நடன போட்டியில் இனியா அடுத்த கட்டத்திற்கு செல்வாரா? எதிர்பார்ப்பில் பாக்யா, கோபி-பாக்கியலட்சுமி

0
215
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஈஸ்வரியை பார்த்து ராதிகாவின் அம்மா ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு மனமுடைந்தார் ஈஸ்வரி. இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் பாக்கியா ஆர்டரை கெடுக்க கோபி வைத்த நபர் திட்டம் போட்டார். ஆனால், அவர் எண்ணம் பழிக்கவில்லை. உடனே கோபி, பாக்கியா ரெஸ்டாரண்டை ஒழிக்க திட்டம் போட்டார். இந்த வாரம் ஈஸ்வரியை தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு பாக்கியா அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ஈஸ்வரியை பார்த்து நக்கலாகவும்,ஏளனமாகவும் பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதையெல்லாம் கேட்டு ஈஸ்வரி மனமடைந்து வீட்டுக்கு வந்து விட்டார். உடனே பாக்கியா, அவரை சமாதானம் செய்தார். ஆனால், ஈஸ்வரி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோபப்பட்ட பாக்கியா, ஈஸ்வரியை மோசமாக பேசியவர்களை கடுமையாக திட்டி இருந்தார். அதற்குப்பின் பாக்கியா, ராதிகாவிடம் உங்கள் அம்மாவிற்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை. இனியும் என் மாமியார் விஷயத்தில் அவர்கள் தலையிட்டால் தொலைத்து விடுவேன் என்று கோபமாக திட்டி இருந்தார். உடனே ராதிகா, ஈஸ்வரியை பார்த்து தன் அம்மா பேசியதற்கு மன்னிப்பு கேட்டார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

பின் ஈஸ்வரி செய்த தவறை சுட்டி காட்டி குத்தி பேசி இருந்தார். இதை எல்லாம் கேட்டு ஈஸ்வரி-பாக்கியா கோபப்பட்டார்கள். இன்னொரு பக்கம் கோபி ரெஸ்டாரண்டில் செழியன் பேசி கொண்டு இருந்தார்கள். நேற்று எபிசோட்டில், செழியன் தன் மன கஷ்டங்களை கோபியிடம் சொல்லி புலம்பி குடித்தார். ஆனால், கோபி அதை தடுக்காமல் அவரை என்கரேஜ் செய்தார். நிலை தடுமாறும் அளவிற்கு செழியன் குடித்து விடுவதால் வீட்டில் கொண்டு வந்து கோபி விட்டார்.

நேற்று எபிசோட்:

இதை பார்த்து ஜெனி, ஈஸ்வரி, பாக்யா மூவருமே ஷாக் ஆகி கோபப்பட்டார்கள். அப்போது பாக்கியா, நீங்கள் தான் இதையெல்லாம் அவனுக்கு சொல்லித் தருகிறீர்களா? என்று கேட்க, வீட்டில் நிம்மதி இல்லை என்றால் அப்படித்தான் குடிப்பான். அவன் குடிப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று கோபி சொல்ல, உடனே பாக்கியா, எங்களுக்கும் தான் ஆயிரம் கவலை இருக்கிறது. அதற்காக குடிக்கிறமா? என்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது.

-விளம்பரம்-

சீரியல் ப்ரோமோ:

பின் ஈஸ்வரி, உன் பிள்ளையின் வாழ்க்கையை கெடுக்கிறாயா? என்று திட்டி இருந்தார். ஆனால், கோபி யார் சொல்வதையும் பற்றி கவலை இல்லாமல் அவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், இனியா கல்லூரியில் நடன போட்டி நடக்கிறது. இதை காண கோபி, பாக்யா, எழில் எல்லோருமே வந்திருக்கிறார்கள். இனியா நடனம் ஆடும் போது கோபி எழுந்து நின்று பயங்கரமாக கைதட்டி உற்சாகம் செய்திருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதேபோல் பாக்கியாவும் தன் மகள் நடனம் அடைவதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் இனியா வெற்றி பெறுவாரா ? என்று எழில் இடம் பாக்கியா புலம்புகிறார். பின் போட்டியில் இனியா அடுத்த கட்டத்திற்கு தேர்வாகி இருக்கிறார் என்று சொன்னதை கேட்டு பாக்கியா ரொம்ப சந்தோஷப்படுகிறார். கோபியும் சந்தோஷப்பட்டு இனியாவிடம் பேசுகிறார். இதை பார்த்து எழில், யார் எந்த கிரிடிட் வாங்கினாலும் முன்னாடி வந்து நின்று கொள்வார் என்று கிண்டலாக எழில் பேசுகிறார்

Advertisement