விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் போலீஸ், இது எல்லாம் வைத்து சுதாகர் தான் கொலை செய்தார் என்று முடிவெடுத்துக் கொள்ள முடியாது. அந்த இடத்தில் நீங்களும் தான் இருந்திருக்கிறீர்கள். நான் சுதாகரை விசாரிக்கிறேன் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து எழில் சுதாகருக்கு உதவியாக இருந்த நபரை அழைத்துக் கொண்டு வந்தார். அந்த நபர், சுதாகர் தான் நிதிசை கொலை செய்தார் என்று உண்மையை சொன்னார். அப்போது நிதிஷ், போதை பொருளை வியாபாரம் செய்ய எடுத்து சென்றிருந்தார். அதை தட்டி கேட்க சுதாகர்-நிதிஷ் இருவருக்குமே சண்டை நடந்தது.

கோபத்தில் சுதாகர், நிதிஷ் மண்டையில் அடித்து விட்டார். அந்த சமயம் பார்த்து இனியா வந்ததால் அந்த பழி இனியாவின் மீது போட்டு விட்டார். இதனால் போலீஸ், சுதாகரை தேடி தேடுகிறது. பின் நிதிஷின் அம்மாவும் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் சுதாகர் தான் என்று பேட்டியும் கொடுத்து விட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் எல்லோருமே கோபி மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதியானதால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து கோபி விடுதலை ஆகி வெளியே வந்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் இனியா தன்னுடைய தந்தை கோபியை பார்த்து ரொம்ப எமோஷனாக அழுது பேச, கோபி ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தி இருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு என்று காண்பிக்கிறார்கள். அதில் பாக்கியா, தன்னுடைய ரெஸ்டாரண்டை மீண்டும் மீட்டு விட்டார். வழக்கப்படி தன்னுடைய ரெஸ்டாரண்டில் பெண்களுக்கு எல்லாம் வேலை கொடுத்து தன்னுடைய ஆர்டரை பரபரப்பாக செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து இனியா தன்னுடைய அம்மாவை புகழ்ந்து பேசினார். அதற்கு பின் அமிர்தா, கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அப்போது பாக்கியா, ஆகாஷ் சப் கலெக்டர் ஆகி இருக்கும் விஷயத்தை சொன்னார்.

நேற்று எபிசோட்:
பின் ஈஸ்வரி, ஆகாஷுக்கு இனியாவை திருமணம் செய்து வைக்கலாமா? என்று கேட்க, அதற்கு பாக்கியா, அதெல்லாம் தேவையில்லை. அவர்கள் இருவருமே நண்பர்களாக தான் பழகினார்கள். அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுக்கட்டும் என்று சொன்னார். இதனால் ஈஸ்வரி அமைதியாகி விட்டார். இதையெல்லாம் வெளியில் நின்ற இனியா கேட்டு விட்டார். மறுநாள் காலையில் ஆகாஷ், பாக்கியா வீட்டிற்கு வந்து எல்லோருக்குமே ஸ்வீட் கொடுத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே ஆகாஷ் வாழ்த்துக்களை சொன்னார்கள். பின் ஆகாஷை தங்களுடன் சேர்ந்தே சாப்பிட வைத்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ஆகாஷ், நான் கீழே உட்கார்ந்து சாப்பிடுகிறேன் என்கிறார். ஆனால், வீட்டில் உள்ள எல்லோருமே அதெல்லாம் வேண்டாம் நீ மேலே உட்கார்ந்து சாப்பிட சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து செல்வி, தன்னுடைய பிள்ளைகளையும் தன்னையும் அவமானப்படுத்தியதை நினைத்து பார்த்து உள்ளுக்குள் வருத்தப்படுகிறார் அதற்குப்பின் ஈஸ்வரி, இனியா விஷயமாக செல்வியிடம் பேசட்டுமா? என்று பாக்கியா இடம் கேட்கிறார். அதற்கு பாக்கியா வேண்டாம் என்கிறார். அப்போது செல்வி, என் மகன் கலெக்டர் ஆகாசுக்கு உங்கள் பேத்தி இனியாவை திருமணம் செய்து தருவீர்களா? என்று கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:
சந்தோசத்தில் ஈஸ்வரி சம்மதம் சொல்கிறார். பின் இரு வீட்டாருமே திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அதற்குப்பின் இனியா-ஆகாஷ் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. பாக்கியா வீடு சந்தோஷத்தில் நிறைந்து இருக்கிறது. மண்டபத்தில் ஆகாஷ்- இனியா இருவருமே மனக்கோலத்தில் ஜோடியாக நிற்க, அதை பார்த்து பாக்கியா குடும்பமே சந்தோஷப்படுகிறது. பின் இனியா திருமணத்திற்கு நிதிஷின் அம்மா வந்திருக்கிறார். அப்போது நிதிஷ் அம்மா, நான் வந்தால் பிரச்சனை ஆகாதா? என்று கேட்கிறார். அதெல்லாம் ஒன்றும் இல்லை வாருங்கள் என்கிறார் பாக்கியா. பின் இனியாவை பார்த்து நிதிஷ் அம்மா கிப்ட் கொடுத்துவிட்டு இனியா நல்ல பெண். அவளை நன்றாக பார்த்துக் கொள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






