விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா, நீங்கள் வரவில்லை என்றால் நானும் மையூவும் கிளம்புவது உறுதி என்று சொன்னார். உடனே கோபி, துணியை பேக் செய்ய போனார். உடனே ராதிகா, நீங்கள் வரவில்லை. நானும் மையூ தான் போறோம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இருங்கள் என்று சொன்னவுடன் எல்லோரும் ஷாக் ஆனார்கள். கோபி, எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் என்று சொன்னவுடன் ராதிகா, இருக்க முடியாது. என் முடிவில் நான் மாற மாட்டேன் என்று கிளம்பி விட்டார். இதை பார்த்து பாக்கியாவிற்கு கஷ்டமாக இருந்தது.

இனியாவும் தான் செய்த தவறை உணர்ந்து ராதிகாவிடம் மன்னிப்பு கேட்டார். ராதிகா, மயூ இருவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்பி விட்டார்கள். அதை பார்த்து கோபி ரொம்பவே மனமுடைந்து விட்டார். பாக்கியாவுமே ரொம்ப வேதனைப்பட்டார். ஆனால், ஈஸ்வரி- இனியா மட்டும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். வேதனையில் கோபி யாரிடமும் சரியாக பேசாமல் ராதிகாவை பற்றிய நினைத்துக் கொண்டிருந்தார். ஈஸ்வரி, கோபியின் மனதை மாற்ற என்னென்னவோ பேசி இருந்தார். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை.
பாக்கியலட்சுமி:
இன்னொரு பக்கம் பாக்கியா, ராதிகாவின் நினைவுகளை நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருந்தார். செல்வி ஆறுதல் சொல்லியும் பாக்கியா ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய அம்மாவிடம் நடந்ததை எல்லாம் சொன்னவுடன் அவர் கோபப்பட்டு திட்டினார். கடைசியில் கோபி, ராதிகாவை பார்க்க கிளம்பினார். ஆனால், ஈஸ்வரி தடுத்தார். நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி பேச்சை மீறி ராதிகாவை பார்க்க கோபி சென்று விட்டார்.

நேற்று எபிசோட்:
இதனால் கோபப்பட்ட ஈஸ்வரி, ராதிகாவை திட்டிக்கொண்டு இருந்தார். இதையெல்லாம் கேட்ட பாக்கியா கோபத்தில் பொங்கி எழுந்து ஈஸ்வரிடம் சண்டை போட்டார். பின் ஈஸ்வரி - பாக்கியா இருவருக்குமே வாக்குவாதம் அதிகமாகி இருந்தது. ஒரு கட்டத்தில் பாக்யா, குழந்தைகளுக்கு நல்லது சொல்லிக் கொடுங்கள். உங்கள் பிள்ளையை உங்கள் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், திருமணமே செய்திருக்க கூடாது. என் வாழ்க்கையை ஏன் கெடுத்தீர்கள் என்று தன்னுடைய மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்தார்.

சீரியல் ட்ராக்:
ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் ராதிகா வீட்டிற்கு சென்ற கோபி, இந்த முடிவை எதற்காக எடுத்தாய்? என்று கேட்க, இனி நீங்கள் என் வாழ்க்கையில் இல்லை. என்னையும் மயூவையும் பார்க்க வராதீர்கள். இது என்றுமே நிரந்தரம் தான். உங்களால் எங்களுடைய வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்றெல்லாம் ராதிகா சொல்ல, கோபி ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் அவர் வேதனையில் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு சென்றார் .
https://www.youtube.com/watch?v=OYRmmCrqdL4
சீரியல் ப்ரோமோ:
இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் கோபி, ராதிகாவை நினைத்து வேதனையில் அழுது கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி, நீ அவளை மறந்து விடு. அவள் பாதியிலேயே வந்து பாதியிலேயே போய்விட்டாள். போனவளை நினைத்து இருப்பவர்களை கவலைப்பட வைக்காதே என்று பேசுகிறார். ஆனால், கோபியால் ஈஸ்வரி சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ராதிகா, மயூ என்று தான் பேசிக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரியும் விடாமல் கோபியின் மனதை மாற்ற பேசுகிறார்.






