இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் அரியவன். இந்த படத்தில் இஷோவோன், டேனியல் பாலாஜி, பிரனாலி கோகரே, சத்யன், சுப்பிரமணி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். விஷ்ணு ஸ்ரீ இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகி இருக்கும் அரியவன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் கபடி வீரராக வருகிறார் ஹீரோ. கதாநாயகி ஆதரவற்ற இல்லத்தில் வளர்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இன்னொரு பக்கம் வில்லன் டேனியல் பாலாஜி சில இளைஞர்களை அடியாட்களாக வைத்து இளம் பெண்களை காதலிக்கும் மாதிரி நடித்து ஏமாற்றி அவர்களை தவறான வீடியோ எடுக்கிறார். பின் அதை வைத்து அந்த இளம் பெண்களை மிரட்டி பல பிரபலங்களுக்கு அந்த பெண்களை சப்பிளையும் செய்கிறார்.
இந்த கும்பலிடம் நாயகியின் தோழியும் சிக்கி கொள்கிறார். இதனால் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். இதை அறிந்த நாயகி தன்னுடைய காதலனிடம் உதவி கேட்கிறார். இதனால் ஹீரோஷனுக்கும் வில்லனுக்கும் இடையே பிரச்சனை நடைபெறுகிறது. பின் ஹீரோ காதலின் பெயரில் பெண்களை ஏமாற்றுபவர்களின் கைகளை வெட்டுகிறார். இதனால் கோபமடையும் வில்லன் டேனியல் பாலாஜி ஹீரோவை பழிவாங்க துடிக்கிறார்.
படத்தின் கதை:
இறுதியில் ஹீரோ இஷோ வில்லனிடமிருந்து தப்பித்தாரா? பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றினாரா? வில்லன் என்ன ஆனார்? என்பது தான் படத்தின் மீதி கதை. புதுமுக நாயகனாக இஷோவோன் இந்த படத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும் ஆர்ப்பாட்டம் இல்லாத தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார். வில்லன்களை அடித்து நொறுக்கும் சண்டை காட்சியிலும் இஷோவோன் அற்புதமாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக வரும் பிரனாலி இந்த படத்தின் மூலம் தான் அறிமுகம்.
நடிகர்கள் குறித்த தகவல்:
இவர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர் காதல் காட்சிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். இவர்களை தொடர்ந்து படத்தில் வில்லனாக வரும் டேனியல் பாலாஜி தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களுடன் ரமா, சுப்ரமணி, சத்யன் போன்ற பலருமே படத்திற்கு பக்கபலமாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
படம் குறித்த தகவல்:
படத்திற்கு பின்னணி இசையும், ஒளிப்பதிவும் பக்கபலம் சேர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் படம் மெதுவாக செல்வது போல் இருந்தாலும் இரண்டாம் பாதியில் நன்றாக சென்றது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சி கைத்தட்டல்களை வாங்கி இருக்கிறது. கதாபாத்திரங்களையும், திரைகதையும் வித்தியாசமாக காட்டும் வகையில் இயக்குனர் எடுத்த முயற்சி பாராட்டுகளை பெற்றிருக்கிறது. மேலும், பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.
பிளஸ்:
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்க்கு பக்க பலம்
கிளைமாக்ஸ் காட்சி கைத்தட்டல்களை கொடுத்திருக்கிறது
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படம் அமைந்திருக்கிறது.
மைனஸ்:
முதல் பாதி மெதுவாக சென்று கொண்டிருக்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
காமெடிகள் இன்னும் இருந்திருக்கலாம்
மொத்தத்தில் அரியவன் – ஒரு நல்ல முயற்சி