விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, வழக்கம் போல பாக்கியாவை திட்டி இருந்தார். மறுநாள் காலையில் தன்னுடைய புது ஹோட்டலுக்காண அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டார். நேற்று எபிசோட்டில் பாக்கியா, ஹோட்டலுக்கு தேவையான மொத்த பணத்தை கொடுத்து அக்ரீமெண்ட் போட்டு விட்டார். பின் வீட்டில் இதைப் பற்றி சொன்னவுடன் எல்லோருமே பாக்கியாவை தான் திட்டி இருந்தார்கள்.
எப்பவுமே சப்போர்ட் செய்யும் எழில் கூட இந்த முறை பாக்கியாவிற்கு எதிராக தான் பேசி இருந்தார். இதனால் பாக்கியா கொஞ்சம் வருத்தப்பட்டார்.

இறுதியில் பாக்கியா, என்னை என் போக்கில் போக விடுங்கள் என்று சொன்னார். அதற்குப்பின் பாக்கியா, தன்னுடைய ஓட்டல் சரி செய்யும் வேலையில் மும்முறமாக செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோபி, பாக்கியாவின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார். அதற்குப்பின் வீட்டில் பாக்கியா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கோபி, நீ புதிதாக திறக்க போகும் ஓட்டலை பார்த்தேன். ரொம்ப சின்னதாக இருக்கிறது. எந்த உதவி என்றாலும் என்னிடம் கேள். நான் உனக்கு செய்கிறேன் என கேட்டார். ஆனால், பாக்கியா எதுவும் தேவையில்லை என்றார். பின் எழில்- பாக்கியா இருவரும் புதிய ஒட்டலை பற்றி பேசி இருந்தார்கள்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி தன்னுடைய மெஸ் திறப்பதற்கான வேலையெல்லாம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த எழில்- அமிர்தா இருவரும் பாக்கியாவிற்கு வாழ்த்து சொன்னார்கள். பின் வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி, புது மெஸ் ஆரம்பிப்பதை பற்றி கேட்டு சண்டை போட்டார். ஆனால், பாக்கியா தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். அதற்குப்பின் இனியா வந்திருப்பதை அறிந்த பாக்கியா அவரை பார்க்க சுதாகர் வீட்டிற்கு சென்றார். அங்கு இனியாவிடம் பாக்கியா பேசி இருந்தார். அப்போது பாக்கியா, புது மெஸ் ஆரம்பிக்கும் விஷயத்தை எல்லோரிடமும் சொன்னார். இதை கேட்டவுடன் சுதாகர் பயங்கரமாக கோபப்பட்டு செழியனிடம் விசாரித்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சுதாகர், இனியாவின் அம்மா, என்னுடைய சம்மந்தி கையேந்திபவன் நடத்துகிறார் என்று சொன்னால் எனக்கு நன்றாக இருக்குமா? என்று கேட்டார். உடனே பாக்கியா, இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் என்று சொல்லுங்கள் என அவருக்கு பதிலடி கொடுத்து விட்டு வந்தார். அதற்குப்பின் சுதாகர் வீட்டில் நடந்ததைச் செழியன் ஈஸ்வரிடம் சொன்னார். பின் அவர் பாக்யாவிடம் கோபப்பட்டு சண்டை போட்டார். ஆனால், பாக்கியா அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் அங்கிருந்து சென்றார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய அம்மாவின் புதிய ரெஸ்டாரண்டை திறப்பது பற்றி தன்னுடைய குடும்பத்திடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் சுதாகருக்கு கோபம் அதிகமானது. ஆனால், அவரால் வெளியே ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா மெஸ் திறக்கும் இடத்திற்கு அந்த ஏரியாவின் கவுன்சிலர் வந்தார். அப்போது அந்த ஓட்டலின் உரிமையாளர், இவர்கள் பணமே தரமாட்டார்கள், ஏமாற்றுவார்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று அறிவுரை சொன்னார். அடுத்த நாள் ரெஸ்டாரன்ட் புதிய மெஸ் திறப்பதற்கு பாக்கியா கிளம்ப, ஈஸ்வரி வழக்கம் போல பாக்கியாவை திட்டி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=U0aMO869EO0
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இனியா, உங்களுடைய ரெஸ்டாரன்ட் ஏமாத்தி வாங்கி விட்டார்களா? என்ன ஆனது? ஏன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை? என்று உண்மை அறிந்து புலம்புகிறார். அதற்கு பாக்கியா, அதெல்லாம் ஒன்றும் இல்லை. என்னை யாரும் ஏமாற்றவில்லை என்று சமாளிக்கிறார். அதற்குப்பின் சுதாகரிடம் இனியா, தன்னுடைய அம்மாவின் ரெஸ்டாரண்டை பற்றி பேசுகிறார். அப்போது அவர், என் அம்மா ரெஸ்டாரண்டை வாங்கி தான் எங்களுடைய திருமணத்தை நடத்தினீர்களா? எதற்கு இப்படி செய்தீர்கள்? என்றெல்லாம் கேட்க, சுதாகருக்கு கோபம் அதிகமாகிறது.






