சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு பாடம் புகட்டிய பாக்கியா- பாக்கியலட்சுமி சீரியலின் தரமான சம்பவங்கள்

0
284
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருப்பது பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் டிஆர்பி முன்னிலையில் வகுத்து வருகிறது. இந்த சீரியலில் பாக்கியா என்ற ரோலில் சுசித்ராவும், கோபி என்ற ரோலில் சதீஷ் நடித்து வருகிறார்கள். குடும்ப பெண்கள் எப்படி எல்லாம் குடும்பத்திற்காக கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், நாளைக்கு நாள் பாக்கியாவினுடைய கதாபாத்திரம் பல பெண்களுக்கு உதாரணமாகவும் இருக்கிறது. அதோ சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சீரியல் உள்ளது என்றே சொல்லலாம். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் ஒரு பிற்போக்கு நம்பிக்கைக்கு பாடம் புகட்டும் வகையில் நிறைய காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

- Advertisement -

மதங்களை கடந்த காதல் திருமணம்:

பாக்கியாவின் மூத்த மகன் செழியன். இவர் ஜெனி என்ற கிறிஸ்தவ பெண்ணை காதலிப்பார். இவருடைய காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், பாக்கியா தான் இவர்களுடைய காதலை புரிந்து கொண்டு பிடிவாதம் ஆக திருமணத்திற்கு எல்லோரிடமும் சம்மதம் வாங்கினார். கடைசியில் இந்து- கிறிஸ்தவ முறைப்படி இவர்களுடைய திருமணத்தையும் நடந்தது. ஆனால், வீட்டில் இருக்கும் பெரியவர்களான ஈஸ்வரிக்கு இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் கிடையாது. ஆரம்பத்தில் ஈஸ்வரி, ஜெனி இடம் பேசவில்லை என்றாலும் அதற்கு பிறகு ஜெனி நடந்து கொண்ட விதத்தை வைத்து ஏற்றுக் கொள்கிறார் ஈஸ்வரி.

மறுமணம்:

பாக்கியாவின் இரண்டாவது மகன் எழில். இவர் கணவனை இழந்து குழந்தையுடன் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் அமிர்தாவை காதலிப்பார். ஆரம்பத்தில் அமிர்தா, எழிலின் காதலை மறுத்தாலும் பின் இறுதியில் ஒத்துக் கொள்கிறார். ஆனால், இவர்களுடைய விஷயம் பாக்கியா வீட்டிற்கு தெரிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், பாக்கிய தான் பிடிவாதமாக தன்னுடைய மகனின் விருப்பத்திற்கு ஏற்ப அமிர்தாவை திருமணம் செய்து வைக்கிறார். செழியன்- ஜெனி காதலை ஏற்றுக் கொண்ட ராமமூர்த்தி கூட அமிர்தா-எழிலின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள தயங்கினார். பின் பாக்யா சொல்லி புரிய வைத்தவுடன் ஏற்றுக்கொண்டார். ஆனால், ஈஸ்வரி தான் பயங்கரமாக சண்டை போட்டார். நாளடைவில் ஈஸ்வரியும் அவர்களுடைய உண்மையான அன்பை புரிந்து கொண்டார்.

-விளம்பரம்-

காலம் கடந்த திருமணம்:

கோபி தன்னுடைய கல்லூரி காலத்தில் ராதிகாவை காதலிப்பார். ஆனால், தன்னுடைய அப்பாவின் கட்டாயத்தால் பாக்கியாவை திருமணம் செய்திருப்பார். இருந்தாலுமே, அந்த திருமணத்தில் கோபிக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்தும் தன் காதலை மறக்காமல் இருந்தார் கோபி. பின் பாக்யாவிற்கு விவாகரத்து கொடுத்து தன் குடும்பத்தை விட்டு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் கோபி. ராதிகாவிற்கும் இது இரண்டாம் திருமணம் தான். கிட்டத்தட்ட ஐம்பது வயது ஆன நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது ராதிகா – கோபி தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

மனமாற்றம்:

சமீபத்தில் தான் ராமமூர்த்தி இறந்தார். இவருடைய இறப்பு பாக்கியா குடும்பத்தை புரட்டி போட்டு இருக்கிறது. ராமமூர்த்தியின் இறுதி சடங்கை பாக்கியா தான் செய்தற். ராமமூர்த்தி மறைவிற்குப்பின் பொட்டு வைக்கலாம், அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று பாக்கியா மூடநம்பிக்கையை ஒழிக்கும் நோக்கத்தில் ஈஸ்வரிக்கு பொட்டு வைக்கிறார். பின் வெளியில் போகமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்க அவசியமில்லை என்று அவரை வெளியே அழைத்து செல்கிறார். இப்படி சமூகத்தில் இருக்கும் பல மூட நம்பிக்கைகளை தலையில் வைத்து ஆடுபவர்களுக்கு தலையில் கொட்டி பாடம் புகட்டும் வகையில் பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது.

Advertisement