விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, தன்னுடைய மகனின் நிலைமையை நினைத்து வேதனைப்பட்டு ரூமிற்கு சென்று விட்டார். பின் வீட்டிற்கு வந்த கோபி, ஈஸ்வரியிடம் பேச எவ்வளவு முயற்சித்தும் ஈஸ்வரி பேசவில்லை. உடனே பாக்கியா, நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் இனியா, நிதிஷிடம் பேச ரூமிற்கு போனார். உடனே நிதிஷ் அம்மா, நீ அவனை பார்க்க வேண்டாம் என்று தடுத்தார். அதற்கு இனியா, நான் அவருடைய மனைவி. அவரைப் பற்றி எனக்கு தெரிந்து இருக்க வேண்டும். குடித்திருந்தால் எல்லாம் இப்படி செய்ய மாட்டார்கள். அவருக்கு வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறது.

என்னிடம் மறைக்கிறீர்கள் என்று கேட்டார். நிதிஷ் அம்மா, வழக்கம்போல் இனியா மீது தான் பழி போட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த சுதாகர், நாங்கள் எதுவும் மறைக்கவில்லை. தனக்கு பிடித்தவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை மறைத்தால் அவன் இப்படித்தான் நடந்து கொள்வான் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி இனியாவை அங்கிருந்து அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா ஹோட்டலுக்கு வரும் வழியில் கவுன்சிலர் மனைவி மயக்கம் போட்டு கீழே விழுந்திருந்தார். அவருக்கு பாக்கியா உதவி செய்தார்.
பாக்கியலட்சுமி:
இதை அறிந்த கவுன்சிலர், பாக்கியாவின் ஓட்டலுக்கு சென்று மன்னிப்பு கேட்டு நன்றியும் சொன்னார். பாக்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. திருமணம் செய்யும் விஷயமாக கோபி திட்டியதை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். வீட்டிற்கு வந்த கோபியிடமும் ஈஸ்வரி பேசாமல் கோபித்து கொண்டார். இதனால் கோபி எமோஷனாக பேச ஈஸ்வரி மனம் மாறி விட்டார். அந்த சமயம் பார்த்து இனியா வீட்டிற்கு வந்தார். இனியாவின் பிறந்தநாள் என்பதால் கோபி அவருக்கு வைர மோதிரம் கிப்ட் வாங்கி கொடுத்தார். அதேபோல் பாக்கியாவும் இனியாவை அழைத்துக் கொண்டு அவருக்கு பிடித்ததை வாங்கி தந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:
வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். ஆனால், இனியா தன்னுடைய புகுந்த வீட்டில் நடப்பதை பற்றி சொல்லாமல் வேதனையை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டிருந்தார். இருந்தாலுமே பாக்கியா-கோபி இருவருமே இனியா நடவடிக்கையின் மீது சந்தேகப்பட்டார்கள். இன்னொரு பக்கம் ஹோட்டலில் கவுன்சிலர் வழக்கம் போல் சாப்பிட வந்தார். ஆனால், எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் சாப்பிட்டுவிட்டு பணத்தையும் கொடுத்துவிட்டு சென்றார். இது எல்லாம் பார்த்து பாக்கியாவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னொரு பக்கம் கோபி, இனியாவை விசாரித்தார். ஆனால், இனியா ப்ரச்சனை எதுவும் இல்லை. நன்றாகத் தான் இருக்கிறேன் என்று சமாளித்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் சுதாகர் தன்னுடைய மனைவியிடம் நிதிஷின் நிலைமையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு நிதிஷ் அம்மா, எல்லாத்துக்கும் காரணம் இனியா தான் என்று வழக்கம்போல திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து கோபி, இனியா இருவருமே வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது நிதிஷ் அம்மா, நீ வீட்டுக்கு லேட்டா வந்தால் மெசேஜ் போடுவது தானே என்று சொல்கிறார். அதற்கு இனியா, நான் நிதிஷ்க்கு மெசேஜ் போட்டு விட்டேன். அவர்தான் எந்த பதிலும் சொல்லவில்லை என்கிறார். உடனே கோபி, நாளைக்கு இனியா பிறந்தநாள். அதனால் ஷாப்பிங் போயிருந்தோம் என்று சொன்னவுடன் சுதாகர், எங்களுக்கு தெரியும். இனியா பிறந்தநாளுக்காக பார்ட்டி ரெடி பண்ணி இருக்கிறோம். கண்டிப்பாக நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
கோபியும் சந்தோசமாக கிளம்பி விடுகிறார். மறுநாள் காலையில் இனியாவிற்காக ஈஸ்வரி, பாக்கியா இருவருமே கோவிலில் அர்ச்சனை செய்கிறார்கள். பின் ஈஸ்வரி, கோபியின் திருமணத்தைப் பற்றி பேசுகிறார். அதற்கு பாக்கியா, முடியாது. நீங்கள் வேறு ஒரு பெண்ணை பார்த்து கோபிக்கு திருமணம் செய்து வையுங்கள் என்கிறார். இன்னொரு பக்கம் சுதாகர், நிதிஷ், நிதிஷுடைய அம்மா மூவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நிதிஷ் அம்மா, இனியாவை பற்றி திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே சுதாகர், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இனியாவிற்கு வாழ்த்து சொல்ல தான் வேணும். இந்த பார்ட்டியில் நீங்கள் கலந்து கொள்ள தான் வேண்டும் என்று கோபமாக சொல்கிறார். பின் இனியா வந்தவுடன் எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். நிதிஷிக்கு இனியாவின் மீது கோபம் குறையவே இல்லை. இன்னொரு பக்கம் பாக்கியா, கவுன்சிலரை சந்தித்து அவருடைய மனைவியின் உடல்நிலை பற்றி விசாரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






