விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கடந்த வாரம் ரெஸ்டாரண்ட் சர்ச்சையால் பாக்கியா, நகைகளை எல்லாம் அடகு வைத்து பணத்தை ஏற்பாடு செய்து எல்லோருக்குமே பாக்கியா பணத்தை செட்டில்மெண்ட் செய்து விட்டார். இதை அறிந்த கோபி கோபப்பட்டு பாக்கியாவை அழிக்க நினைத்தார். அப்போது வந்த செழியன், வேலை பற்றி கோபியிடம் கேட்க, அவர் பொய்யான வாக்குறுதி கொடுத்து அனுப்பி இருந்தார். இன்னொரு பக்கம் இனியா கல்லூரியில் நடன பயிற்சி மும்முரமாக நடக்கிறது. டான்ஸ் மாஸ்டர் வேண்டும் என்று பாக்யாவிடம் இனியா சொல்ல, அவர் ஒத்து கொள்ளவில்லை.

மேலும், ரெஸ்டாரண்டில் தன்னை சந்திக்க வந்த நபரிடம் எழில் படம் எடுக்கும் விஷயத்தை கோபி சொல்ல, அவரும் சம்மதித்தார். இதை எல்லாம் வீட்டில் ராதிகாவிடம் சொல்லி கோபி சந்தோஷப்பட, ராதிகா அதை கண்டுகொள்ளாமல் தூங்கி விட்டார். பின் இந்த விஷயத்தை கோபி, செழியன் இடம் சொல்ல, அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு தன்னுடைய அப்பாவை பெருமையாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா ரெஸ்டாரன்ட்டை திறந்திருந்தார். பின் கல்லூரியில் வர சொன்னதால் பாக்கியா சென்றிருந்தார்.
பாக்கியலட்சுமி:
அப்போது நடன மாஸ்டரை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னதால் பாக்யாவும் ஒத்துக் கொண்டு நடனம் மாஸ்டரை சந்திகத்தார். ஆனால், அவர் அதிகமாக செலவாகும் என்று சொன்னதால் பாக்கியா வந்து விட்டார். வகுப்பில் சேர்த்துவிட சொல்லி இனியா ரொம்ப கெஞ்சியும் பாக்யா ஏற்றுக்கொள்ளவே இல்லை. நேற்று எபிசோட்டில் பாக்கியா, ரெஸ்டாரண்டை திறந்து வைத்திருந்தார். அப்போது வந்த பழனிசாமி, டிபன் சாப்பிட்டுவிட்டு துபாய் செல்வதாக சொன்னார்.

நேற்று எபிசோட்:
பாக்யாவும் அவருக்கு வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தார். இன்னொரு பக்கம் செழியன் சொன்ன தயாரிப்பாளரை சந்திக்க எழிலும் அவருடைய நண்பரும் சென்று இருந்தார்கள். அங்கு எழில், தன்னுடைய கதையைப் பற்றி தயாரிப்பாளிடம் சொல்ல முதலில் யோசித்த அவர் கடைசியில் படம் எடுக்க ஒத்துக்கொண்டார். இதனால் எழில் ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் இதை எழில், அமிர்தாவிடம் சொல்ல, அவரும் சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்த சந்தோஷமான விஷயத்தை பாக்யாவிடம் சொல்லி எழில்-அமிர்தா இருவருமே சந்தோஷப்பட்டு இருந்தார்கள். அதற்குப்பின் அமிர்தா, நானும் ரெஸ்டாரண்டுக்கு வரேன் என்று சொல்ல, அவர் ஒத்துக் கொண்டார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டின் சூழ்நிலையை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார் பாக்யா. ஆனால், இனியா ஒத்துக்கொள்ளவில்லை. கடைசியில் டான்ஸ் கிளாஸ்க்கு சேர்த்து விட முடியாது என்று பாக்கியா சொல்வதால் இனியா ரொம்ப வருத்தப்பட்டு, தன்னுடைய அப்பா கோபியிடம் சொன்னார்.

சீரியல் ட்ராக்:
உடனே அவர் வகுப்பில் சேர்த்து விடுவதாக வாக்குறுதி கொடுக்கிறார். இதனால் இனியாவும் ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஆனால், இதைக் கேட்டு ராதிகா, பாக்கியாவை பழிவாங்க தான் இப்படி எல்லாம் செய்கிறாய் என்று கேட்க, ஏதேதோ காரணம் சொல்லி கோபி சமாளிக்கிறார். மறுநாள் ரெஸ்டாரண்டில் கஸ்டமர் சிலர் வந்து சாப்பிடுகிறார்கள். அப்போது ஒரு கஸ்டமர், சாப்பாடு தரமாக இருக்குமா? உங்க ரெஸ்டாரண்டை பற்றி ஏதேதோ கேள்விப்பட்டேன்? என்று சொல்ல, பாக்யா நம்பிக்கை கொடுத்து தரமான சாப்பாடு தான் என்று தன்னை நிரூபிக்க பார்க்கிறார். அவர்களும் ஏற்றுக் கொண்டு அதை சாப்பிடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






