பாக்கியாவை அழிக்க கோபி செய்த நாரதர் வேலை, போட்டியில் இனியா வெற்றி பெறுவாரா? பாக்கியலட்சுமி

0
467
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி நினைவில் இருந்து மொத்த குடும்பமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. கடந்த வாரம் ராமமூர்த்தியின் திருவுருவப்படத்தை திறக்கும் விழாவில் கோபி, தான் நல்ல அப்பா என்றும், ராமமூர்த்தியை பற்றி திட்டி மோசமாக பேச எல்லோருமே கோபப்பட்டார்கள். பின் எழில் சென்ற புது வீட்டிற்கு பாக்கியா தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொண்டு போய் இருந்தார். அப்போது தன் மகனை பற்றி பெருமையாக பேசி இருந்தார். அதை எல்லாம் கேட்டு எழில் கண் கலங்கி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை அடுத்து எழிலை பார்க்க செழியன் புது வீட்டிற்கு சென்றிருந்தார். அந்த சமயம் பார்த்து கோபி, எழில் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்தார். இன்னொரு பக்கம் பாக்யா வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக பேசி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மறுநாள் கல்லூரிக்கு இனியாவை ஈஸ்வரி அழைத்துப் போனார். அதை பார்த்த கோபி தன்னோட அம்மாவிடம் எவ்வளவோ பேசி மன்னிப்பு கேட்டார். ஆனால், ஈஸ்வரி மனம் மாறாமல் அப்படியே இருந்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

இதனால் கோபப்பட்டு கோபி, நான் மனமுடைந்து சொல்கிறேன், உங்களை ரொம்ப வெறுக்கிறேன் என்று சொன்னவுடன், நான் வெறுப்பதற்கு கூட உன்னை ஒரு ஆளாக நினைக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி கிளம்பி இருந்தார். நேற்று எபிசோடில், வீட்டிற்கு வந்த கோபி, தன் அம்மா சொன்னதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான். அவளை அடையாளம் தெரியாமல் அழிக்க போகிறேன் என்று சொன்னார். உடனே ராதிகா, அறிவுரை சொல்ல கோபி ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் பாக்யா, பம்பரமாக சுற்றி வேலை செய்து கொண்டிருந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

அந்த சமயம் வந்த பழனிச்சாமி, நீங்கள் சமைப்பதற்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்ல, பாக்யா யோசித்தார். பின் இனியா, கல்லூரியில் நடன போட்டி நடைபெறுகிறது. அதனால் இனியா தன் நண்பர்களுடன் சேர்ந்து பெயர் கொடுத்தார். நேற்று எபிசோடில், நடன போட்டி குறித்து இனியா தன்னுடைய அண்ணன் எழில் இடம் சொல்ல, அவர் பாராட்டி வாழ்த்தி இருந்தார். அந்த சமயம் பார்த்து ஈஸ்வரி, இனியாவை கூட்டிக்கொண்டு போக வந்தார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

பின் எழில், ஈஸ்வரி, இனியா மூவருமே ஒரு காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பின் வீட்டில் பாக்கியா, சமையலுக்கு ஒரு ஆளை வேலைக்கு எடுக்கிறேன் என்றவுடன் ஈஸ்வரியும் ஒத்துக் கொண்டார். பின் பாக்கியா கொடுத்த விளம்பரத்தை பார்த்து கோபி தன்னிடம் வேலை செய்யும் நபரை, பாக்யாவிடம் வேலை செய்ய அனுப்புகிறார். இதை அவர் நண்பர் கேட்க, பாக்கியவை பழிவாங்க இதை செய்கிறேன் சென்று சொல்கிறார். உடனே கோபியின் நண்பன், தேவையில்லாத வேலைன்னு சொல்ல, நான் அப்படி தான் செய்வேன், பாக்யாவை அழிப்பேன் என்று ஆக்ரோஷமாக கோபி பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபி சொன்ன நபர் பாக்கியாவின் ரெஸ்டாரண்டிற்கு வந்து வேலை கேட்கிறார். பாக்யாவும் அவரைப்பற்றி விசாரிக்கிறார். ஆனால், அவர் கோபி இடம் வேலை செய்ததை மறைத்து பொய் சொல்கிறார். பின் பாக்கியா அவரை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார். இதை அந்த நபர் போன் பண்ணி சொல்ல, கோபி ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் வீட்டில் கோபி, ராதிகா உடன் ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் இனியா கல்லூரியில் நடனம் போட்டி நடக்கிறது. அதில் இனியா நடனமாடி முடித்தார். ஆனால், ரிசல்ட்டை அப்புறமாக செல்வதாக கிளம்பி விட்டார்கள். இதனால் இனியா பயத்தில் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement