குடித்துவிட்டு கோபி வீட்டிற்கு வந்தார்.
பாக்கியலட்சுமி:
அவரை பார்த்தவுடன் ஈஸ்வரி ரொம்பவே வருத்தப்பட்டார். அப்போது கோபி, போதையில் பாக்கியா- ராதிகா இருவரையும் பற்றி உளறிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்ட பாக்கியாவுக்கு கஷ்டமாக இருந்தது. மறுநாள் காலையில் பாக்கியா, ராதிகாவின் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு ராதிகாவின் அம்மா, தன் மகள் வாழ்க்கையை பற்றி வருத்தமாக பாக்யாவிடம் பேசி இருந்தார். நேற்று எபிசோட்டில் பாக்கியா, ராதிகாவிடம் பேசி இருந்தார். அப்போது பாக்கியா, என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்? ஏன் இப்படி செய்கிறீர்கள்? உங்களை நினைத்தால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
உடனே ராதிகா, நீங்கள் தனியாக வாழும்போது நான் வாழ மாட்டேனா? கோபி அவருடைய குடும்பத்தில் இருந்தால் தான் சந்தோசமாக இருக்கிறார். நான் சரியாக தான் செய்து இருக்கிறேன் என்று சொல்லி இருவரும் பேசி இருந்தார்கள். பின் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்துவிட்டு வந்தார். இன்னொரு பக்கம் கோபி, போதை தெளிந்து தன் அம்மாவிடம் பேசினார். அப்போது ஈஸ்வரி, போனவளை நினைத்து எங்களை கஷ்டப்பட வைக்காதே. இந்த இரண்டு வருட வாழ்க்கையை மறந்து விட்டு எங்களுடன் சந்தோஷமாக இரு. உன் பிள்ளைகளை பார் என்றெல்லாம் பேசினார். கோபி எதுவும் சொல்லாமல் ராதிகாவை நினைத்து அழுதார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, வாழ்க்கையே போனது என்று பயங்கரமாக வருத்தப்பட்டு வேதனையில் இருக்கிறார். அப்போது வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கோபி தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பாக்கியா, இனியாவை அனுப்பி கோபியை வரவைத்து சாப்பாடு போடுகிறார். இன்னொரு பக்கம் ராதிகா அம்மா, தன் மகளின் வாழ்க்கை நினைத்து வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார். உடனே ராதிகா, நாம் மூவரும் தானே எப்போதும் ஒன்றாக இருந்தோம். ஜாலியாக பேசி சாப்பிடலாம். தேவையில்லாத விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று ஆறுதல் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் மாடியில் கோபி, ராதிகாவின் நினைவுகளை நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது செழியன் அவர் அப்பாவிற்கு ஆறுதல் சொன்னார். உடனே கோபி, உங்க அம்மா ரொம்பவே இந்த குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். நாம் தான் பெண்கள் நிலைமையை புரிந்து கொள்வதில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். அதைக் கேட்டவுடன் செழியன் அழுகிறார். பின் அவர் தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு வருத்தப்பட்டு பேசுகிறார். அதற்கு பாக்கியாவும் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.