விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் கோபி மீது கம்பளைண்ட் கொடுத்ததால் பயங்கர கலவரமே வெடித்தது. பின் போலீஸ் கோபியை கைது செய்து இருந்தார்கள். கோபியின் சுயரூபத்தை தெரிந்தும் செழியன்- இனியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஈஸ்வரியும் பாக்கியாவை தான் திட்டி இருந்தார். ஆனால், பாக்யா தன் முடிவில் இருந்து மாறவில்லை. பின் ஜாமினில் கோபி வெளியே வந்தார். கேசை வாபஸ் வாங்க சொல்லி ஈஸ்வரி, இனியா பிடிவாதமாக இருந்தார்கள். ஆனால், பாக்கியா கேசை வாபஸ் வாங்க முடியாது என்று உறுதியாக இருந்தார்.

இதை அடுத்து பிரஸ்ஸில் நடந்ததை பாக்கியா பேட்டி கொடுக்க, அது சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி இருந்தது. இதனால் கோபிக்கு இன்னும் கோபம் அதிகமாகி பாக்கியலட்சுமி வீட்டிற்கு போய் சண்டை போட்டார். பாக்யாவும் பதிலுக்கு பதில் பேசி இருந்தார். இதையெல்லாம் அக்கம் பக்கத்தினர் எல்லோருமே வேடிக்கை பார்த்து மொபைலிலும் வீடியோ எடுத்து வெளியிட்டார்கள். பின் பாக்கியா- கோபி சண்டை போட்ட வீடியோவை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகி இருந்தார்கள். ஆனால், அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் பாக்கியா தன்னுடைய வேலையை செய்கிறார்.
பாக்கியலட்சுமி:
மேலும், சோசியல் மீடியா முழுவதும் பாக்கியா- கோபி சண்டை வீடியோ வைரலாகி இருந்தது. இதை பார்த்த ராதிகா ஷாக் ஆகி கோபியிடம் சண்டை போட்டார். இன்னொரு பக்கம் கல்லூரியில் அந்த வீடியோவால் இனியாவை எல்லோரும் விசாரித்தார்கள். இதனால் இனியா இதை பற்றி தன்னுடைய அம்மாவிடம் பேசி புலம்பி விட்டு கோபி வீட்டிற்கு போய் ராதிகாவிடம் சண்டை போட்டார். அந்த சமயம் வந்த ஜெனியும் ராதிகாவை திட்டி விட்டு சென்றார். இதனால் ராதிகா ரொம்ப மனம் உடைந்து விட்டார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில் கோபி, வீட்டுக்கு வந்த உடன் இனியா பேசியதை ராதிகா அம்மா சொன்னார். ஆனால், அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின் கோபி, பாக்கியா வீட்டிற்கு சென்று இனியாவை தனியாக அழைத்துக் கொண்டு போகிறார். பின் அங்கு வந்த ராதிகா அம்மா கோபப்பட்டு பேச, ஈஸ்வரியும் பதிலுக்கு பதில் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய அம்மாவிடம் வாழ்க்கையை நினைத்து புலம்பி அழுதார். பின் இனியா, உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து எல்லோருமே கேள்வி கேட்டார்கள் என்று அழுதார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, கோபி இருவருமே பீச்சில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய எபிசோட்:
அப்போது இனியா, உங்கள் இருவர் சண்டையில் எங்களுடைய வாழ்க்கை தான் பாதிக்கப்படுகிறது. நீங்கள் ஏன் அம்மாவை பழிவாங்க இப்படி எல்லாம் செய்தீர்கள்? அம்மா பாவம். நீங்கள் தான் வாழ்க்கை பிடிக்கவில்லை என்று அம்மாவை பாதியிலேயே விட்டுட்டு போனீர்கள். இருந்தாலும், அவர்கள் எங்களுக்காக உழைக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்களுக்கு ஏன் தொந்தரவு கொடுக்கிறீர்கள். தாத்தாவின் கடைசி ஆசையை தான் அம்மா செய்தாங்க. அவர்கள் உங்களை பழிவாங்கவில்லை. அவர் வேலையை தான் செய்கிறார்.

சீரியல் ட்ராக்:
நீங்கள் ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்? உங்களுக்கு பிடித்ததை தான் நீங்கள் செய்கிறீர்கள். அம்மாவை அழிக்கிறேன் என்று எங்களுடைய வாழ்க்கையும் அழிக்கிறீர்கள் என்று ரொம்ப எமோஷனலாக இனியா அழுது பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு கோபி மனம் உடைந்து விட்டார். அந்த சமயம் பார்த்து இனியாவிற்கு பாக்கியா போன் செய்ய, கோபி எடுத்து பேசுகிறார். உடனே பாக்கியா, போனை வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கேஸை வாபஸ் வாங்க சொல்லி கேட்கிறார். ஆனால், பாக்கியா முடியாது என்று உறுதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






