விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, ராதிகாவை ரெஸ்டாரண்டில் சந்தித்து பேசி இருந்தார். அப்போது ஈஸ்வரி, நீ தனியாக இருக்கிறாயா? நான் உன்னை தவறாக புரிந்து கொண்டேன். நீயும் கோபியும் சேர்ந்து வாழ விடாமல் தடுத்துவிட்டேன். கோபி தனியாக ரொம்ப கஷ்டப்படுகிறான். நீ மீண்டும் கோபியுடன் சேர்ந்து வாழுவாயா? என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் ராதிகாவிற்கு கோபம் வந்தது. பின் ராதிகா, நான் என் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறேன்.

இனி திருமணம் நான் செய்ய போவதில்லை. தயவு செய்து இதைப் பற்றி பேசாதீர்கள் என்று சொல்லி விடுவதால் ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்கு பிறகு ராதிகா, கோபிக்கு போன் செய்து வரவைத்தார். பின் ஈஸ்வரி தன்னிடம் சொன்னதை எல்லாத்தையும் கோபியிடம் சொன்னார். உடனே கோபி, ராதிகாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது ஈஸ்வரிடம் கோபி, எதற்காக ராதிகாவை சந்தித்து பேசினீர்கள். நான் உங்களிடம் திருமணம் கேட்டேனா? நீங்கள் தேவையில்லாததை செய்யாதீர்கள் என்று ஈஸ்வரிடம் கோபப்பட்டார். அந்த சமயம் பார்த்து பாக்கியா வந்து விட்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் பாக்கியலட்சுமி ஹோட்டலில் சாப்பிட வந்த கஸ்டமர் எல்லாம் தங்களுக்கு தெரிந்த பாடல்களை பாடி இருந்தார்கள். அந்த சமயம் வந்த கோபி, நானும் பாடுவேன். அதைக் கேட்டு எனக்கும் டிஸ்கவுண்ட் செய்யுங்கள் என்று சொன்னார். பின் கோபி அருமையாக பாடுவதை கேட்டு பாக்கியா அசந்து போய்விட்டார். கோபி, நான் பாடுவேன் என்று உனக்கு இதுவரை தெரியாது. எப்படி இருக்கிறது என் பாட்டு என்று கேட்டார். நன்றாக இருக்கிறது என்று பாக்கியா சொன்னார். அதற்குப்பின் ராதிகாவிடம் ஈஸ்வரி பேசியதை பற்றி கோபி சொன்னார். அதற்கு பாக்கியா, எனக்கு அதைப் பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை. அது உங்கள் விருப்பம் என்று சொல்லி விட்டார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் நிதிஷ் வழக்கம் போல் டிரக்ஸ் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். நிதிஷ் நடவடிக்கைகள் சரி இல்லை. இதனால் பயந்த அவருடைய அப்பா, அம்மா இருவருமே நிதிஷை ரூமிற்கு அழைத்து போனார்கள். இதை பார்த்த இனியா, என்னாச்சு? இவர் ஏன் குடிக்கிறார்? என்றெல்லாம் கேள்வி கேட்டார். உடனே நிதிஷின் அம்மா, இவ்வளவு பிரச்சனைக்கு காரணம் நீதான் என்று வழக்கம்போல இனியாவை தான் திட்டி இருந்தார். பின் சுதாகர், எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசுலாம் என்று சொன்னார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்று வேதனையில் இருந்தார். அப்போது பாக்கியாவிடம் ஈஸ்வரி, நான் ராதிகாவை பார்த்து பேசியது உனக்கு எந்த வருத்தமும் இல்லை தானே என்று கேட்டார். அதற்கு பாக்கியா, எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, தன்னுடைய மகனின் நிலைமையை நினைத்து வேதனைப்பட்டு ரூமிற்கு சென்று விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த கோபி, ஈஸ்வரியிடம் பேச எவ்வளவு முயற்சித்தும் ஈஸ்வரி பேசவில்லை. உடனே பாக்கியா, நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் இனியா, நிதிஷிடம் பேச ரூமிற்கு போகிறார். உடனே நிதிஷ் அம்மா, நீ அவனை பார்க்க வேண்டாம் என்று தடுக்கிறார். அதற்கு இனியா, நான் அவருடைய மனைவி. அவரைப் பற்றி எனக்கு தெரிந்து இருக்க வேண்டும். குடித்திருந்தால் எல்லாம் இப்படி செய்ய மாட்டார்கள். அவருக்கு வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறது.

சீரியல் ட்ராக்:
என்னிடம் மறைக்கிறீர்கள் என்று கேட்கிறார். நிதிஷ் அம்மா ரொம்பவே பயப்படுகிறார். வழக்கம்போல் இனியா மீது தான் பழி போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த சுதாகர், நாங்கள் எதுவும் மறைக்கவில்லை. தனக்கு பிடித்தவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை மறைத்தால் அவனை இப்படித்தான் நடந்து கொள்வான் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி இனியாவை அங்கிருந்து அனுப்பி விடுகிறார். பின் சுதாகர், நிதிஷ் விஷயத்தை இனியாவிடம் ரொம்ப நாள் மறைக்க முடியாது என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியா ஹோட்டலுக்கு வரும் வேலையில் ஒருவர் மயக்கம் போட்டு கீழே விழுந்திருக்கிறார். அவருக்கு பாக்கியா உதவி செய்திருக்கிறார். அவர் கவுன்சிலருக்கு நெருக்கமான உறவினர். இதை அறிந்த கவுன்சிலர், பாக்கியாவின் ஓட்டலுக்கு சென்று மன்னிப்பு கேட்டு நன்றியும் சொல்கிறார். பாக்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.






