இனியா கேட்ட கேள்வியால் மனம் உடைந்த ஈஸ்வரி, தூண்டிவிடும் கோபி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
284
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி தன் அம்மாவிடம் எவ்வளவோ பேசி மன்னிப்பு கேட்டார். ஆனால், ஈஸ்வரி மனம் மாறாமல் அப்படியே இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான் என்று கோபி கோபப்படுகிறார். இந்த வாரம் இனியா கல்லூரியில் நடந்த நடன போட்டியில் கலந்து கொண்டார். பின் பாக்கியா, சமையலுக்கு ஒரு ஆள் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்தார். இதை பார்த்த கோபி, தன்னிடம் வேலை செய்யும் நபரை, பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வேலை செய்ய அனுப்பி இருந்தார். உடனே அவர் நண்பர் எதற்கு என்று கேட்க, பாக்கியாவை பழிவாங்க இதை செய்கிறேன் சென்று ஆக்ரோஷமாக கோபி பேசி இருந்தார்.

-விளம்பரம்-

பின் அந்த நபர் பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் வேலைக்கு சேர்ந்தார். இதை அறிந்த கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார். மேலும், இனியா தன்னுடைய நடன போட்டிக்காக வீட்டில் பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து ஈஸ்வரி, ஜெனி, பாக்கியா எல்லோருமே கேட்க, ஏதோ காரணத்தை சொல்லி இனியா சமாளித்தார். இன்னொரு பக்கம் கோபி, தன் நண்பனிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாரில் தனியாக செழியன் குடித்துக் கொண்டிருப்பதை கோபி பார்த்துவிட்டு விசாரிக்க, ஆபீஸில் பிரச்சனை என்று சொல்கிறார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

பின் கோபி, செழியனுக்கு ஆறுதல் சொல்லி அவரை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார். செழியன் வந்ததை பார்த்து பாக்கியா சாப்பாடு எடுத்து வைக்க, அவர் வேணாம் என்று மறுத்து எதுவும் பேசாமல் தயங்கி நின்றார். அப்போது பாக்கியாவிற்கு செழியன் குடித்த விஷயம் தெரிந்து கோபப்பட்டு அறிவுரை சொன்னார். ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதற்குப்பின் செழியன் குடித்த விஷயம் தெரிந்து ஜெனி சண்டை போட்டார். மறுநாள் செழியன், தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்க, பாக்கியா கோபப்பட்டார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில் பாக்கியா, எனக்கும் நிறைய பிரச்சனை இருக்கிறது, குடிக்கட்டுமா? என்று கேட்க, எனக்கு தாத்தா, அப்பா,எழில் எல்லோருமே வீட்டை விட்டு போன பிறகு பொறுப்பு அதிகமானதால் டென்ஷனில் இப்படி எல்லாம் செய்துவிட்டேன் என்று சொல்ல, நீ எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள தேவையில்லை.
உன்னுடைய குழந்தை, மனைவியை மட்டும் பாரு. வீட்டு பொறுப்பை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பாக்கியா அறிவுரை சொல்லி அனுப்பி இருந்தார். இன்னொரு பக்கம் கல்லூரியில் நடனப் போட்டியில் இனியா தேர்வாகி விட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இதை வீட்டில் இனியா சொல்ல எல்லோரும் பாராட்டி இருந்தார்கள். ஆனால், டிவியில் வரும் நிகழ்ச்சியில் நடனமாட போகிறேன் என்று இனியா சொன்னவுடன் ஈஸ்வரி வேணாம் என்று சொல்கிறார். இன்றைய எபிசோட்டில், படிப்பு வீணாக போய்விடும். நடனமெல்லாம் வேண்டாம். படிப்பை கவனி என்று ஈஸ்வரி பாக்கியா இருவருமே சொல்கிறார்கள். ஆனால், இனியா அவர்கள் சொன்னதை கேட்கவே இல்லை. பின் தன்னுடைய அப்பாவிடம் நடந்ததை இனியா சொல்ல, இதுதான் சந்தர்ப்பம் என்று கோபி, நீ என்ன வேணாலும் செய். உனக்கு துணையாக இருக்கிறேன் என்று இனியாவை தூண்டிவிடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் வீட்டில் இனியா காணவில்லை என்று தேட, அப்போது தன் அப்பாவுடன் இனியா வ்ருகிறார். இதை பார்த்த ஈஸ்வரி, எதற்கு அவருடன் பேசுகிறாய்? போகிறாய்? என்று கேட்டதற்கு, உங்களுக்கு வேண்டும் என்றால் நான் பேசணும். இல்லையென்றால் பேசக்கூடாதா? என்று ஈஸ்வரியை எதிர்த்து இனியா பேசுகிறார். பின் எதுவுமே பேசாமல் ஈஸ்வரி அமைதியாகி விடுகிறார். உடனே செழியன், அவள் கேட்டதில் என்ன தவறு? அப்பாவிடம் ஏன் பேசக்கூடாது? என்று கேட்க, ஈஸ்வரி மனமடைந்து உள்ளே சென்று விடுகிறார. பாக்யா, கோபப்பட்டு செழியனை திட்டி விடுகிறார். பின் தன் மாமியாரை சமாதானம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement