ராதிகாவை பார்த்து கோபத்தில் இனியா கேட்ட நச் கேள்வி – மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி.

0
140
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலின் புதிய புரோமோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள எல்லா பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. அதிலும், கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி வேற லெவலில் எகிறிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் பாக்கியா- கோபிக்கு விவாகரத்து ஆகி விடுகிறது. பின் கோபி அவர் ஆசைப்பட்ட மாதிரி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபியின் மொத்த குடும்பமுமே கோபி மீது கோபத்தில் இருக்கிறது. தற்போது சீரியலில், இனியா பள்ளியில் போனை பார்த்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றோரை அழைத்து வரவேண்டும் இல்லையென்றால், டி சி கொடுத்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். ஆனால், இனியா வீட்டில் சொல்லாமல் தன்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்து பள்ளிக்கு வரவைற்கிறார்.

சீரியலின் கதை:

இதை அறிந்த பாக்யா கோபமாக இனியாவிடம் கேட்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே இனியா செய்தது தவறு என்று அவரை கண்டிக்கிறார்கள். இதனால் இனியா கோபப்பட்டு தன் அப்பா கோபியின் வீட்டிற்கு செல்கிறார். பின் கோபியின் அப்பா ராமமூர்த்தி இனியாவை அங்கே விடக்கூடாது என்று கோபியின் வீட்டிற்க்கே வந்து தங்குகிறார். ஆனால், இது எல்லாம் ராதிகாவுக்கு பிடிக்காமல் கோபி மீது கோபப்படுகிறார். மேலும், ராதிகா சமைத்த சமையலையும் ராமமூர்த்தி கிண்டல் செய்கிறார்.

-விளம்பரம்-

ராதிகா-இனியா பிரச்சனை:

வழக்கம் போல் காலையில் பள்ளி செல்வதற்கு ராதிகா உணவை சமைத்துக் கொடுக்கிறார். அது இனியாவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இதனால் ராதிகாவிற்கும், இனியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை பார்த்த கோபி, நான் இனியாவிடம் பேசிக்கொள்கிறேன் நீ அமைதியாக இரு என்று ராதிகாவை சமாதானப்படுத்துகிறார். இதையெல்லாம் தாத்தா கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்கிறார். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் குறித்த புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், இனியா-மயூ இருவரும் சேர்ந்து ஹோம் ஒர்க் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராதிகா இருவருக்குமே காபி தருகிறார். ஆனால், இனியா காபி குடிக்கவில்லை. இதை பார்த்து ராதிகாவும் கேட்கிறார்.

சீரியலின் புதிய ப்ரோமோ:

அதற்கு இனியா, உங்களுக்கு எதுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார். அந்த சமயம் பார்த்து கோபி வந்தவுடன் என்ன ஆனது? என்று கேட்கிறார். உடனே ராதிகா, நான் காபி ஏன் குடிக்கவில்லை என்று கேட்டதற்கு அவள் திமிராக பேசுகிறாள் என்று சொல்கிறார். இனிய, நான் எதற்கு உங்களிடம் சொல்ல வேண்டும். எனக்கு உங்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்காக நீங்கள் என்னிடம் சண்டை போடுகிறீர்களா? எனக்கு இப்பவே தெரிந்தாக வேண்டும். நான் முக்கியமா? இல்லை அவர்கள் முக்கியமா என்று கேட்கிறார்? என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கோபி முழிக்கிறார். இப்படி விறுவிறுப்பான கட்டத்துடன் கூடிய ப்ரோமோ வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் இந்த காட்சியை காண்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள்.

Advertisement