விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நிதிஷ் அம்மா, என் மகனை அடித்ததற்காக பாக்கியா குடும்பத்தின் மீது கேஸ் போட சொன்னார். உடனே பாக்கியா, என் மகளை நிதிஷ் ரொம்பவே தொந்தரவு செய்து கொண்டிருந்தார். அதனால் தான் கோபத்தில் அடித்திருப்பார்கள். மற்றபடி என் மகன்கள் அடிதடிக்கு போக மாட்டார்கள் என்றார். செழியன், இனிமேல் நிதீஷ் உடன் இனியா சேர்ந்து வாழ மாட்டாள் என்றார். அதற்கு திமிராக நிதிஷ் அம்மா பேசி இருந்தார். பாக்கியா, இவர்கள் எங்கள் குடும்பத்தை ஏமாற்றி கல்யாணம் செய்து விட்டார்கள் என்றார்.

அதற்கு சுதாகர், சொத்துக்காக இவர்கள்தான் தன் மகள் காதலித்த விஷயத்தை மறைத்து என் மகன் போதைப்பொருளுக்கு அடிமையானவன் என்று தெரிந்தும் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்று பொய் மேல் பொய் சொன்னார்கள். பின் இரண்டு தரப்பிலும் வாக்குவாதம் அதிகமானது. கடைசியில் உயர் அதிகாரி, 2 குடும்பத்தின் மீதுமே கேஸ் போட்டால் தேவையில்லாத பிரச்சினை தான். இனிமேல் நிதிஷ் இனியாவை தொந்தரவு செய்ய மாட்டான். நீங்களுமே நிதிஷ் விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று இரண்டு ரெண்டு குடும்பத்திடம் கையெழுத்து வாங்கி விட்டார்கள். பின் வீட்டிற்கு வந்த பாக்கியா போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை சொன்னார்கள். இதை எல்லாம் கேட்டு இனியா ரொம்பவே ஷாக் ஆனார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் சுதாகர் வீட்டிற்கு வந்த இனியா, எதற்காக என் குடும்பத்தை இன்னும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நிதிஷ், நிதிஷனுடைய அம்மாவும் தேவையில்லாமல் இனியாவை பேசி இருந்தார்கள். கோபத்தில் கொந்தளித்து இனியா, இனிமேல் என்னையும், என்னுடைய குடும்பத்தை பற்றியும் ஏதாவது பேசினீர்கள் என்றால் நான் சும்மா விடமாட்டேன். கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவேன் என்றார். அதற்கு நிதிஷ், எங்களுக்கு எப்படியும் வெளிவர தெரியும் என்று தெனாவட்டாக பேசி இருந்தார். அதற்கு இனியா, நான் ரிப்போர்ட்டர். அதை வைத்து உங்களுடைய குடும்பமானத்தை வாங்குகிறேன் என்றெல்லாம் சவால் விட்டார்.

நேற்று எபிசோட்:
இதனால் சுதாகருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த இனியா, கோபி இடம் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சுதாகர், தனக்கு தெரிந்த நபரை வரவைத்து பாக்கியாவின் ஓட்டலில் ஆர்டர் எடுத்து பிரச்சனையில் சிக்க வைக்க ஐடியா கொடுத்தார். இதனால் அந்த நபருமே பாக்கியாவின் ஓட்டலுக்கு சென்று சமையல் ஆர்டரை கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் அட்வான்ஸ் தொகை 50,000 கொடுத்தார். இதையெல்லாம் அங்கிருந்த கவுன்சிலருமே பார்த்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுதாகர் வீட்டில் எல்லோருமே இனியாவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ் வருகிறது. அதை பார்த்தவுடன் சுதாகர் குடும்பத்தில் உள்ள எல்லாருமே ஷாக் ஆகிறார்கள். நிதிஷும் அவருடைய அம்மாவும் இனியாவை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். உடனே சுதாகர், இதை நாம் பொறுமையாக தான் கையாள வேண்டும். சொத்தில் பங்கு கேட்பாள் என்றெல்லாம் குருட்டுத்தனமாக யோசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் இனியா தன்னுடைய அண்ணன்களுடன் சேர்ந்து சமைத்துக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து பாக்கியா, கோபி, ஈஸ்வரி மூவருமே சந்தோஷப்படுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் பாக்கியா, தனக்கு ஆர்டர் கொடுத்த நபருக்கு போன் செய்து பணம் கேட்கிறார். அந்த நபருமே ஏதேதோ சொல்லி சமாளித்து விடுகிறார். கடைசியில் இனியாவை பார்க்க சுதாகர் அவருடைய மனைவியையுமே ஆபீஸ்க்கு வந்திருக்கிறார்கள். அப்போது சுதாகர், எதற்காக இந்த அவசர முடிவு. நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார். அதற்கு இனியா, இனிமேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. எங்களுடைய குடும்பத்தையும் நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். என் அம்மாவின் ரெண்டு ரெஸ்டாரன்ட், என் கல்யாணத்திற்கு ஆன செலவு என எல்லாத்தையும் வட்டி முதலுமாக வாங்காமல் விடமாட்டேன். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் சந்திக்கலாம் என்று கிளம்பி விடுகிறார். இதனால் சுதாகருக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.






